வெள்ளி, அக்டோபர் 28, 2022

சஷ்டி 4


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று ஐப்பசி 11
வெள்ளிக்கிழமை
சஷ்டியின் நான்காம் நாள்


திருக்கூடல் (பவானி)
திருப்புகழ்

தனதான தானத் தனதான
தனதான தானத் ... தனதான

கலைமேவு ஞானப் பிரகாசக்
கடலாடி ஆசைக் ... கடலேறிப்

பலமாய வாதிற் பிறழாதே
பதிஞான வாழ்வைத் ... தருவாயே

மலைமேவு மாயக் குறமாதின்
மனமேவு வாலக் ... குமரேசா

சிலைவேட சேவற் கொடியோனே
திருவாணி கூடற் ... பெருமாளே..
-: ஸ்ரீ அருணகிரிநாதர் :-
நன்றி : கௌமாரம்


சகலவிதமான  நற்கலைகளுடன்
பேரொளியாகத் திகழும் ஞானக் கடலிலே குளித்து,

மண்ணாசை பெண்ணாசை பொன்னாசை எனும் மூன்று நிலைகளையும் கடந்து,

பலவிதமான சமய வாதங்களில் மூழ்கி மாறுபட்ட கருத்துகளுடன் கலங்கிக் கிடக்காமல்,

எம்பெருமானின் சிவ ஞான வாழ்வினை எனக்குத் தந்தருள்வாயாக.

மலையில் வாழ்கின்ற குறவர் தம் குலப் பெண்ணாகிய வள்ளியம்மையின் மனதிலே மருவிடும்
இளங்குமரனே,

அந்த வள்ளி நாயகிக்காக வில்லைக் கையில் ஏந்தியபடி வேடனாக வந்தவனே,

சேவற் கொடியினை  உடையவனே,

மகாலக்ஷ்மியும் சரஸ்வதியும் கூடுகின்ற கூடற்பதியாகிய பவானியில் உறைகின்ற பெருமாளே!..

படங்களுக்கு நன்றி
முருகனடியார்கள் Fb


ஸ்ரீ செல்வமுத்துக் குமர ஸ்வாமி


சிக்கல் ஸ்ரீ சிங்காரவேலன்
**
சரவணபவனே சரணம் சரணம்
சண்முக நாதா சரணம் சரணம்
***

12 கருத்துகள்:

  1. திருப்புகழை பாடப்பாட வாய் மணக்கும்...எதிர்ப்புகளை முருகா உன் வேல் தடுக்கும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. முருகா சரணம்
    வாழ்க வையகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முருகா சரணம்
      வாழ்க வளமுடன்..

      மகிழ்ச்சி.. நன்றி ஜி..

      நீக்கு
  3. திருப்புகழை பாடி சரவணபவனை வேண்டிக் கொண்டேன். செல்வமுத்துக்குமரன் தரிசனம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. பதில்கள்
    1. முருகா சரணம்...

      அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி தனபாலன்..

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    இன்றைய சஷ்டி பதிவும் அருமையாக உள்ளது.முருகனின் அழகு மிக்க படங்களை கண் குளிர தரிசித்துக் கொண்டேன்.

    திருப்புகழைப் பாடி சரவணனை பக்தியுடன் வணங்கி வழிபட்டு கொண்டேன். பாடலின் விளக்கங்களும் அருமை. முருகனின் அருள் பார்வை அனைவரையும் காத்தருளட்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //முருகனின் அருள் பார்வை அனைவரையும் காத்தருளட்டும்.//

      அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. நல்ல விளக்கங்களுடன் கூடிய திருப்புகழ். பாடிப் பயன் அடைவோம். வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா!..

      மகிழ்ச்சி.. நன்றியக்கா..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..