திங்கள், மே 16, 2022

ஸ்ரீ நீலமேகப் பெருமாள்

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

நேற்று தஞ்சை மாமணிக் கோயில்களுள் முதலாவதான
ஸ்ரீ செங்கமலவல்லித் தாயார் உடனாகிய 
ஸ்ரீ நீலமேகப் பெருமாள் தரிசனம்..


நன்றி கூகுள்

ஸ்ரீ நீலமேகப்பெருமாள்
ஸ்ரீ செங்கமலவல்லித்தாயார்
தீர்த்தம் வெண்ணாறு, அமிர்த தீர்த்தம்


தல விருட்சம் மகிழ மரம்
பராசர முனிவருக்கு ப்ரத்யட்சம்..

மூலஸ்தானத்தில் பராசரர் பெருமாளை சேவிக்க - கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம்..




பராசர முனிவரது யாகத்தைக் காப்பதற்காகக் கருட வாகனத்தில் எழுந்தருளிய பெருமாள்-  தஞ்சகன் தண்டகன் எனும் அரக்கர்களை அழித்து ஒழித்ததாக தலபுராணம்..



செங்கமலவல்லித் தாயார் சந்நிதியின் தூண் ஒன்றில் காணப்படும் அழகிய சிற்பங்கள்..







ஸ்ரீ வலவெந்தை நரசிம்மர்

திருக்கோயில் அர்த்த மண்டபத்தில் ஸ்ரீ வராஹ மூர்த்தியும்
ஸ்ரீ மஹாலக்ஷ்மியை வலப்புறம் தாங்கிய வலவெந்தை நரசிம்மரும்
ஸ்ரீ ஆண்டாளும் விளங்குகின்றனர்...





நீலமேகப் பெருமாள் கோயிலில் ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் தனிச் சந்நிதியில் விளங்குகின்றார்..

ஸ்ரீ ஹயக்ரீவர்




இத்தலத்தில் ஸ்ரீ தேசிகர் சந்நிதியும் உற்சவமும் சிறப்பு..



ஸ்ரீ பத்ம தளம்
முன்மண்டபத்தின் நடுவில் பத்ம தளம் அமைக்கப்பட்டுள்ளது..
இவ்விடத்தில் வடக்கு நோக்கி அமர்ந்து தியானிப்பது சிறப்பு என்பர்..

திவ்ய தேச வரிசையில் தஞ்சை மாமணிக் கோயில்கள் மூன்றும் மூன்றாவதாக அமைந்துள்ளன..

ஸ்ரீ நீலமேகப் பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி..
ஓம் ஹரி ஓம்
***

14 கருத்துகள்:

  1. கோவில் படங்கள் சிறப்பு.  தஞ்சையிலேயே அமைந்துள்ள கோவிலா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்களுக்கு நல்வரவு..கும்பகோணம், அரியலூர் வழியாக தஞ்சைக்கு வரும் போது இந்தக் கோயில் தான் முதலில் கண்ணில் படும்..

      வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. சிறப்பான தரிசனம். படங்கள் அனைத்தும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி வெங்கட் ..

      நீக்கு
  3. மூன்று கோவில்களையும் பலமுறை தரிசித்திருக்கிறேன் (சோழநாடு நாத்திரை, கும்பகோணத்தில் தங்கி அருகில் இருக்கும் எல்லாக் கோவில்களைச் சேவித்தபோதும்.. எனப் பல தடவை)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெல்லை..
      வெகுநாட்களுக்குப் பிறகு தங்கள் வருகை.. அன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. இன்றைய தரிசனம் நன்று வாழ்க வையகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி ஜி..

      நீக்கு
  5. படங்களும் விவரங்களும் நன்று துரை அண்ணா. தாயார் படம் எல்லாம் நன்றாக வந்திருக்கிறதே! தரிசனம் நன்று

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி. இந்தப் பதிவு பத்து நாட்களுக்கு முன் வந்திருக்க வேண்டியது.. ஒரு படம் சரியாக அமையாததால் தாமதம் ஆகி விட்டது
      கருத்திற்கு மகிழ்ச்சி.. நன்றி சகோ..

      நீக்கு
  6. இதிலே கருத்துச் சொல்லலை. ஏனெனில் பின் தொடரும் கருத்துக்காகக் குறியீடு இல்லை. பதிவையே இன்னிக்குத் தான் பார்க்கிறேனோ? மே 16 ஆம் தேதியா? சரிதான்!

    பதிலளிநீக்கு
  7. தஞ்சாவூருக்குப் பல முறை போயும் முதல் தரம் பார்த்தது தான் சிவகங்கையும் சரஸ்வதி மஹாலும். பின்னர் போகவே இல்லை. தஞ்சைப் பெரிய கோயில் பல முறை போயிட்டு வந்திருக்கோம். மற்றக் கோயில்கள் போனதில்லை. ஆனால் புன்னைநல்லூர் அம்பிகையையும் பங்காரு காமாட்சியையும் தரிசிச்சிருக்கோம்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..