புதன், மே 18, 2022

ஏழூர் விழா 2

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
நேற்று வைகாசி 3 (17/5) செவ்வாய்க் கிழமை.. திங்களன்று காலையில் திரு ஐயாற்றில் இருந்து புறப்பட்ட பல்லக்குகள் திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி ஆகிய கோயில் பல்லக்குகளுடன் அன்று இரவு ஒன்பது மணி வரையிலும் வந்து சேரவில்லை.. இடையில் மழை வேறு..
செவ்வாய்க்கிழமை விடியலில் அந்தப் பல்லக்குகள் கண்டியூரை அடைந்தன..  காலையில் அங்கிருந்து புறப்பட்டு திருப்பூந்துருத்தி வழியாக குடமுருட்டி, காவிரி ஆறுகளைக் கடந்து திருநெய்த்தானத்திற்கு மதியப் போதில் வந்து சேர்ந்தன.. 
இதை உத்தேசித்து 
அங்கு ஒவ்வொரு பல்லக்கும் பட்டறையில் இருந்து இறக்கப்பட்டு பாரம்பர்ய கட்டளை மண்டகப்படியில் நிறுத்தப்பட்டது.. எல்லாப் பல்லக்குகளும் முதல் மரியாதையை ஏற்றுக் கொண்டபின் கோயிலுக்குள் பிரவேசித்தன.. அங்கு கடைக் காலில் நிறுத்தப்பட்டு சற்று இளைப்பாறிய பின் ஏக காலத்தில் எல்லாப் பல்லக்குகளுக்கும் தீப ஆராதனை நிகழ்ந்தது.. அதன் பின் மீண்டும் பட்டறையில் ஏற்றப்பட்டு மாலை ஐந்து மணியளவில் ஆரவார கோலாகலத்துடன் திரு ஐயாற்றை நோக்கிப் புறப்பட்டன..

வழி நெடுகிலும் மக்களின் அன்பினை ஏற்றுக் கொண்டு எட்டரை மணியளவில் ஸ்ரீ ஐயாறப்பர் கோயிலை வந்தடைந்தன... 
இரவு ஒன்பது மணிக்கு மேல் பூமாலை தாரணம்.. தீப ஆராதனை...
பொழுது விடியும் நேரத்தில் எல்லாப் பல்லக்குகளும் அவரவர் ஊரை நோக்கிப் புறப்பட விழா மங்களகரமாக நிறைவடையும்..

காவிரியாற்றில் பெரிய அளவில் வாண வேடிக்கை நடைபெற்றது.. எனது செல் செயலிழந்து விட்டதால் இரவு நேரக் காட்சிகளைப் படமெடுக்க இயலவில்லை..
எல்லாப் பல்லக்குகளையும் தரிசனம் செய்த மகிழ்வுடன்
இரவு ஒன்பது மணியளவில் நல்லபடியாக வீடு வந்து சேர்ந்தோம்...

 திருநெய்த்தானம்
**

நேற்று மதியம் திருநெய்த்தானத்திற்கு சென்று அனைத்துப் பல்லக்குகளையும் ஒரே இடத்தில் தரிசித்ததுடன் - கூட்ட நெரிசலில் இயன்ற அளவில் திருவிழாவினைக் காட்சிப்படுத்தியுள்ளேன்..




































சுடு மணலாகக் காவிரி

நந்தியம்பெருமான் சுயம்பிரகாஷிணி தேவி திருமண வைபவத்தின்  சிகரமானது இந்தத் திருவிழா..

அம்மையும் அப்பனும் நம்மைக் காத்தருள் புரிவார்களாக..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
***

13 கருத்துகள்:

  1. சிறப்பான, தெளிவான படங்கள். செல் செயலிழக்கும் சிரமங்களுக்கு இடையிலும் சிறப்பான படங்களை எடுத்து எங்களுக்கும் காணக் கொடுத்துள்ளீர்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம் தங்களுக்கு நல்வரவு..

      தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. படங்கள் அனைத்தும் அழகு. பார்த்து ரசித்தேன். நேரில் சென்று பார்க்க எப்போது வாய்ப்பு கிடைக்குமோ..... திருவிழா குறித்த தகவல்கள் அனைத்தும் உங்கள் பதிவு மூலம் பார்க்க கிடைத்ததில் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்களுக்கும் இறையருள் வாய்ப்பு நிச்சயம் கிட்டும்..

      தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது ஜி தரிசனம் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. இரு முறை இவ்விழாவில் கலந்துகொண்டு ஏழு தலங்களுக்கும் பல்லக்குகளைத்தொடர்ந்து சென்றேன். இப்போது உங்களுடன்... இவற்றையெல்லாம் காண, அனுபவிக்க இறையருள் துணைநிற்பதே நாம் செய்த பெரும் பாக்கியம்.

    பதிலளிநீக்கு
  5. விழாவினை நேரில் பார்ப்பது போல உங்கள் படங்கள் மூலம் பார்த்து தரிசனம் செய்து கொண்டேன்.
    நன்றி, வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  6. விழாப் படங்கள் குறிப்பாகப் பல்லக்குப் படங்கள் அதைப் பற்றிய விவரங்கள் எல்லாம் சிறப்பாக இருக்கிறது. அதுவும் நீங்கள் நேரில் கண்டு எழுதியது இல்லையா! கூடுதல் சிறப்பு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ

      நீக்கு
  7. படங்கள் அருமை...

    ஓம் நம சிவாய...

    பதிலளிநீக்கு
  8. காவிரியை ரசித்துக் கருத்துக் கொடுத்த நினைவு. எங்கே போச்சோ! அழகான படங்கள். எல்லாம் நன்றாக எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த வருஷம் திருவிழாவில் கலந்து கொள்ளும் பேறு உங்களுக்கு வாய்த்துள்ளது. இறைவனுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..