வியாழன், மார்ச் 17, 2022

திரு இரும்பூளை

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
தெற்கு கோபுரம் (பழைய படம்)

திருத்தலம் - திரு இரும்பூளை
(தற்போது - ஆலங்குடி)

ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி

இறைவன்
ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர்
அம்பிகை
ஏலவார்குழலி

தீர்த்தம் ஞானகூபம்
தலவிருட்சம் பூளைச்செடி

ஞான சம்பந்தப் பெருமான்
திருப்பதிகம்
அருளிய திருத்தலம்..
*

எல்லாம் வல்ல சர்வேஸ்வரன் 
" குரு பகவானாக " இங்கே
வீற்றிருக்கின்றார் என்று சொல்லப்படும் கோயில்...

தொண்ணூறு சதவீத சைவ சமயிகள் இப்படியே நம்புகின்றனர்.. எல்லாவகையான ஊடகங்களும் அதையே சொல்கின்றன..

இறைவன் - 
ஸ்ரீ தக்ஷிணா மூர்த்தியாக  மேற்கொண்ட திருக்கோலம் வேறு.. நவக்கிரக மண்டலத்தில் இருக்கின்ற தேவ குரு ஸ்ரீ பிரகஸ்பதி வேறு - என்பதை உணர்ந்தார்கள் இல்லை..

கிழக்கு நோக்கிய திருக்கோயில்.. எனினும் தெற்கு கோபுரம் தான் கோயிலின் உள்ளே நுழையும் வழி..
பெரிதான ராஜ கோபுரம்.. கோயிலைச் சுற்றிலும் அகழி.. ஆனாலும் கோபுர வாசலில் மேடாக ஆக்கப்பட்டு இருபுறமும் படித்துறைகள்.. அகழியின் கரையில்
ஸ்ரீ ஐயனார் கோயில்.. யானை வாகனம்..

ஸ்ரீ ஐயனார் சந்நிதி

படித்துறை


தெற்கு கோபுரத்தில் கிழக்கு முகமாக கலங்காமல் காத்த விநாயகர்.. 


விநாயகரை வணங்கி விட்டு மேலே நடந்தால் அம்பிகை ஏலவார் குழலியின் திருச்சந்நிதி..

ஸ்ரீ ஸ்வாமி சந்நிதி

ஸ்ரீ அம்பாள் சந்நிதி
அங்கு நின்று மேற்கு முகமாக நோக்கினால் ஐயன் 
ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர்..

ஸ்ரீ முருகப்பெருமான்

நேராகச் சென்று மூலஸ்தானத்தில் இறைவனை வணங்கி விட்டு பிரகார வலம் செய்து வெளியில் அம்பிகையை வணங்குவது நடைமுறை..

இது இப்போது மாற்றப்பட்டு உள்ளது.. 


கலங்காமல் காத்த விநாயகரை வணங்கிய பின் அன்பர்கள் மடைமாற்றப் படுகின்றனர்.. வெளிப் பிரகாரத்தின் தடுப்புகள் வழியே நடந்து தெற்கு கோட்டத்தில் தக்ஷிணாமூர்த்தியை முதலில் தரிசித்து அப்படியே வலம் வந்து மூலஸ்தானத்தில் வணங்கும் படியாக இருக்கின்றது...

இந்த ஏற்பாடு தற்காலிகமா நிரந்தரமா - தெரியவில்லை..

அதன் பின் அம்பிகையின் சந்நிதி..

ஈசனின் சந்நிதியும் அம்பிகையின் சந்நிதியும் - திட்டை 
ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர் கோயிலில் இருப்பதைப் போலவே உயரமான சந்நிதிகள்..
நெரிசலான நேரத்திலும் இலகுவாக தரிசனம் செய்யலாம்..
தற்போது கோயிலில் திருப்பணி நடந்து கொண்டிருக்கின்றது..


கும்பகோணம் மன்னார்குடி சாலையில் 18 கி.மீ தொலைவில் ஆலங்குடி அமைந்துள்ளது..

கடந்த 18/2  அன்று எடுக்கப்பட்ட படங்கள் இன்றைய பதிவில்!..



சீரார் கழலே தொழுவீர் இதுசெப்பீர்
வாரார் முலைமங் கையொடும் உடனாகி
ஏரார் இரும்பூளை இடங் கொண்ட ஈசன்
காரார் கடல் நஞ்சமுது
உண்ட கருத்தே..2.036.1

பூத வாகன கணபதி


தொழலார் கழலே தொழு தொண்டர்கள் சொல்லீர்
குழலார் மொழிக்கோல் வளையோடு உடனாகி
எழிலார் இரும்பூளை இடங் கொண்ட ஈசன்
கழல்தான் கரிகா னிடை யாடு கருத்தே..2.036.2



நச்சித் தொழுவீர்கள் நமக்கிது சொல்லீர்
கச்சிப் பொலி காமக் கொடியுடன் கூடி
இச்சித்து இரும்பூளை இடங் கொண்ட ஈசன்
உச்சித் தலையிற் பலிகொண்டுழல் ஊணே..2.036. 4



தோடார் மலர் தூய்த் தொழு தொண்டர்கள் சொல்லீர்
சேடார் குழற்சேயிழை யோடு உடனாகி
ஈடாய் இரும்பூளை இடங் கொண்ட ஈசன்
காடார் கடுவேடுவன் ஆன கருத்தே..2.036. 6


துயராயின நீங்கித் தொழுந் தொண்டர் சொல்லீர்
கயலார் கருங்கண்ணி யொடும் உடனாகி
இயல்பாய் இரும்பூளை இடங் கொண்ட ஈசன்
முயல்வார் இருவர்க்கு எரியாகிய மொய்ம்பே..2.036.9
-: திருஞானசம்பந்தர் :-
*
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

11 கருத்துகள்:

  1. கலங்காமல் காத்த விநாயகர்... ஏனோ அந்தப் பெயர்?


    ஆலங்குடி - கேள்விப்பட்ட பெயர். சென்றிராத திருத்தலம். படங்கள் அழகு. விவரங்கள் சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்களுக்கு நல்வரவு..

      உலகியலில் -
      துக்கப்பட்டு துயரப்பட்டு
      வெட்கப்பட்டு வேதனைப்பட்டு
      முட்டுப்பட்டு முடக்கப்பட்டு
      கஷ்டப்பட்டு கவலைப்பட்டு
      கண் கலங்கி கதி கலங்கி
      கைதொழுது வரும் அடியார்க்கு
      கை கொடுத்து கரையேற்றி
      கலங்காதே.. மகனே!..

      - என்பவராம் இவர்!..

      எனவே,
      கலங்காமல் காத்த விநாயகர்..

      தமிழகத்துப் பிள்ளையார்
      பெயர்களுள் - எனக்கு மிகவும்
      பிடித்த பெயர் இது..

      நீக்கு
  2. ஸ்ரீராம் அவர்கள்
    ஆலங்குடிக்கு வந்ததில்லையா?..ஆச்சர்யம்!..

    ஈசனே..எம்பெருமானே.. என்று
    ஒருமுறை வந்து தரிசனம் செய்யுங்கள்..

    ஆபத் சகாயமூர்த்தி
    நம்மைக் காத்தருள்வார்..
    ஏலவார்குழலி இருக்க
    எங்கெங்கும் மங்கலம்!..

    மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  3. ஆலங்குடி பெயர் கேட்டதுண்டு. ஆனால் சென்றதில்லை.

    கலங்காமல் காத்த விநாயகர் எல்லோரையும் காக்க வேண்டும்
    எனக்கும் இப்போதைய தேவை.

    படங்களும் விவரங்களும் எல்லாமே அருமை துரை அண்ணா.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  4. திருஇரும்பூளை எனக் கேட்டிருக்கேன். ஆனால் ஆலங்குடியைத் தான் அப்படிச் சொன்னார்கள் என்பதை இன்றே அறிந்தேன். மிக்க நன்றி தகவலுக்கு. 2,3 முறை போயிருப்போம். எல்லாம் அருமையான தகவல்கள். திருப்பணி நடப்பதும் மிகவும் மனதுக்கு மகிழ்வான விஷயம். கலங்காமல் காத்த/காக்கும் விநாயகன் அனைவரது துன்பங்களையும் கலங்காமல் பொடிப்பொடியாக ஆக்கிக் காத்தருள வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றியக்கா..

      கலங்காமல் காத்த கணபதி அனைவரையும் காத்தருள வேண்டும்..

      நலம் வாழ்க..

      நீக்கு
  5. ஆலங்குடி என்ற பெயரை அறிந்திருந்தேன் - திரு இரும்பூளை என்பது தான் அந்த ஊரின் பெயர் என்பதை உங்கள் பதிவு வழி அறிந்தேன். படங்கள் நன்று. தொடரட்டும் கோவில் உலா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  6. நிறைய தடவை போன கோவில்.
    வியாழன் அன்று எல்லோரும் தட்சிணாமூர்த்திக்குதான் அர்ச்சனை செய்கிறார்கள்.
    குரு பெயர்ச்சி அன்றும் நவகிரகங்களில் உள்ள பிரகஸ்பதி வியாழனுக்கு செய்வது இல்லை.
    பாடல் பெற்ற தலங்கள் வழிபாடு செய்து வருவது மகிழ்ச்சி.
    வாழ்த்துக்கள்.

    படங்கள் எல்லாம் நேரில்பார்த்த உணர்வை தருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      ஜனங்களுக்கு புரிய வைக்க வேண்டும்.. ஆனால் அதை யாரும் செய்வதில்லை..

      தங்கள் கருத்துரைக்கு நன்றி..
      நலம் வாழ்க..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..