சனி, ஜூலை 30, 2022

தீர்த்தவாரி

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

நேற்று முன்தினம் வியாழன்று ஆடி அமாவாசை.. தஞ்சை மஹா மயானத்துக்குத் தெற்கில் வடவாற்றின் கரையில் உள்ள ஸ்ரீ வேதவல்லி உடனாகிய ஸ்ரீ சிதானந்தீஸ்வர ஸ்வாமி கோயிலின் வாசலில் அமாவாசை தர்ப்பணம் செய்துவிட்டு வீட்டுக்குத் திரும்பி சிறிது ஓய்வுக்குப் பின் திருப்பூந்துருத்திக்குப் புறப்பட்டோம்.. அங்கே கோயிலில் உள்ள காசி தீர்த்தக் கிணற்றில் கங்காதேவி எழுந்தருளிய நாள்.. 

அங்கு ஸ்ரீ சௌந்தர்ய நாயகியுடன் ஸ்ரீ புஷ்பவனேஸ்வரர் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி.. வைபவம் நிறைவு பெற்றதும் பெரிய அளவில் அன்பர்களுக்கு சிறப்பான அன்னம் பாலிப்பு.. மதியம் 1:30 அளவில் இல்லத்திற்குத் திரும்பினோம்..

திரு ஐயாற்றில்  அப்பர் ஸ்வாமிகளுக்கு திருக்கயிலாய தரிசனம் கிடைத்த நாளும் ஆடி அமாவாசை நாள் தான்.. 

புதன் கிழமையன்றே கோவை, சேலம், ஈரோடு வட்டாரங்களில் இருந்து சிவனடியார்கள் நூற்றுக் கணக்கில் குழுமி விட்டார்கள்.. இரு சக்கர வாகனங்களோடு சுற்றுலா சொகுசு வாகனங்களும் நான்கு திசைகளிலும் ஒரு கி.மீ தொலைவுக்கு முன்பே நிறுத்தப்பட்டு விட்டன.. கோயிலுக்குள் கூட்ட நெரிசல் என்றெல்லாம் செய்திகள்..

ஐயாறப்பர் அறம் வளர்த்த நாயகியையும் அப்பர் ஸ்வாமியையும் மனதில் கொண்டு வணங்கியபடிக்கு இல்லம் திரும்பிய நிலையில் திரு ஐயாற்றில் ஆடி அமாவாசை தீர்த்தவாரி தரிசனக் காட்சிகள் வந்திருந்தன..

அவற்றை இன்றைய பதிவில் வழங்கியுள்ளேன்..
கீழுள்ள படங்களை fb ல் வழங்கியோர்
தம்பிரான் ஸ்வாமிகள்
காவிரிக்கோட்டம் மற்றும் தஞ்சை விஜய்..
அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி..

ஐயாறப்பர் காவிரிக் கரைக்கு எழுந்தருளல்

















இரவு
திருக்கோயிலில்
அப்பர் ஸ்வாமிகளுக்கு
திருக்கயிலாயத் திருக்காட்சி
அருளல்












மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர்சுமந் தேத்திப் புகுவா ரவர்பின் புகுவேன்
யாதுஞ் சுவடு படாமல் ஐயா றடைகின்ற போது
காதல் மடப்பிடி யோடுங் களிறு வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.. 4/
3
-: அப்பர் ஸ்வாமிகள் :-

 ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

12 கருத்துகள்:

  1. ஆடி அமாவாசை சிறப்பு. படங்கள் யாவுமே சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  2. ஆடி அமாவாசை வைபவம் படங்கள் எல்லாம் அருமை.

    தெளிவாகவும் நேரில் பார்ப்பது போன்றும் உள்ளன.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றி சகோ..

      நீக்கு
  3. தரிசனம் சிறப்பு எமக்கும் கிடைத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  4. தீர்த்தவாரி பதிவும் படங்களும் அருமை.
    தேவார பாடல் பகிர்வும் அருமை.
    தரிசனம் செய்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றி..

      வாழ்க நலம்..

      நீக்கு
  5. ஐயாறப்பர் அறம்வளர்த்தநாயகி மேல் அப்பர் பாடிய பாடல் சற்று நேரத்தின் முன்புதான்' பொன்னியின் செல்வனில் செம்பியன் மாதேவியார் சொல்வதை படித்துவிட்டு வந்தேன் ஆச்சரியம் !இங்கும் அதே பாடல் என்ன ஒற்றுமை.
    வணங்குகிறேன் பாதங்களை.

    படங்கள் அனைத்தும் அருமை. தரிசனம் பெற்றோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..

      சில நாட்களாக வரவில்லையே என்று நினைத்திருந்தேன்..

      அப்பர் ஸ்வாமிகள் அருளிச்செய்த அந்தப் பதிகங்கள் எல்லாமே சிறப்பு மிக்கவை.. இந்தப் பதிகத்தைப் பாராயணம் செய்திருந்தால் விளையும் நன்மைகள் அநேகம்..

      அன்பின் கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  6. தீர்த்தவாரி படங்களும் செய்தியும் சிறப்பு. சமீபத்தில் நான் பங்குகொண்ட சிறிய அளவிலான தீர்த்தவாரியை நினைவுக்குக் கொண்டுவந்தேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெல்லை..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. மேலதிக தகவல்களுடன் அன்பின் கருத்துரைக்கு நன்றி

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..