வெள்ளி, மே 20, 2022

ஏழூர் விழா 3

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
முந்தைய பதிவுகளின் தொடர்ச்சியாக -
ஏழூர் பல்லக்கு விழாவில் 
திருச்சோற்றுத்துறை காட்சிகள்..






















இன்றைய பதிவில் கோயிலின் முன்பாக பல்லக்குகள் கூடுவதையும் கோயிலுக்குள் செல்வதையும் இயன்ற வரை காட்டியுள்ளேன்..

எல்லாப் பல்லக்குகளின் பக்கவாட்டிலும் அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் - என, சான்றோர்களின் ஓவியங்கள் கவினுற அமைக்கப்பட்டிருப்பது கண்டு இன்புறத்தக்கது..





பிறைதரு சடையின் மேலே பெய்புனல் கங்கை தன்னை
உறைதர வைத்த எங்கள் உத்தமன் ஊழி யாய
நிறைதரு பொழில்கள் சூழ நின்றநெய்த் தானம் என்று
குறைதரும் அடியவர்க்குக் குழகனைக் கூடலாமே.. 4.37.3
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

10 கருத்துகள்:

  1. மிக அழகிய படங்கள்.  அத்தனூண்டு வாயிலுக்குள் பல்லக்கு நுழையுமா என்னும் வண்ணம் ஒரு தோற்றமும் தெரிந்தது.  மக்களின் முகத்தில்தான் எவ்வளவு உற்சாகம்...  கோவில் படமும் அழகு.  வாழ்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்களுக்கு நல்வரவு..

      கோபுர வாசல் பல்லக்குகள் நுழைவதற்கு ஏதுவாகத்தான் இருந்தது..

      அந்த மக்களின் உற்சாகத்தையும் ஆரவாரத்தையும் நேரில் காண வேண்டும்.. அத்தனை பல்லக்குகளையும் கோவிலின் உள்ளே தரிசித்தது ஆனந்தம்.. பரமானந்தம்..

      வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. அழகிய தரிசனங்கள் நன்று.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. அழகான ஏழுர் பல்லக்குகளின் தெய்வீக படங்கள் அருமையாக உள்ளது. என்னால் நேரில் சென்று காண கிடைக்காத காட்சியை தங்கள் பதிவில் தொகுத்து வழங்கியுள்ளீர்கள். படங்கள் அனைத்தையும் பார்த்து இறைவனை தரிசித்து கொண்டேன். பல்லக்குகளின் பக்கவாட்டில் பதிந்திருக்கும் நால்வரின் படங்களையும் தனியாக எடுத்துப் போட்டிருப்பது சிறப்பு. அனைவரையும் பக்தியுடன் வணங்கிக் கொண்டேன்

    இதன் முந்தைய பதிவுகளையும் பிறகு படித்துப் பார்த்து விட்டு பின் வருகிறேன். இரண்டு மூன்று நாட்களாக என்னால் சரியாக வலைத்தளம் வரவியவில்லை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. படங்கள் அருமை...

    ஓம் நம சிவாய...

    பதிலளிநீக்கு
  5. ஏழுர் திருவிழா மிக அழகாய் உள்ளது அனைத்து படங்களும் அருமை.
    நாவுக்கரசர் தேவாரம் பாடி தரிசனம் செய்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  6. படங்கள் அழகு. அருமை. பல்லக்கினுள் உள்ள படங்களை எடுத்த விதமும் ரொம்ப அழகாக இருக்கின்றது துரை அண்ணா.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ வெளிப்புறத்து பக்கவாட்டில் அப்பர் சம்பந்தன் படங்கள் எல்லாம். இன்னும் கூர்மையாகப் பார்த்ததும் தெரிந்துவிட்டது

      கீதா

      நீக்கு
  7. சிறப்பான தரிசனம். படங்கள் அனைத்தும் அழகு.

    பதிலளிநீக்கு
  8. அழகான பல்லக்குகளின் வடிவமைப்பும் சிறப்பு. கூர்ந்து கவனித்தால் நாயன்மார்களின் படங்கள் தெரிகின்றன. 2 வருடங்களாகக் கோயில்களுக்குச் செல்லவும் முடியாமல் திருவிழாக்களில் கலந்து கொள்ளவும் முடியாமல் இருந்த மக்களுக்கு இந்த வருஷம் காணாது கண்டது போல் எல்லாத் திருவிழாக்களும் இருக்கின்றன.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..