வெள்ளி, மே 27, 2022

ஓம் சக்தி 1

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

நேற்று வைகாசி12 (26/5) வியாழக்கிழமை..
ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோயிலில் வைகாசித் திரு விழா - யாக பூஜையுடன் தொடங்கியது.. 


மேல்புற சுதை சிற்பங்கள்
ஸ்ரீ வலம்புரி விநாயகர், மூலஸ்தான,  உற்ஸவ திருமேனிக்கும் பரிவார தேவதைகளுக்குமாக ஒன்பது கலசங்கள்.. ஸ்வாமிமலை கணேச சிவாச்சாரியார் முன்னின்று அபிஷேக வழிபாடுகளை நடத்தி வைத்தார்.. 

இன்று வைகாசி 13 (27) வெள்ளிக்கிழமை மாலை 6:00 மணிக்கு மேல் ஸ்ரீ வீரமாகாளி அம்மன் சிம்ம வாகனத்தில் வீதியுலா எழுந்தருள்கின்றாள்..











ஸ்ரீ விநாயகர்

ஸ்ரீ நாகர்

ஸ்ரீ வேம்பு

ஸ்ரீ மதுரைவீரன்

ஸ்ரீ கருப்பசாமி
ஸ்ரீ வீரமாகாளியம்மன்
*
சனிக்கிழமையன்று எங்களது மண்டகப்படியை ஏற்றுக் கொள்ளும் அம்பிகைக்கு ஞாயிறன்று காலை பால்குட வைபவம்..


ஞாயிறு மாலை -  மூலஸ்தான திருமேனிக்கு சந்தனக்காப்பு.. உற்சவ அம்பாள் ஊஞ்சலில் எழுந்தருகின்றாள்..
திங்களன்று விடையாற்றியுடன் ஐந்து நாள் வைபவம் நிறைவடைகின்றது..

இந்த அளவில் நேற்று எடுக்கப்பட்ட ஒளிப்படங்களை இன்றைய பதிவில் வழங்கியுள்ளேன்..
***


வேறு துணை எதற்கு என்று காளி வந்தாள்..
வெற்றி எட்டு திசை முட்டிடவே காளி வந்தாள்
மாறு கொண்ட குறை முடிக்க காளி வந்தாள்
சுற்றி நிற்கும் பகை விரட்ட காளி வந்தாள்..



சூரன் தோளை துளைத்தவளாய் காளி வந்தாள்..
வீரம் மிகும் சூலத்துடன் காளி வந்தாள்..
கோரங்கொண்ட குமரியளாக காளி வந்தாள்..
ஆரமுதாக அன்னையளாக காளி வந்தாள்..

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம்
***

10 கருத்துகள்:

  1. சனிக்கிழமை உங்கள் மண்டகப்படியா?   வருடா வருடம் தொடர்வதா?  படங்கள் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்களுக்கு நல்வரவு..

      ஆம்.. பதினேழு வருடங்களாக இந்த பந்தம்..

      மகிழ்ச்சி.. நன்றி..
      ஓம் சக்தி..

      நீக்கு
  2. ஸ்ரீ வீரமாகாளி கோயில் உற்சவ படங்கள் எல்லாம் அருமை.
    வெள்ளிக்கிழமை அன்னையின் தரிசனம் அருமை.
    துணையாக என்று காளி இருந்து விட்டால் வேறு என்ன வேண்டும்!ஆரமுதாக அனையாக அனைவருக்கும் காளி எல்லா நலங்களையும் அருள வேண்டும்.
    ஓம் சக்தி! ஓம் சக்தி ! ஓம்!

    பதிலளிநீக்கு
  3. படங்களும்்விவரங்களும் நன்று

    பதிலளிநீக்கு
  4. திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் துணை...

    ஓம் சக்தி...!

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. யாகசாலை பூஜை படங்கள், மற்றும் அலங்காரங்களுடன் காட்சி தரும் விநாயகர், அம்பிகை மற்ற தெய்வங்கள் படங்கள் அனைத்தும் கண்களுக்கும், மனதிற்கும் நிறைவாக இருந்தது. நிறைவான மனதுடன் அழகான அம்பிகையை தரிசித்து கொண்டேன்.🙏.

    தாங்கள் ஸ்ரீ வீரமாகாளியம்மனுக்கு மண்டகபடி தொடர்ந்து செய்வது/செய்து வருவது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். அம்மன் அருள் என்றும் தங்கள் குடும்பத்துக்கு நிறைவோடு இருக்க நானும் அந்த அம்மனை இங்கிருந்தே தங்கள் பதிவின் வாயிலாக மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நான் பெற்ற சந்தோஷத்தை தங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.. அவ்வளவு தான்... எல்லாருக்கும் மகிழ்வான நிகழ்வுகளே அமைவதற்கு எல்லாம் வல்ல அம்பிகையை பிரார்த்தனை செய்து கொள்கின்றேன்.. மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. படங்கள் கோயில் விழா பற்றிய விவரங்கள் அனைத்தும் சிறப்பாக இருக்கின்றன.

    சனிக்கிழமை உங்களின் மண்டகப்படி சிறப்பாக நடந்திடவும் அம்பிகை அருள் புரியட்டும்! துரை அண்ணா.

    படங்கள் இரவுப் படங்களும் நன்றாக வந்திருக்கின்றன.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் வேண்டுதலும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..

      நீக்கு
  7. கோவில் படங்களும் தகவல்களும் சிறப்பு. சிறப்பான பூஜைகள். நல்லதே நடக்க அன்னை அருள்புரியட்டும்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..