நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
சென்ற மாதம் மஹாளய அமாவாசையை முன்னிட்டு திருஆரூர் தரிசனத்தின் நிறைவுப் பகுதி..
திருக்கோயின் பின்புறத்தில் கமலாயத் திருக்குளம்..
கோயில் ஐவேலி குளம் ஐவேலி ஓடையும் ஐவேலி..
செங்கழுநீர் ஓடை என்பது இன்று ஆக்கிரமிப்புக்குளாகி விட்டது..
கோயிலும் குளமும் தான் மிச்சம்..
திருக்கோயில் எந்த அளவோ அதே பரப்பளவு திருக்குளமும்..
அதாவது,
வேலி எனில் அந்நாளைய நில அளவை முறை.. இப்போது ஒரு வேலிக்கு 6 ஏக்கர் 17 சென்ட் என்கின்றது விக்கி..
அப்படியானால், ஐந்து வேலிக்கு மொத்தப் பரப்பளவு முப்பது ஏக்கர் எண்பத்தைந்து சென்ட் ..
சுற்றிலும் மதிலும் மண்டபங்களும் சிறு சிறு சந்நிதிகளும் அமைந்துள்ளன..
சரி.. மிச்சமுள்ள அவையெல்லாம் நன்றாகப் பராமரிக்கப்படுகின்றனவா?.. - என்று கேள்வி கேட்டால் அதற்கான பதில் நம்மிடையே இல்லை
திருமுதுகுன்றத்தில் ஈசனிடம் பெற்ற பொற்காசுகளை அங்கே மணி முத்தாற்றில் இட்டு இங்கே கமலாலய குளத்தில் இருந்து எடுத்துக் கொண்டார் சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள்..
சுந்தரருக்குக் கிடைத்த பொன்னை உரசிப் பார்த்து அதன் தரத்தைக் கூறிய விநாயகர் வடகிழக்கு மூலையில் இருக்கின்றார்..
சுந்தரருக்கு மாற்று உரைத்துக் கூறியதால்
மாற்றுரைத்த விநாயகர்..
குளத்தின் கீழ்கரையில் தான் தர்ப்பணங்கள் செய்யப்படுகின்றன..
படிக்கட்டுகள் மிகவும் குறுகலானவை.. மூட்டு வலி முழங்கால் பாதிப்பு உடைய எனக்கு அங்கே குளிக்க இயலாமல் ஆனதில் மிகவும் வருத்தம்.. தங்கியிருந்த விடுதியில் குளித்து விட்டு வந்து தான் தர்ப்பணங்கள் செய்தேன்..
அன்றைய தினம் இளந்தூறலாக இருந்ததால் வெளியில் படங்கள் எடுக்க இயலவில்லை.. தவிரவும் பேத்திக்கு உடல் நலனும் சரியில்லை.. எனவே உடன் திரும்பி விட்டோம்..
அப்படியான சூழலில் எடுக்கப்பட்ட படங்கள் இன்றைய பதிவில்..
ஸ்ரீ ஆஞ்சநேயர் |
கமலாலயத் திருக்குள
மண்டபத்தில் அடியார்கள் ஈசனை
வழிபடும் சிற்பமும்
கல்வெட்டும் கண்டேன்.
முழுவதும் படிக்க இயலவில்லை..
மேலே உள்ள சித்திரம் மண்டபத்தின்
விதானத்தில் இருக்கின்து..
தண்ணீருக்குள் ஒருவர் கிடக்கின்றார்.. முகம் மட்டும் வெளியே தெரிகின்றது.. கரையில் சிலர் பரபரப்பின்றி
சாந்த ஸ்வரூபியாக நிற்கின்றனர்..
கீழுள்ள படமும் அப்படியே...
இதன் பொருள் ஒன்றும் புரியவில்லை..
கீழிருக்கும் படங்கள
தங்கியிருந்த விடுதி வாசலில்..
கள்ளநெஞ்ச வஞ்சகக் கருத்தை விட்டு அருத்தியோடு
உள்ளம் ஒன்றி உள்குவார் உளத்துளான் உகந்த ஊர்
துள்ளிவாளை பாய்வயற் சுரும்புலாவு நெய்தல்வாய்
அள்ளல் நாரை ஆரல்வாருஅந்தண் ஆரூர் என்பதே.. 2/101/6
-: திருஞானசம்பந்தர் :-
எந்த மாதவஞ் செய்தனை நெஞ்சமே
பந்தம் வீடவை ஆய பராபரன்
அந்தமில் புகழ் ஆரூர் அரனெறி
சிந்தை யுள்ளுஞ் சிரத்துளுந் தங்கவே.. 5/7/2
-: திருநாவுக்கரசர் :-
குருகு பாயக் கொழுங் கரும்புகள் நெரிந்த சாறு
அருகு பாயும்வயல் அந்தண் ஆரூரரைப்
பருகு மாறும் பணிந்து ஏத்துமாறும் நினைந்து
உருகு மாறும் இவை உணர்த்தவல் லீர்களே..7/37/1
-: சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள் :-
ஆரூரா தியாகேசா..
தியாகேசா ஆரூரா!..
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***
பார்க்கப் பார்க்காத திகட்டாத, இருக்க இருக்க அலுக்காத பிரம்மாண்ட கோவில். கமலாலய குளத்தில் படகில் நின்றபடி என் அம்மாவும் அப்பாவும் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மனக்கண்ணில் தெரிகின்றன.எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இவ்வூரில்... ஈஸா... தியாகேசா... நின்னருள் எங்கும் பரவட்டும்.
பதிலளிநீக்கு// பார்க்கப் பார்க்காத திகட்டாத, இருக்க இருக்க அலுக்காத பிரம்மாண்ட கோவில். //
நீக்குஉண்மை.. உண்மை..
ஆரூரா.. தியாகேசா..
மகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்..
அருமையான படங்கள். நன்றாகவே வந்திருக்கின்றன. என்னனு புரியாத படத்தைத் திருப்பிப் பார்க்க முயன்றால் முடியலை. மத்தியானமாப் பார்க்கிறேன். பேத்திக்கு இப்போ உடம்பு பரவாயில்லையா? நல்லபடி ஆரோக்கியமாக இருக்கப் பிரார்த்தனைகள். உங்கள் மூட்டு வலி மற்றப் பிரச்னைகளும் விரைவில் சரியாகப் பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குமண்டபத்தின் விதானத்தில் வரையப்பட்டிருந்த ஓவியத்தை நேர்ப்படுத்தி விட்டேன்... இப்போது தங்களுக்கு எளிதாக இருக்கும்..
நீக்குபேத்தி இப்போது நலமே.. அபுதாபிக்குத் திரும்பி விட்டார்கள்..
முழங்காலில் வலி போகின்றது.. வருகின்றது..
போகின்றது.. வருகின்றது..
இறைவன் அருளுடன் இயங்கிக் கொண்டு இருக்கின்றேன்..
தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றியக்கா.
எல்லா ஊர்களிலும் கோயில் இடங்கள் ஆக்கிரமிப்பு நடக்கிறது.
பதிலளிநீக்குஇறைபயம் எவருக்கும் இல்லை.
ஊழ் வினை உறுத்து வந்து ஊட்டும்..
நீக்குஅவ்வளவு தான்..
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி ஜி..
வர்ஷிதாவை கேட்டதாக சொல்லவும்.
நீக்குநன்று மகனுக்கு திருமணம் கூடி வர எமது பிரார்த்தனைகளும்கூடி...
தங்கள் அன்பினுக்கு மகிழ்ச்சி.. நன்றி..
நீக்குபெயர்த்தி என்றால் வர்ஷிதாவா ? இல்லை மகன் வழி பெயர்த்தியா ?
பதிலளிநீக்குநலம் பெற வேண்டுகிறேன்.
பெயர்த்தி வர்ஷிதா தான்... மகனுக்கு இன்னும் திருமணம் கூடி வரவில்லை..
நீக்குதங்கள் அன்பிற்கு நன்றி..
அந்தப் படம் வித்தியாசமாக உள்ளது...
பதிலளிநீக்குஓம் நம சிவாய...
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.. நன்றி தனபாலன்..
நீக்குமேல் விதான த்தில் வரந்து இருக்கும் ஓவியத்தின் மேல் எழுத்துக்கள் தெரிகிறததே! அதை பெரிது செய்து பாருங்கள்.ஏதாவது கதை தெரிந்து கொள்ள முடியும்.
பதிலளிநீக்குபெரிய கோவில் புராண வரலாறு நிறைய இருக்கும்.
பேத்திக்கு உடல் நலம் சரியாகி இருக்கும் என்று நினைக்கிறேன்.
படங்கள் எல்லாம் அருமையாக இருக்கிறது.
இருக்கின்றது..
நீக்குஅதில் கூட்டத்தினர் திகைத்து நிற்கும் போது நம்பியாரூரர் தீர்த்தத்தில் மூழ்கி வேதியரைக் கரையேற்றுதல்.. என்று இருக்கின்றது... அது என்ன சம்பவம் என்று தெரிய வில்லை..
முழங்கால் வலி.. நடக்கவே சிரமமான நேரத்தில் தலையைச் சாய்த்து அண்ணாந்து நோக்கி நிலை கொள்ள இயலவில்லை..
மறுபடியும் மண்டபத்துக்குச் சென்று கவனித்தால் தான் விளங்கும்..
அன்றைக்கு படுத்துக் கொண்டு இந்தச் சித்திரங்களை வரைந்தவர்கள் எத்தனை திறமைசாலிகள்!...
அவர்களைப் போற்றுவோம்..
தங்கள் வருகையும் அன்பின் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
இந்தத் தலத்துக்கு நான் சென்றதே இல்லை......... மூட்டுவலி என்றெல்லாம் எழுதியிருக்கும்போது, வரும் காலம் மனதில் வந்து பயமுறுத்துகிறது.
பதிலளிநீக்குஒருமுறை திரு ஆரூருக்குச் சென்று வாருங்கள்..
நீக்குஆறேழு ஆண்டுகளாகவே உணவுக் கட்டுபாட்டில் இருப்பதால் இந்த அளவுக்கு...
தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
ஆரூர் சென்றிருக்கிறேன் அண்ணா நான் சென்றிருந்த போது குளம் தண்ணீர் இல்லாமல்தான் இருந்ததாக நினைவு. உங்கள் படங்களில் தண்ணீருடன் இருப்பது பார்க்க அஅழகாக இருக்கிறது.
பதிலளிநீக்குசெங்கழுநீர் என்ற சொல்லைப் பார்த்ததும் உடன் நினைவுக்கு வருவது "செங்கழுநீர் வாய் திறந்த ஆம்பல்வாய் கூம்பின காண்' திருப்பாவைப் பாடலின் வரிதான்..செங்கழுநீர் ஓடை இருந்ததா!! எவ்வளவு அழகாக இருந்திருக்கும் இல்லையா..
படங்கள் எல்லாம் அருமை
கீதா
இங்கே திருவாரூரில் செங்கழுநீரோடை கபளீகரம் ஆகி விட்டதாகச் சொல்கின்றர்..
நீக்குஎன்னவோ நடக்கின்றது...
தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..
மேல்விதானத்துச் சித்திரம் - அப்பெண்மணியின் கணவர் நீரில் சிக்கிக் கொள்கிறார் அவர் முறையிடுகிறார் அடுத்த படத்தில் அவர் காப்பாற்றப்படுகிறார் என்பது வரை தெரிகிறது...அதில் ஏதோ எழுதியிருப்பது தெரிகிறது தெளிவாகத் தெரியவில்லை...
பதிலளிநீக்குகீதா
நீக்குஓரளவுக்கு ஒவியம் புரிகின்றது.. ஆனால் விளக்கம்?..
தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி...
பெயர்த்தி இப்போது நலமடைந்திருப்பாள் என்று நினைக்கிறேன் துரை அண்ணா.
பதிலளிநீக்குமூட்டுவலி - முழங்காலை வனித்துக் கொள்ளவும் துரை அண்ணா
கீதா
தங்கியிருந்த இடத்துப் புகைப்படங்கள் மிக அழகு!! இடமே மிக அழகாக இருக்கிறது
பதிலளிநீக்குகீதா
தங்கள் வருகையும் அன்பின் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
நீக்குகுளம் கோவில் படங்கள் கண்டு தரிசித்தோம்.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
நீக்கு