வியாழன், ஆகஸ்ட் 11, 2022

வீரக்கனல் 1

      

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
நன்றி : விக்கி

இப்பதிவு
விக்கிபீடியாவில் இருந்தும் அது மேற்கோளாகக் காட்டிய தினமலர் கட்டுரையில் இருந்தும் தொகுக்கப்பட்டது..


வெள்ளையர்களை 
எதிர்த்து முதன் முதலாகப் போர் வாளை உயர்த்தி 
இந்நாட்டின் விடுதலைக்கு வித்திட்ட வீரன் அழகுமுத்து கோன்..
***
வணிகர் என்ற போர்வையில் நாடு பிடிப்பதற்காக வந்த வெள்ளையர்களை எதிர்த்து முதன் முதலாகப் போர் வாளை உயர்த்தி வீர மரணம் எய்தியவர் தான் வீர அழகுமுத்துக் கோன்.

மதுரையிலிருந்த அழகுமுத்து கோன் தனது உற்றார், உறவினர்களுடன் புறப்பட்டு செமப்புதுார் வந்தார். அங்கு மாப்பிள்ளை வல்லேரு நாயக்கர் உதவியால் எட்டையபுரம் சென்றார். எட்டையபுரத்தை ஆண்ட மன்னர் ஜெகவீரராம  எட்டப்ப நாயக்கர், அழகுமுத்து கோனை எட்டைய புரத்தின் முக்கிய தளபதியாக நியமித்தார்.

சேர்வைக்காரன்' என்ற
சிறப்புப்பட்டமும் வழங்கப்பட்டது..

அத்துடன்,
அழகுமுத்து கோனும் அவருடன் வந்த வீரர்களும் குடியேறுவதற்கு வசதியாக எட்டையபுரம் மன்னரால் -
கட்டாளங்குளம் மற்றும் அதை சுற்றியுள்ள 500 பொன் வருமானம் உள்ள சில கிராமங்களும் வழங்கப்பட்டன..

கட்டாளங்குளம் கிராமம் கோவில்பட்டி - திருநெல்வேலி நெடுஞ்சாலையில்  வலது புறமாக 5 கி.மீ., தொலைவில்  உள்ளது..

இந்நிலையில்,
ஆர்க்காடு ஆட்சிப் போரில் சந்தா சாகிப் தோற்கடிக்கப் பட்டதில் மகிழ்ச்சியடைந்த ஆர்க்காடு நவாப் முகம்மது அலி மதுரை நெல்லை வட்டாரங்களில் வரி வசூல் செய்து கொள்ளும் உரிமையை வெள்ளையனுக்கு விட்டுக் கொடுத்தான்.. 

அதன்படி,
எட்டையபுரத்திலும் அதனை சுற்றியுள்ள பாளையங்களில் வரி வசூலிக்க, ஆங்கிலேயத் தளபதி அலெக்சாண்டர் கெரோன் என்பவனும் யூசுப் கான் என்பவனும் வந்தனர்..

யூசுப் கான் இம்மண்ணில் பிறந்தவன். இவனது பழைய பெயர் மருதநாயகம்..

பாளையங்களுக்குள் வந்து கும்பினிக் காரர்கள் வரி வசூல் செய்வதை எதிர்த்ததுடன் மற்ற பாளையக்காரர்களையும் வரி கொடுப்பதில் இருந்து தடுத்து நிறுத்தினார் வீர அழகுமுத்துக்கோன்.. 

இதனால் கோபமுற்ற ஆங்கிலேயர் யூசுப் கானை படைகளுடன் அனுப்பி வைத்தனர். வீர அழகு முத்துக் கோனுக்கும்,  யூசுப்கானுக்கும் (மருதநாயகம்) பெத்த நாயக்கனூர் கோட்டையில் போர் நடந்தது. 

வீர அழகுமுத்துக் கோனின் வலது காலை துப்பாக்கியின் தோட்டாக்கள் துளைத்தன. தொடர்ந்து மூன்று மணி நேரம் நடைபெற்ற போரின் முடிவில்  வீர அழகுமுத்துக் கோனும் அவருடைய தளபதிகள் ஆறு பேரும் 248  வீரர்களும் சிறை பிடிக்கப்பட்டனர்.. 

அனைவரும் இரும்பு சங்கிலியால் பிணைக்கப்பட்டு நடுக்காட்டூர் என்னும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு - அங்கு பீரங்கி முன் நிறுத்தப்பட்டு வரி செலுத்துமாறு வற்புறுத்தப்பட்டனர். 

மன்னிப்பு கேட்டுக் கொண்டு வரி செலுத்த ஒப்புக் கொண்டால் உயிர் மிஞ்சும் - என்ற ஆசையும் காட்டப்பட்டது .. 

வீர அழகுமுத்துக் கோன் மன்னிப்பு கேட்க மறுத்து விட்டார்..

கும்பினி படையை எதிர்த்ததற்காக பிடிபட்ட வீரர்களின் வலது கைகளை வெட்டித் தள்ளினான் யூசுப் கான்..

வெள்ளையர்களை எதிர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு,

பீரங்கி முன் நின்ற வீர அழகுமுத்துக்கோனும் அவருடைய ஆறு தளபதிகளும் பீரங்கியால் பிளக்கப்பட்டு வீர மரணம் அடைந்தனர்..

இந்த வரலாற்றினை எட்டையபுரம் சமஸ்தானத்தில் வேலை செய்த சுவாமி தீட்சிதர் என்பவரால் எழுதப்பட்ட வம்சமணி தீபிகை கூறுகின்றது.. 

பீரங்கி முன் நின்றிருந்த  நேரத்திலும் நெஞ்சுரத்தில் இருந்து வழுவாத மாவீரன் வீர அழகுமுத்துக் கோனின் தியாகத்தைப் போற்றி வணங்குவோம்..

1759 ல் வீர அழகுமுத்து கோன் நடத்திய இந்தப்  போர் தான் வெள்ளையரை எதிர்த்து நடத்தப் பெற்ற முதல் விடுதலைப் போராகும்..
***

பீரங்கியால் சுடப்பட்டு சிதறிய அழகுமுத்துக் கோனின் உடல் - நார் பெட்டி ஒன்றில் சேகரிக்கப் பெற்று, எட்டையபுரம் அருகில் உள்ள சோழபுரம் கண்மாய் கரையில் எரியூட்டப்பட்டது.

அந்த இடத்தில்  அக்கால வழக்கப்படி
வீர மரணம் அடைந்தவர்களுக்கு
நடுகல் ஒன்று நடப்பட்டது. ஆண்டு தோறும் ஆவணி முதல் தேதி கட்டாளங்குளம் மக்கள், அழகுமுத்துக் கோனுக்கு அஞ்சலி செலுத்தி வருவதாக செய்திகள் கூறுகின்றன..
***

அந்நியரிடம் இருந்து
பாரதத்திருநாடு
விடுதலை அடைந்த
எழுபத்தைந்தாவது
வருடக் கொண்டாட்டம்
நிகழும் இவ்வேளையில்
மாவீரர்களை நினைவு கூர்வோம்..

ஜெய்ஹிந்த்
வாழ்க பாரதம்
வளரக  தமிழகம்
***

11 கருத்துகள்:

  1. இவரது வரலாறு ஓரளவு படித்து இருக்கிறேன்.

    தங்களது பதிவில் கூடுதல் தகவல்கள் தந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி ஜி..

      நீக்கு
  2. படித்திருக்கிறேன்.  ஆனால் உலகநாயகன் மருதநாயகத்தில் எதைக் கண்டாரோ, படமாய் எடுக்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யாருக்குத் தெரியும்?..

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி
      ஸ்ரீராம்..

      நீக்கு
  3. 2016ம் ஆண்டு காட்டாங்க்குளத்தில் உள்ள வீரர் முத்து கோன் அவர்கள் நினைவு இடத்திற்கு போய் வந்து பதிவு போட்டு இருக்கிறேன்.
    சுதந்திரப் போராட்ட வீரர் - வீரன் அழகு முத்துக் கோன் என்று பதிவு போட்டு இருக்கிறேன்.
    பழைய நினைவுகள் வந்து போனது.

    https://mathysblog.blogspot.com/2016/07/blog-post_12.html

    சிறப்பான தகவலுடன். சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துக் கோன் வீர வரலாறு அருமை
    வீர வணக்கம் அழகு முத்துகோனுக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அழகு முத்துக்கோன் நினைவிடத்துக்கு சென்றிருக்கின்றீர்கள் என்பதே மகிழ்ச்சி..

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  4. வீரர் முத்து கோன் பற்றிய பதிவு அருமை. கொஞ்சம் தெரியும். இந்த மருதநாயகம் தானே மையக்காரர் எடுக்க விழைந்த படம்! ஒரு வேளை மருதநாயகம் கடைசியில் ஆங்கிலேயரை எதிர்த்ததால் அவர்களாலேயே தூக்கிலடப்பட்டதால் அப்படி ஒரு ரீதியில் படம் எடுக்க நினைத்தாரோ? எடுத்திருந்தால் என்ன சொல்லியிருந்திருப்பார் என்று ஆர்வம் தோன்றுகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருக்கும்.. இருக்கும்..

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி சகோ..

      நீக்கு
  5. சிறப்பான தகவல்கள். பாளையக்காரர் பற்றி வாசிக்க நேர்ந்த போது அறிந்திருக்கிறேன்.

    மருதநாயகம் என்பதைப் பார்த்ததும் கமலஹாசன் எடுக்கவிருந்த மருதநாயகம் படம் நினைவுக்கு வந்தது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி துளசிதரன்..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..