நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று ஐப்பசி 14
திங்கட்கிழமை
திருக்கயிலாயம்,
காளத்தி, தில்லை,
பவானி, தஞ்சை,
திருச்செந்தூர் - என
சஷ்டிப் பதிவுகளின்
நிறைவாக
மாமதுரைத் திருப்புகழ்
தானதன தத்த தானதன தத்த
தானதன தத்த ... தனதான
ஆனைமுக வற்கு நேரிளைய பத்த
ஆறுமுக வித்த ... கமரேசா
ஆதியர னுக்கும் வேதமுதல் வற்கும்
ஆரணமு ரைத்த ... குருநாதா
தானவர் குலத்தை வாள்கொடு துணித்த
சால்சதுர் மிகுத்த ... திறல்வீரா
தாளிணைக ளுற்று மேவியப தத்தில்
வாழ்வொடு சிறக்க ... அருள்வாயே
வானெழு புவிக்கு மாலுமய னுக்கும்
யாவரொரு வர்க்கு ... மறியாத
மாமதுரை சொக்கர் மாதுமை களிக்க
மாமயில் நடத்து ... முருகோனே
தேனெழு புனத்தில் மான்விழி குறத்தி
சேரமரு வுற்ற ... திரள்தோளா
தேவர்கள் கருத்தில் மேவிய பயத்தை
வேல்கொடு தணித்த ... பெருமாளே..
-: ஸ்ரீ அருணகிரிநாதர் :-
நன்றி: கௌமாரம்
யானைமுக விநாயக மூர்த்திக்கு நேர் இளையவனாகத் தோன்றிய அன்பனே,
ஆறுமுகமான ஞான வித்தகனே, தேவர்களின் இறைவனே,
ஆதியில் சிவபெருமானுக்கும்
வேத முதல்வன் பிரமனுக்கும் வேத மந்திரத்தை உபதேசித்த குருநாதனே,
அசுரர் குலத்தை வாளினால் வெட்டி வீழ்த்திய
பராக்கிரமனே,
உன்னிரு திருவடிகளிலும் மனம் பொருந்தி நல்வாழ்வுடன் நான் சிறந்து விளங்குதற்கு அருள் புரிவாயாக..
வானும் புவி ஏழும் திருமாலும் பிரம்மனும்
வேறு எவரும் அறிய முடியாத
மாமதுரைத் தலத்தில்
சொக்கேசப் பெருமானும், உமையாம்பிகையும் மகிழும்படி அழகிய மயிலின் மீதமர்ந்து அதனை நடத்தும் முருகனே,
தேன் ததும்பும் தினைப் புனத்தில் மான்விழிக் குறத்தி வள்ளி நாயகி உன்னைச் சேரும்படி அவளை அணைத்திட்ட திண் தோள்களை உடையவனே,
தேவர்களது மனதில் சூரனைப் பற்றித் தோன்றியிருந்த அச்சத்தை வேலாயுதத்தால் அழித்திட்ட பெருமாளே..
***
மயில் வாகனனே சரணம் சரணம்
மாநகர் மதுரை அழகா சரணம்
சோம சுந்தர சுதனே சரணம்
சுந்தரி மீனாள் குமரா சரணம்
குஞ்சரி தொழுதிடும் குகனே சரணம்
வள்ளி அணைந்திடும் வாழ்வே சரணம்
அன்பர் வணங்கிடும் அமுதே சரணம்
அருள்வாய் அருள்வாய் சரணம் சரணம்..
***
முருகா சரணம்... முருகா சரணம்... முருகா சரணம்...
பதிலளிநீக்குமுருகா சரணம்... முருகா சரணம்...
நீக்குமகிழ்ச்சி. நன்றி ஸ்ரீராம்..
மாமதுரை திருப்புகழ் படித்து முருகனை தரிசனம் செய்தேன்.
பதிலளிநீக்குமுருகா சரணம் அருள்வாய் அருள்வாய் சரணம்!
முருகா சரணம்... முருகா சரணம்...
நீக்குமகிழ்ச்சி.. நன்றி..
அழகான தரிசனம். மற்றப் பதிவுகளையும் இப்போவே முடிஞ்சால் பார்த்துடணும். :))))
பதிலளிநீக்குவெகு நாட்களுக்குப் பிறகு தங்கள் வருகை..
நீக்குமுருகா சரணம்... முருகா சரணம்...
மகிழ்ச்சி.. நன்றியக்கா..
முருகா சரணம்...
பதிலளிநீக்குமுருகா சரணம்... முருகா சரணம்...
நீக்குமகிழ்ச்சி.. நன்றி ஜி..
அருமை..
பதிலளிநீக்கு//அதை நடத்தும்// எதை? கோவிலையா?
பதிவு அருமை... //நடத்தும்// எதை?
பதிலளிநீக்குமயிலை நடத்துகின்றான் முருகன்..
நீக்குஏன்?.. அதற்கு நடக்கத் தெரியாதா!..
தெரியும்.. அது அதன் வழியில் நடக்கும். அப்படிப்பட்ட அதைத். தன் வழியில் நடத்துகின்றான் தலைவன்..
முருகா சரணம்... முருகா சரணம்...
மகிழ்ச்சி.. நன்றி..
முருகா சரணம்...
பதிலளிநீக்குமுருகா சரணம்... முருகா சரணம்...
நீக்குமகிழ்ச்சி.. நன்றி தனபாலன்..
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை.
/திருக்கயிலாயம்,
காளத்தி, தில்லை,
பவானி, தஞ்சை,
திருச்செந்தூர் - என
சஷ்டிப் பதிவுகளின்
நிறைவாக
மாமதுரைத் திருப்புகழ்/
திருப்புகழ் நன்றாக உள்ளது. அதன் விளக்கத்தையும் மனதுக்கு நிறைவாக படித்தேன். வள்ளி தெய்வானை சமேதராக இருக்கும் ஸ்ரீ கந்தபெருமானை பக்தியுடன் வணங்கிக் கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
//வள்ளி தெய்வானை சமேதராக இருக்கும் ஸ்ரீ கந்தபெருமானை பக்தியுடன் வணங்கிக் கொண்டேன்.//
நீக்குமுருகா சரணம்... முருகா சரணம்...
மகிழ்ச்சி.. நன்றி..