நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
தனியார் பள்ளிக்கூடத்தின் முதன்மைக் கட்டிடம்..
அதன் இரண்டாவது தளத்தில் தலைமை ஆசிரியையின் அறை.. பக்கத்திலேயே சற்றே பெரிதாக காத்திருப்புக் கூடம்..
அங்கொரு நாற்காலியில் அமர்ந்திருந்தாள் காமாட்சி..
பதினொரு மணிக்கு வந்து பார்க்கும்படி குறுஞ்செய்தி அனுப்பி இருந்தார்கள் - பள்ளி அலுவலகத்தில் இருந்து..
காலையிலேயே சமையலை முடித்து கணவருக்கும் மகளுக்கும் கொடுத்து அனுப்பி விட்டதால் வேலை ஒன்றும் இல்லை.. வாசல் கதவை இழுத்துப் பூட்டி விட்டு பத்தரைக்கெல்லாம் வந்து விட்டாள்..
காமாட்சியின் வருகை அந்தப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் சுகந்திக்குக் கூடத் தெரியாது.. சுகந்தி அவளது மகள்..
தெரிந்திருந்தால் இடைவேளையில் ஒடி வந்திருப்பாள்.. ஆனாலும், வகுப்புக்குத் திரும்பும் நேரத்தில் பக்கத்துத் தெரு பெண் - சுகந்தியுடன் படிப்பவள் - புன்னகையுடன் பார்த்துக் கொண்டே சென்றாள்..
அப்படியே அவள் சுகந்தியிடம் சொல்லியிருந்தாலும் பாடவேளையின் போது வகுப்புக்கு வெளியே யாரையும் அனுமதிக்க மாட்டார்கள்.. அந்த அளவுக்கு Strict..
பள்ளி வளாகத்தில் இறுக்கம்..
காற்றோட்டம் இல்லாதபடிக்கு இறுக்கம்.. மரங்கள் இருந்தும் இலைகள் சலசலக்க வில்லை..
இரண்டு கட்டிடங்களைக் கடந்து அந்தப் பக்கத்தில் வேறொரு கட்டுமானம் ஒன்று.. அதுகூட சத்தமின்றித் தான் எழும்பிக் கொண்டிருந்தது..
அலுப்புடன் கைக் கடிகாரத்தை நோக்கினாள்..
11:35 என்று ஒளிப் புள்ளிகள் துள்ளிக் கொண்டிருந்தன..
கல்யாணத்தின் போது - அப்பா ஆசையுடன் வாங்கிக் கொடுத்த hmt ஓய்வு பெற்றுக் கொண்டது..
85 ல் பிறந்தவள் ஆனதால் பிடிவாதமாக நின்று இந்த டிஜிட்டலை வாங்கிக் கையில் கட்டிக் கொண்டாள்..
மனதிற்குள் ஏதோ பொறி தட்டியது.. வேண்டும் என்றே காக்க வைக்கின்றார்களோ என்று!..
அப்போது விருட்டென உள்ளே நுழைந்த பணிப்பெண்,
" நீங்க தானே சுகந்தியோட
mother?.. madam is waiting for you!.."
- சொல்லி விட்டு திரும்பிப் பார்க்காமல் நடந்தாள்.
அவளைத் தொடர்ந்த காமாட்சி - தலைமை ஆசிரியையின் அறை வாசலில் ஒரு நொடி தயங்கினாள்..
" yes!.."
கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்ததும் குளிர்ந்த காற்று முகத்தில் சிலீர்.. - என, அறைந்தது..
" வணக்கம்.. மா!.. "
" mm.. "
அங்கே,
நான்கு மாணவியர், இவளை எதிர்பார்த்துக் கொண்டு தான் நிற்கின்றார்கள் - என்பது அடுத்து வந்த சில விநாடிகளில் புரிந்தது..
" listion them.. "
தலைமை ஆசிரியை
கையைக் காட்டியதும் அந்த நான்கு பேரும் ஆங்கிலத்தில் தூள் பரப்பி விட்டார்கள்..
எல்லாம் சுகந்தியின் மீதான குற்றச்சாட்டுகள்..
அதெல்லாம் உண்மையே..
ஆனாலும், காமாட்சியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை..
சட்டென வார்த்தைகள் வந்து விடாதபடிக்கு தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொண்டு நின்றாள்..
அலையடித்து ஓய்ந்த மாதிரி இருந்தது..
" she is brilliant.. but this is not good.. last warning.. "
என்றபடி புறங்கையினால - வெளியே போகும்படி - உத்தரவு கிடைத்தது..
வணக்கம் ஒன்றை மிச்சப்படுத்திக் கொண்ட காமாட்சி, அங்கிருந்து வெளியேறி வீட்டுக்கு வந்து சேர்ந்தாள்.. சோர்வுடன் படுக்கையில் விழுந்தாள்.. நடந்ததை நினைக்க நினைக்க அவமானமாக இருந்தது..
அப்படியே தூங்கிப் போனாள்..
மாலையில் வீடு திரும்பிய சுகந்தியின் முகமெல்லாம் மலர்ச்சி..
" என்னம்மா.. ரொம்பவும் Shoot பண்ணிட்டாங்களா!.. "
மகளின் முக மலர்ச்சியில் மயங்கியிருந்த காமாட்சி மெதுவாகக் கேட்டாள்..
" யாரோ எதையோ தின்னுட்டுப் போகட்டும்.. நமக்கு என்ன..ம்மா?.. "
" மா!.. என்னை புரிஞ்சுக்கம்மா.. That pizza is not fresh and has already expired.. Micro oven .. ல வச்சி heat பண்ணிக் கொடுக்கறாங்க.. பால்..ல கூட தண்ணிய ஊத்தி Sales பண்றாங்க.. Hot drinks எல்லாமே not in good taste.. Soft drinks also very bad.. Not in proper chilling.. அது.. ல இருக்குற Chemical contamination பத்தி சொன்னேன்.. Service gloves கூட போடுறது இல்லை.. அவங்க கிட்ட சொன்னா, Care பண்றதே இல்லை!.. "
" எதையும் விரும்பி சாப்டுறவங்க கிட்ட - அது சரியில்லை.. இது சரியில்லை.. ந்னு சொன்னா அதை ஒத்துக்கவே மாட்டாங்க.. அதுவும் சாப்பிடுற நேரத்துல குறை சொன்னா கோபம் தான் வரும்... "
" நான் மீனாக்கிட்ட தானே பேசிக்கிட்டு இருந்தேன்!.. "
" அது கூட தப்பு தான்.. உனக்குத் தான் pizza பிடிக்காதே!.. அப்புறம் எதுக்கு அங்கே?.. "
" For a cup of coffee!.. "
School canteen.. அவங்களோடது.. அங்கே ஒரு கப் காஃபி முப்பது ரூபாய் இல்லையா!..
" Yes, too much price.. but quality?... zero!.."
முகத்தில் அதிருப்தியைக் காட்டினாள் சுகந்தி..
கல்லூரியில் Food safety - Preparation and contamination எனும் சிறப்புப் பிரிவைப் படித்திருந்தாள் காமாட்சி.. அதையெல்லாம் மகளுக்கு சொல்லிக் கொடுக்க - அதன் விளைவு தான் இன்று நடந்தது..
இதற்கு முன்னரே இப்படி ஒரு தடவை என்றாலும் இத்தனை கடுமையாய் இருக்கவில்லை..
சுகந்தி சிரித்தாள்..
அவளை உற்று நோக்கிய காமாட்சி மெதுவாகக் கேட்டாள்..
" Annual முடிஞ்சதும் வேற School போய்டலாமா.. டா.. செல்லம்!.. "
" ஓ!.. "
சுகந்தி துள்ளிக் குதித்தாள்..
" ஹைய்யா!.. பூ வச்சிக்கலாம்.. ஜிமிக்கி போட்டுக்கலாம்.. மெஹந்தி வச்சிக்கலாம்..
நெத்தியில பொட்டு கூட வச்சிக்கலாம்!.. "
தாயைக் கட்டிப் பிடித்து முத்தமிட்டாள்..
அங்கே ஆனந்தச் சிறகுகள் விரித்துக் கொண்டன..
ஃஃஃ
ஆஹா! இப்போது நடப்பவை அப்படியே! தொடரட்டும் இப்படியான நிகழ்வுகள். நிச்சயமாய் வேறே பள்ளிக்குத் தான் போகணும்.
பதிலளிநீக்குஎல்லா தனியார் பள்ளிகளிலும் இதுதான் நிலைமை.
பதிலளிநீக்குநல்லது...
பதிலளிநீக்குகதை களம் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குஆனந்தமாக சிறகுகள் விரித்து பறக்கட்டும் சுகந்தி.
தனியார் பள்ளிகள் என்ற போர்வையில் தேச விரோதிகள்
பதிலளிநீக்குகதை நன்றாக இருக்கிறது துரை அண்ணா.
பதிலளிநீக்குகீதா
தனியார் பள்ளிகளின் நிலை நல்லதோர் கதையாக வடிவம் பெற்றுள்ளது.
பதிலளிநீக்கு