உலகம்
சிவமயம்
நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
மயிலாடுதுறைக்கு அருகிலுள்ளது தற்காலத்தில்
தலைஞாயிறு என்று வழங்கப்படும்
திருக்கருப்பறியலூர் திருத்தலம்..
இத்தலத்தில் ஸ்வாமியை வணங்குபவர்க்கு மீண்டும் கரு அடையச் செய்யும் வினைகள் பறிக்கப் படுகின்றன என்பதாக ஐதீகம் (கர்ம நாசன புரி)..
அம்பிகை
கோல்வளை நாயகி..
விசித்ர வாலாம்பிகா
தலவிருட்சம்
பிஞ்சிலம்
தீர்த்தம்
சூர்ய புஷ்கரணி
பிஞ்சிலம் என்றும் கொகுடி முல்லை என்றும் கூறப்படும் முல்லைக் கொடியின் கீழ் இறைவன் தோன்றியருளிய தலம்..
ஞானசம்பந்தப் பெருமானும்
சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளும் திருப்பதிகம் பாடியுள்ளனர்.. திருநாவுக்கரசர் தம் திருவாக்கில் தலம் இடம் பெற்றுள்ளது..
திருக்கோயிலுக்கு கடந்த (22/8) திங்களன்று காலையில் திருக்குட முழுக்கு சிறப்புடன் நடைபெற்றது..
இக்கோயிலில் சீர்காழியைப் போல கட்டு மலைக் கோயிலில், ஸ்ரீ பிரம்ம புரீஸ்வரரும் ஸ்ரீ திருநிலை நாயகியும் மலைக் கோயிலில் ஸ்ரீ சட்டைநாத ஸ்வாமியும் விளங்குகின்றனர்..
எனவே, இத்தலத்திற்கு மேலைக்காழி எனவும் பெயர்..
ஒரு சமயம் திருக்கயிலாய மாமலையைத் தரிசனம் செய்வதற்கு விரும்பிய தேவேந்திரன் ஐராவதத்தின் மீதேறிச் சென்றான்..
கூடவே ஜெய கோஷங்களும் வாத்தியங்களின் முழக்கமும் சுற்றுப்புரத்தை அதிர அடித்தன..
மாமலையை நெருங்கிய போது வழக்கத்துக்கு மாறாக புதிதாக ஒரு காவல் பூதம் வழியை அடைத்துக் கொண்டு நின்றிருந்தது..
" வழி விடு!.. " - என்றான் கோபத்துடன்..
அந்தப் பூதம் அலட்சியமாக இருந்தது..
" நான் யார் தெரியுமா!.. " - ஆத்திரத்துடன் கையில் இருந்த வஜ்ராயுதத்தை பூதத்தின் மீது வீசினான்..
வெற்றியைத் தவிர வேறொன்றையும் தந்தறியாத
வஜ்ராயுதம் புகையாகிப் போனது...
அத்துடன் காவல் பூதமும் தன்னுருவம் கரந்தது..
அதிர்ச்சியடைந்த இந்திரன் ஐராவதத்தில் இருந்து இறங்கித் தேடினான்..
எதிரில் வந்த நந்தியம்பெருமான் சிரித்தார்..
" கயிலாயம் வருவதற்கு ஐராவதமா?.. இன்னும் உனது ஆணவம் அழியவில்லையே!.. காவல் பூதமாக வந்தவர் எம்பெருமான்!.. - என்றார்..
சப்தநாடிகளும் ஒடுங்கிப் போயின..
இறைவனையா எதிர்த்தோம்!..
தன்னுடைய குற்றத்தினைப் பொறுத்தருளும்படி
அங்கேயே விழுந்து அழுதான்.. தொழுதான்..
இறைவன் அவனை மன்னித்து அருளினார் - என்பதாகத் தலவரலாறு..
குற்றம் பொறுத்த ஈஸ்வரர் என்றால் எல்லாக் குற்றங்களையும் செய்து விட்டு இங்கே வரலாம் என்று இல்லை..
ஊர் மக்களைக் கொள்ளையிட்டவனும் அவனுக்குத் துணை நின்றவனும்
கல்வியின் பெயரால் காமவலை விரித்தவனும்
வணிகத்தின் பெயரால் பாழ்பட்ட உணவு களைக் கொடுத்தவனும்
இன்ன பிற கொடுங் குற்றங்களைச் செய்தவனும் இங்கே வருதற்கு ஆமோ!..
அவர்கள் சென்று சேரவேண்டிய இடமே வேறு..
திரிகரணங்களும் ஐம்புலன்களும் ஆறு வகைக் குண பேதங்களுக்கு ஆட்பட்டு நாள்தோறும் எத்தனையோ குற்றங்களைச் செய்து கொண்டிருக்கின்றன..
சந்தர்ப்ப சூழ்நிலைகளால் பிழை செய்து விட்டு மனம் வருந்தி திருந்துகின்றவர்களது குற்றங்கள் மட்டுமே இத்தலத்தில் பொறுத்தருளப்படும் என்று கொள்க..
மயிலாடுதுறை மணல்மேடு வழித் தடத்தில் 12 கி.மீ. தொலைவிலுள்ள பட்டவர்த்தி எனும் கிராமத்தில் இறங்கி அங்கிருந்து 2 கி.மீ. தூரத்தில் தலைஞாயிறு கோயில்...
திருக்குட முழுக்கு வைபவத்தின் படங்கள் கிடைக்கவில்லை.. ஆயினும் அதைத் தொடர்ந்த சந்நிதி தரிசனம் மற்றும் திருக்கல்யாண நிகழ்வின் படங்கள் இந்தப் பதிவில்.
படங்களை வழங்கிய சிவமதி, அகில் - ஆகியோருக்கு நெஞ்சார்ந்த நன்றி..
ஸ்ரீ சண்டேசர் தேவியுடன் |
நீற்றாரு மேனியராய் நினைவார்தம்
உள்ளத்தே நிறைந்து தோன்றும்
காற்றானைத் தீயானைக் கதிரானை
மதியானைக் கருப்ப றியலூர்க்
கூற்றானை கூற்றுதைத்துக் கோல்வளையாள் அவளோடுங் கொகுடிக் கோயில்
ஏற்றானை மனத்தினால் நினைந்தபோது
அவர்நமக்கு இனிய வாறே.. 7/30/2
-: சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் :-
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***
ஊர் பெயரும் புதிது. இறைவன்- இறைவி பெயரும் புதிது. அவர் சிறப்பைச் சொல்லும் பெயர். சிறப்பான படங்கள். இந்திரன் கதை படித்தேன். இப்படி புத்தி இல்லாத இந்திரனை ஏன் தேவர் தலைவனாக தொடர வைத்திருந்தார்கள்?!
பதிலளிநீக்குஆஹா ஸ்ரீராம் நான் அடிக்கடி நினைத்து மற்றும் கேட்கும் கேள்வியை நீங்களும் தொடர்ந்து, நானும் இப்பதிவில் நினைத்து பார்த்தா நீங்களும் அதே கேள்வியை கேட்க....=!!!!
நீக்குஅதான் இந்திரன் பற்றிய கேள்விதான்!!!
கீதா
இந்திரனாக வருவதற்கு ஆயிரம் யாகங்கள் செய்து புண்ணியத்தை சேர்த்திருக்க வேண்டும்..
நீக்குஇதைப் பற்றி பிறகு சொல்கின்றேன்..
தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி சகோ..
@ ஸ்ரீராம்
நீக்குஇந்திரனை ஏன் தேவர் தலைவனாக தொடர வைத்திருந்தார்கள்?!
இந்திரனைப் பற்றி பிறகு சொல்கின்றேன்..
தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி ஸ்ரீராம்..
இன்னொரு சிந்தனை வந்ததது. அப்பா தன் பிள்ளைகளை குழந்தையாகப் பார்க்கிறவர். குழந்தைகள் தவறு செய்தால் பொறுத்துப் போகக்கூடியவர். தன்னை ஆர்ப்பாட்டமாக பார்க்க வரும் இந்திரனை தண்டிப்பாரா? பார்த்து புன்னகைப்பரா? இதன் மூலம் தலைக்கனம் கூடாது.. பதவி வரும்போது பணிவு வேண்டும் என்ற உபதேசம் கிடைக்கிறது.
பதிலளிநீக்குஎனக்கு இன்னொன்றும் தோன்றியது, எப்போதும் தோன்றக் கூடியது....அதுவும் இக்கதையில் ரொம்பவே தெளிவாக....
நீக்குஎல்லோர் மனதிலும் இறைவன் இருக்கிறார்...யாரையும் துச்சமாகக் கருதக் கூடாது. அவரவர்க்கு அளிக்க வேண்டிய மரியாதையைக் கொடுக்க வேண்டும் எனும் பாடம். இறைவன் எந்த ரூபத்திலும் இருக்கலாமே!
கீதா
இதன் மூலம் தலைக்கனம் கூடாது.. பதவி வரும்போது பணிவு வேண்டும் என்ற உபதேசம் கிடைக்கிறது..
நீக்குதங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி ஸ்ரீராம்..
நல்லது...
பதிலளிநீக்குஓம் நம சிவாய...
மகிழ்ச்சி.. நன்றி தனபாலன்..
நீக்குபல வருடம் கழித்து உங்கள் பதிவில் தரிசனம் செய்து கொண்டேன்.
பதிலளிநீக்குபடங்கள், வரலாறு எல்லாம் அருமை.
அறிந்தும், அறியாமலும் செய்த குற்றங்களை பொறுத்து அருள வேண்டும் இறைவா.
அறிந்தும், அறியாமலும் செய்த குற்றங்களை பொறுத்து அருள வேண்டும் இறைவா..
நீக்குதங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..
வரலாறும் தெரிந்து ததரிசனமும் பெற்றோம். குற்றம் களைய அவன் பாதம் பணிகிறோம்.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி
நீக்குஊர் பெயரே வித்தியாசமாகவும் பொருள் பொதிந்ததாகவும் இருக்கிறதே. இதுவரை கேள்விப்படாத பெயர். அம்மை அப்பன் அழகு!
பதிலளிநீக்குகீதா
தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி சகோ..
நீக்குபடங்கள் எல்லாமே ரொம்ப நல்லாருக்கு துரை அண்ணா
பதிலளிநீக்குகீதா
படங்கள் நான் எடுத்ததல்ல.. Fb ல் வந்தவை..
நீக்குதங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி சகோ..
இறைவன் பற்றியும் தல வரலாறும் புதியதாய் அறிகிறேன் துரை அண்ணா. சிறப்பாக இருக்கிறது
பதிலளிநீக்குகீதா
மகிழ்ச்சி.. நன்றி சகோ..
நீக்குதலைஞாயிறு அடிக்கடி கேட்ட பெயர் தான். மற்றொரு பெயர் தெரியாதது. கோயில் குறித்த விபரங்களும் மேலைக்காழி என்னும் பெயரும் முற்றிலும் புதிது.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குகுற்றம் பொறுத்த நாதர் அனைவரையும் குறைவின்றி காக்கட்டும்..
தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றியக்கா..