வெள்ளி, செப்டம்பர் 30, 2022

அதிருங் கழல்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி 
வெள்ளிக்கிழமை


குன்று தோறும் ஆடும் 
குமரனைக் குறித்த திருப்புகழ்

குன்றுதோறாடல் என்பது
பழமுதிர்ச்சோலை என்று 
சில கருத்துகள் இருந்தாலும்
குன்றுதோறாடல் என்பதைத் 
தலமாகக் கொண்டு 
நான்கு திருப்பாடல்களை 
அருளிச் செய்துள்ளார் 
அருணகிரிநாதர்.. 

அவற்றில் இருந்து 
இனியதொரு திருப்புகழ்..


தனனந் தனன தந்த ... தனதான
தனனந் தனன தந்த ... தனதான

அதிருங் கழல்ப ணிந்து ... னடியேனுன்
அபயம் புகுவ தென்று ... நிலைகாண

இதயந் தனிலி ருந்து ... க்ருபையாகி
இடர்சங் கைகள்க லங்க ... அருள்வாயே

எதிரங் கொருவ ரின்றி ... நடமாடும்
இறைவன் தனது பங்கி ... லுமைபாலா

பதியெங் கிலுமி ருந்து ... விளையாடிப்
பலகுன் றிலும மர்ந்த ... பெருமாளே..
(நன்றி : கௌமாரம்)


அதிர்ந்து ஒலிக்கின்ற வீரக் கழல்களை உடைய உனது திருவடிகளை வணங்குகின்ற அடியனாகிய யான்

நீயே அடைக்கலம் என்று - புகுந்த நிலையில் -
மெய்ஞான நிலையை நான் காணுமாறு,

எனது நெஞ்சத்தில் கருணையுடன் வீற்றிருந்து  (எனது) துன்பங்களும் துயரங்களும் ஐயங்களும் கலங்கி ஒழிவதற்கு அருள் புரிவாயாக..

தமக்கு சமமாக எவருமில்லாமல்
ஆனந்தத் தாண்டவம் ஆடுகின்ற ஈசன் எம்பெருமானுடைய இடப் பாகத்தில் விளங்கும் உமாதேவியின் திருக் குமரனே..

திருத்தலங்களில் எல்லாம்
திருவிளையாடல்கள் புரிந்து, குன்றுகள் தோறும் குடி கொண்டு அருள் புரியும் பெருமாளே..

கந்தா போற்றி..
கடம்பா போற்றி..
கார்த்திகை மைந்தா
போற்றி..  போற்றி!..
***

6 கருத்துகள்:

  1. குன்றத்தில் கோயில் கொள்ளும் நம்பியை வாணங்குவோம்.  நலம் யாவும் பெறுவோம்.  முருகா சரணம்.

    பதிலளிநீக்கு
  2. கந்தா போற்றி...
    கடம்பா போற்றி...

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. படங்கள் அருமை. வெள்ளிக்கிழமை முருகன் தரிசனம் பெற்றுக் கொண்டேன். அவன் திருப்புகழ் பாடி துதித்தேன். அதற்காக பொருள் விளக்கமும் நன்றாக உள்ளது. குன்றிருக்கும் இடமெல்லாம் அமர்ந்திருக்கும் முருகப்பெருமான் அனைவரையும் நலமுடன் காக்க வேண்டிக் கொள்வோம். முருகா சரணம்.. .
    பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. திருப்புகழை பாடி முருகனை வணங்கி கொண்டேன்.
    குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் குடி இருக்கும் இடம் அல்லவா!
    முருகா சரணம் ! குமரா சரணம்!

    பதிலளிநீக்கு
  5. கந்தா போற்றி குமார போற்றி....... அவனருளை வேண்டுவோம்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..