நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி 18
புதன்கிழமை
விஜயதசமி நன்னாள்
இன்றைய பதிவில்
நவராத்திரியின் பஞ்சமி நாளன்று
(வெள்ளிக்கிழமை)
தஞ்சையை அடுத்துள்ள
அரசூர் ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பிகை உடனாகிய
ஸ்ரீ அகஸ்தீஸ்வர ஸ்வாமி திருக்கோயிலில்
நடைபெற்ற
ஸ்ரீ மஹா சண்டி ஹோமத்தின் காட்சிகள்..
வலக்கை ஓங்கிய வஞ்சி |
சிங்க முகம் தெரிகின்றதா!.. |
தீப்பிழம்பில் ஸ்ரீமாரியம்மன் |
ஸ்ரீ காளி சந்நிதி |
யாக அக்னியில் அம்பாள் ஆடி நின்றதை சில நொடிகள் கண்டேன்..
எனக்கு மட்டும் தான் அப்படித் தெரிந்ததா!.. நீங்கள் தான் சொல்ல வேண்டும்..
யாக பூஜையில் மந்திரார்ப்பணம் செய்து கொண்டிருந்த சிவாச்சாரியார்கள் வழக்கம் போல பூர்ணாஹூதிக்கு முன் ஸ்ரீ மாரியம்மனைப் பாடி அழைத்தனர்.
பெண்களில் சிலர் ஆவேசம் வந்து ஆடினர்..
பூர்ணாஹூதிக்குப் பின் கடங்கள் புறப்பட்டு வலம் வந்தன..
துர்கா சந்நிதியில் அபிஷேகத்தைப் படம் எடுக்க இயலவில்லை..
மூலஸ்தானத்தில் எடுத்த படத்தை வீட்டில் வந்து பார்த்தபோது தெளிவில்லாமல் இருந்தது..
தஞ்சை திருவையாறு சாலையில் அம்மன் பேட்டையை அடுத்து அரசூர்.. வெட்டாற்றின் கரையில் இருந்து ஒரு கி.மீ..
சுற்றிலும் வயல் வெளிகள்.. நடுவே சின்னஞ்சிறு கிராமம்.
இந்தக் கோயில் மேற்கு நோக்கியது.. கிழக்கு வாசலும் உள்ளது.. எனினும், தெற்கு வாசல் தான் பிரதானம்..
ராஜ கோபுரங்கள் கொடி மரம் இல்லை.. ஆனாலும் அருள் அதிர்வுகள் கோயிலுக்குள்..
ஒற்றைத் திருச்சுற்று.. மா, வேம்பு, அரசு, வில்வம் - என, திருச்சுற்றில் மரங்கள்..
பழமையான தலம்..
மராட்டியர் காலத்திய செங்கல் திருப்பணி..
வடக்கில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத முருகன் சந்நிதி.. தெற்கில் ஸ்ரீ பிள்ளையார் சந்நிதி.. வடக்கு நோக்கி ஸ்ரீ காளி.. முன் மண்டபத்தில் ஸ்ரீ மாரியம்மன்..
மேற்கு முகமாக அருள்பாலிக்கும் ஸ்ரீ அகஸ்தீஸ்வரர்.. தெற்கு முகமாக ஸ்ரீ ஆனந்த வல்லி அம்மன்..
மேற்கு முகமாக அருள் பாலிக்கும் கோயில்களைச் சுற்றி வந்தால் - இழந்த செல்வங்களை மீண்டும் பெறலாம்.. கடன்கள் தீரும்.. நோய் நொடிகள், பகை விலகும்.. யம பயம் அகலும் - என்று சொல்லப்பட்டிருக்கின்றது..
தஞ்சை (தஞ்சபுரீஸ்வரர்), அரசூர், கண்டியூர், திரு ஆலம்பொழில், - என நான்கு திருக்கோயில்கள்..
ஐந்தாவதாக இன்னும் ஒரு கோயில் அருகில். அறியப்படாமல் இருக்கின்றது..
கோயிலுக்குள்ளேயே ஸ்ரீ காளி சந்நிதியும் இருப்பதால் இன்னமும் விசேஷம்.. ஆனால் வடக்கு முகம். அந்தப் பக்கமாக வந்து தான் தரிசிக்க வேண்டும்..
அங்கே சென்று தரிசிப்பதற்கு இயலவில்லை..
**
நன்றி : தினமலர்
நோய் நொடி விலகவும்
கடன்கள் தீர்ந்து செல்வம் சேரவும் பகை விலகவும் யமபயம் தீர்த்து அம்பாள் அனுக்ரஹம் செய்யவும்
விஜயதசமி நாளில்
வேண்டிக் கொள்வோம்..
**
ஓம் காத்யாயனாய வித்மஹே
கன்யா குமாரீச தீமஹி
தந்நோ துர்கே ப்ரசோதயாத்
ஓம் மஹாலக்ஷ்ம்யை ச வித்மஹே
விஷ்ணு பத்ந்யை ச தீமஹி
தந்நோ லக்ஷ்மி ப்ரசோதயாத்
ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே
விரிஞ்சி பத்ந்யை ச தீமஹி
தந்நோ வாணி: ப்ரசோதயாத்
ஓம் சக்தி ஓம்
***
அக்னியில் அன்னை என் கண்களுக்கும் தெரிந்து அருள்பாலிக்கிறார். சுவாரஸ்யமான தகவல்களுடன் படங்கள் அழகு.
பதிலளிநீக்குபடங்கள் சிறப்பாக இருக்கிறது. தங்களுக்கும் விஜயதசமி வாழ்த்துகள் ஜி
பதிலளிநீக்குபடங்கள் அருமை... அனைத்தும் நல்ல நன்மையாக அமையட்டும்...
பதிலளிநீக்குஅக்னியில் நீங்கள் சொன்னது போல சிங்கம் , அம்மன் காட்சி தருகிறாள்.
பதிலளிநீக்குஅருமையான பதிவு.
காணொளி அருமை.
கடைசி படம் அழகாய் இருக்கிறது. பழைய படம் அற்புதம்.
விஜயதசமி வாழ்த்துகள்.
இன்னொருவர் அனுப்பிய படத்தின் யாக அக்னியிலும் அம்பாளின் நடனத்திருக்கோலம் தெரிந்தது. வாட்சப்பில் வந்திருந்தது.
பதிலளிநீக்குஅக்கினியில் அம்மன் எல்லாம் அவளருளே . வணங்குகிறோம்.
பதிலளிநீக்கு