புதன், ஜூன் 01, 2022

ஓம் சக்தி 5

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
நேற்று ஸ்ரீ வீரமாகாளி அம்மனுக்கு விடையாற்றி பூஜை..

என்னவென்று  சொல்வது..
எப்படி என்று சொல்வது!..


ஏறத்தாழ பன்னிரண்டு வருடங்களுக்குப் பிறகு ஸ்ரீ வீரமாகாளி அம்மனுக்கு சகல திரவியங்களாலும் நேற்று மாலை அபிஷேகம் செய்வித்தேன்.. 
ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ நாகர், 
ஸ்ரீ கருப்பஸ்வாமி, ஸ்ரீ மதுரை வீரன் மற்றும் உற்சவ திருமேனிக்கும் மூலஸ்தான தேவிக்கும்!..



மதிப்புக்குரிய கோமதி அரசு அவர்களும் கமலா ஹரிஹரன் அவர்களும் சொல்லியிருந்த மாதிரி இளம் தம்பதியர் ஒருவருக்கு உபாயம் ஒன்று அருளினாள் அன்னை..


மாலையில் அபிஷேக நேரத்தில் குடும்பமாக வந்திருந்த பெண் பிள்ளைகளைக் கொண்டு மஞ்சள் குழைத்துத் தரச் சொல்லி அதனை தேவியின் திருமேனியில் சாற்றி அதனைத் திரும்பவும் பிரசாதமாக அவர்களிடம் கொடுத்ததில் அனைவருக்கும் மகிழ்ச்சி..


ஊஞ்சல் வைபவத்தின் போது சுவாமி மலையில் இருந்து வந்திருந்த ஓதுவார் ஸ்வாமிகள் தேவார திருவாசகம் பாடினார்.. அந்தக் காணொளி இங்கே..


விடையாற்றி பூஜையின் அபிஷேகம் நிறைவாகியதும் வேறொரு இளைய பூசாரி அம்மனுக்கு அலங்காரம் செய்வித்தார்.. தயிர் சோறு பள்ளயமும் கனி வகைகளும் நிவேதனம் செய்யப்பட்டன...


குறையிரந்து வருவோரின் குடிகாத்து நலந்தரவே
 ஜோதிஎன வருகின்றாள்
கோல விழி மங்கை..
அவள் கோடிநலம் அருள்கிறாள்
அன்னை என வருகிறாள்..
திருப் பாற்கடலில் கண் வளரும் வசுதேவ கோவிந்தனின் தங்கை
கங்கை வளர் குழற்கற்றை
காடு பொடி ஆகிடவே
கனல் ஏந்தி ஆடுகின்ற
அம்பலவன் தோள் சேர்ந்த மங்கை
அவள் தாள் மலரைத்
தலை சூடி சரண் என்று வாழ்வோர்க்கு
தாயாகித் தமிழாகித்
தானென்று
தருகின்றாள் தன்கை..

ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம்
***

15 கருத்துகள்:

  1. ​சிலிர்ப்பான, மகிழ்வான அனுபவம். உங்கள் மகிழ்ச்சி எங்களுக்கும். காணொளியும், படங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்களுக்கு நல்வரவு..

      இந்தக் காணொளி வேறொரு வழியாக வந்தது.. எனது கைபேசியில் எடுக்கப்படும் காணொளிகள் ஏதோ ஒரு காரணத்தால் பிளாக்கரில் பதிவாவது இல்லை..

      தங்களது வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. சிறப்பான தரிசனம். நலமே விளையட்டும்.

    பதிலளிநீக்கு
  3. நல்லதே நடக்கட்டும். சிறப்பான தரிசனம்.

    பதிலளிநீக்கு
  4. உங்களை அபிஷேகங்களை செய்ய வைத்து அருள்வாக்கு சொல்லவைத்து மகிழ்கிறாள் தாய். உங்கள் கவிதையால் மேலும் மகிழ்ச்சி கொடுத்து விட்டீர்கள் தாய்க்கு.
    அகிலமெல்லாம் விளங்கும் அம்மன் அருள் அனைவரையும் காக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  5. உங்கள் மூலம் அருள் வாக்கு பெற்ற அந்த இளம் தம்பதியினர் கோரி வந்த வரம் கிடைக்கட்டும்.
    படங்களும் காணொளியும் அருமை .

    பதிலளிநீக்கு
  6. இரண்டு முறை இங்கே பதிவு செய்தும் கருத்து காணாமல் போய்விட்டது! படங்களும் தகவல்களும் சிறப்பு. அன்னையின் பூரண அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  7. படங்கள், காணொளியும் மிக நன்று. நீங்கள் அபிஷேகம் செய்தது மிக மகிழ்வான விஷயம்.

    இறுதியில் நீங்கள் எழுதியிருக்கும் கவிப்பாடல் அருமை, துரை அண்ணா. எல்லா நன்மைகளும் நல்குவாள் அன்னை.

    கீதா

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. படங்களும் காணொளியும் பார்த்தேன். நன்றாக உள்ளது. அம்மனுக்கு விடையாற்றி உற்சவம் சிறப்பாக நடந்திருப்பது கண்டு மிக மகிழ்ச்சி அடைந்தேன். தங்களின் கைகளினால் பல திரவிய அபிஷேகங்கள் அம்மனுக்கு செய்வித்து மனம் மகிழ்ந்த பாக்கியம் தங்களுக்கு கிடைத்திருப்பதும் மிக்க மகிழ்ச்சியை தருகிறது. அனைத்தும் அம்மனருள். தங்களால் இளம் தம்பதி ஒருவருக்கு திருவாக்கு சொல்லியிருப்பதும் மகிழ்ச்சியளிக்கும் சம்பவமே... இத்தனை மகிழ்ச்சிகளை ஒரு சேர தந்திருக்கும் அன்னை ஸ்ரீ வீரமாகாளியம்மன் அனைவரையும் நலமுடன் காத்தருள வேண்டுமென மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்னையின் அருள் ததும்பும் படம் மிக நன்றாக உள்ளது. அன்னையை குறித்து தாங்கள் இயற்றிய பாடலும், நன்றாக உள்ளது. அன்னையை நோக்கிப் பாடி மனங்கனிந்து நமஸ்கரித்துக் கொண்டேன். 🙏. நன்றி.

      நீக்கு
  9. அலங்காரங்களுடன் வீரகாளி அம்மன் தரிசனம் கண்டோம். பாடலும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  10. மிகக் கொடுத்து வைச்சிருக்கீங்க. அன்னையைத் தொட்டு வழிபாடுகள் செய்வதற்கும் அபிஷேஹங்கள் செய்யவும் கொடுத்து வைச்சால் தான் கிடைக்கும். உங்கள் மூலம் அருள் வாக்கா? அது என்ன விஷயம்? பல நாட்களாகச் சரியாக வராத காரணத்தால் என்னனு தெரியலை. எப்படியானும் நல்வாக்குக் கொடுத்தமைக்கு நன்றி. அன்னையின் அலங்காரங்களும் உங்கள் அருமையான பாமாலையும் அற்புதம்.

    பதிலளிநீக்கு
  11. கருத்துக் கொடுத்து வந்தாலும் எத்தனை போகிறது/எத்தனை தெரியப் போகின்றன என்பது அந்த அம்பிகையே அறிவாள்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..