ஞாயிறு, ஏப்ரல் 17, 2022

ஆற்றில் அழகர்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஸ்ரீ சுபகிருது வருடத்தின் மூன்றாம் நாளாகிய நேற்று சித்ரா பௌர்ணமி..
மா மதுரையில் சித்திரைத் தேரோட்டம் நடந்தேறிய நிலையில் ஸ்ரீ கள்ளழகர் வைகை ஆற்றில் மண்டூக முனிவருக்கு அருளும் பொருட்டு இறங்கி அருளினார்..


நேரலை ஒளிபரப்பில் அனைவரும் கண்டு மகிழ்ந்திருப்பீர்கள்..
எனினும் நமது தளத்தில் நிகழ்வுகளைப் பதிவு செய்வதில் மகிழ்ச்சி..


திருவிழாவின் சில காட்சிகள் இன்றைய பதிவில்..



அழகான
நிகழ்வுகளை Fb ல் வழஙகிய திரு. குணா அமுதன், திரு. ஸ்டாலின் மற்றும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி..















பரியுடன் வருபவர் திரு. பாலாஜி பட்டர்..


சொல்லழகும் சொல்லழகா
சுந்தரனே வில்லழகா
நல்லருளும் நல்லழகாய்
நல்குவையே கள்ளழகா!..
கள்ளழகர் திருவடிகள் போற்றி..

ஓம் ஹரி ஓம்
***

12 கருத்துகள்:

  1. படங்கள் தெளிவாகவும், அழகாகவும், துல்லியமாகவும் கலைநயத்துடனும் எடுக்கப்பட்டிருக்கின்றன.  அருமை.  குழுமி இருந்த கூட்டம் கண்டு மிரண்டு போனேன்.  கள்ளழகப்பெருமான் அனைவரையும் காப்பாராக...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      எனக்கும் இது ஆச்சர்யமான விஷயம்.

      கருத்திற்கு நன்றி ..

      கள்ளழகர் துணை..

      நீக்கு
  2. படங்கள் அனைத்தும் மிகவும் சிறப்பாக இருக்கிறது ஜி

    பதிலளிநீக்கு
  3. ஆஹா ..கண் கொள்ளா காட்சிகள் ....பெருமாளே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி அனுபிரேம்..

      நீக்கு
  4. மனதுக்குகந்த காட்சிகள். துல்லியமான படங்களை கண்டு ரசித்தேன். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி வெங்கட்..

      நீக்கு
  5. மிக அழகான படங்கள்.கூட்டத்திற்கு பயந்து கொண்டு நேரலையில் பார்த்தேன்.
    தேரோட்டம் பார்க்க தங்கை வீடு சென்று பாதுகாப்பாய் சொந்தங்களின் அரவணைப்பில் பத்திரமாய் பார்த்து திரும்பி விட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      நமக்கெல்லாம் இதுதான் சரி..

      இருந்தாலும் இவை காணக் கிடைக்காதவை..

      நன்றி.. நலமே வாழ்க..

      நீக்கு
  6. படங்கள் எல்லாம் மிக அழகு. நேற்றுக் காலையில் அழகர் ஆற்றில் இறங்குவதை நேரலையில் பார்க்க நினைச்சுப் பார்க்க முடியலை. பின்னால் யூ ட்யூப் கிடைச்சது. அதில் எதிர்சேவையிலிருந்து பார்த்தேன். இங்கேயும் படங்கள் அழகோ அழகு. மனதைக் கொள்ளை கொள்கின்றன எல்லாமும். கோலாகலமான மதுரை என் சின்ன வயசு நாட்களை நினைவூட்டுகிறது. தெருவே காலியாக இருக்கும். எல்லோரும் அழகரைப் பார்க்க ஆற்றங்கரைக்குப் போயிருப்போம். ஆனாலும் ஒரு பயம்/கவலை இருக்காது/இருந்ததும் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் மேலதிகக் கருத்திற்கும் மகிழ்ச்சி..

      அந்த நாட்கள் இனி வருவதற்கில்லை..

      நன்றியக்கா..

      நீக்கு
  7. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

    நன்றி தனபாலன்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..