செவ்வாய், மார்ச் 01, 2022

சிவ தரிசனம் 1

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

ஸ்ரீ பிலவ வருடம் மாசி 17 ( மார்ச் 1) க்ருஷ்ணபட்ச சதுர்த்தசி செவ்வாய்க் கிழமையாகிய இன்று சகல சிவாலயங்களிலும் ஸ்ரீ மஹா சிவராத்திரி வைபவம்..

ஸ்ரீ கும்பேஸ்வரர்

இன்றைய இரவுப் பொழுதில் இருந்து நாளை சூர்யோதயம் வரை நான்கு காலங்களிலும் மங்கல  திரவியங்களுடன் சிவ லிங்கத்திற்கு அபிஷேக அலங்காரமும் மஹா ஆரத்தியும் நிகழ்வுறும்..

கும்பகோணம் சுவாமிமலைக்கு  அருகில் உள்ள திருவைகாவூர், இராமேஸ்வரம், ஸ்ரீ சைலம் இங்கெல்லாம் திருவிழாக்கள்..

இருப்பினும், நான்கு கால சிறப்பு வழிபாட்டிற்கென நான்கு திருத்தலங்கள் சொல்லப்படுகின்றன..

அவை -
முதல் காலத்தில் குடந்தை ஸ்ரீ நாகேஸ்வரன் திருக்கோயில்..

இரண்டாம் காலத்தில் திருநாகேஸ்வரம் ஸ்ரீ நாகேஸ்வரன் திருக்கோயில்..

மூன்றாம் காலத்தில் திருப்பாம்புரம் ஸ்ரீ சேஷபுரீஸ்வரர் திருக்கோயில்..

நான்காம் காலத்தில் நாகப்பட்டினம் ஸ்ரீ காயாரோகணேஸ்வரர் திருக்கோயில் - என்பன..

ஸ்ரீ தாயுமானஸ்வாமி

நாம் நமது சூழ்நிலையை அனுசரித்து அருகில் உள்ள சிவாலயத்தில் தரிசனம் செய்து எல்லா நலன்களையும் எய்துவோமாக..

இன்றைய பதிவில்
திருஞானசம்பந்தப் பெருமான் அருளிச் செய்த பஞ்சாக்கரத் திருப்பதிகம்..

மூன்றாம் திருமுறை
திருப்பதிக எண் - 22


துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும்
நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும்
வஞ்சகமற்று அடி வாழ்த்த வந்த கூற்று
அஞ்ச  உதைத்தன அஞ்செ ழுத்துமே.. 3.022.1

ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேஸ்வரர்

மந்திர நான்மறை யாகி வானவர்
சிந்தையுள் நின்றவர் தம்மை ஆள்வன
செந்தழ லோம்பிய செம்மை வேதியர்க்கு
அந்தியுள் மந்திரம் அஞ்செ ழுத்துமே.. 3.022.2


ஊனில் உயிர்ப்பை ஒடுக்கி ஒண்சுடர் 
ஞான விளக்கினை ஏற்றி நன்புலத்து
ஏனை வழிதிறந்து ஏத்து வார்க்கு இடர்
ஆன கெடுப்பன அஞ்செ ழுத்துமே.. 3.022.3

ஸ்ரீ தஞ்சபுரீஸ்வரர்

நல்லவர் தீயர் எனாது நச்சினர்
செல்லல் கெடச் சிவ முத்தி காட்டுவ
கொல்ல நமன் தமர் கொண்டு போமிடத்து
அல்லல் கெடுப்பன அஞ்செ ழுத்துமே.. 3.022.4


கொங்கலர் வன்மதன் வாளி ஐந்தகத்து
அங்குள பூதமும் அஞ்ச ஐம்பொழில்
தங்கர வின்படம் அஞ்சுந் தம்முடை
அங்கையில் ஐவிரல் அஞ்செ ழுத்துமே.. 3.022.5

ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர்

தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும்
வெம்மை நரகம் விளைந்த போழ்தினும்
இம்மை வினை அடர்த்து எய்தும் போழ்தினும்
அம்மையி னுந்துணை அஞ்செ ழுத்துமே.. 3.022.6


வீடு பிறப்பை அறுத்து மெச்சினர்
பீடை கெடுப்பன பின்னை நாள்தொறும்
மாடு கொடுப்பன மன்னு மாநடம்
ஆடி உகப்பன அஞ்செ ழுத்துமே.. 3.022.7


வண்டம ரோதி மடந்தை பேணின
பண்டை இராவணன் பாடி உய்ந்தன
தொண்டர்கள் கொண்டு துதித்த பின் அவர்க்கு
அண்டம் அளிப்பன அஞ்செ ழுத்துமே.. 3.022.8


கார்வணன் நான்முகன் காணு தற்கொணாச்
சீர்வணச் சேவடி செவ்வி நாள்தொறும்
பேர்வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட்கு
ஆர்வணம் ஆவன அஞ்செ ழுத்துமே.. 3.022.9


புத்தர் சமண்கழுக் கையர் பொய்கொளாச்
சித்தத் தவர்கள் தெளிந்து தேறின
வித்தக நீறணிவார் வினைப் பகைக்கு
அத்திரம் ஆவன அஞ்செ ழுத்துமே.. 3.022.10

ஸ்ரீ வீழிநாதர் - திருவீழிமிழலை

நற்றமிழ் ஞான சம்பந்தன் நான்மறை
கற்றவன் காழியர் மன்னன் உன்னிய
அற்றமில் மாலை ஈரைந்தும் அஞ்செழுத்து
உற்றன வல்லவர் உம்ப ராவரே.. 3.022.11
***
ஸ்ரீ பிரஹதீஸ்வரர்

எல்லாம் வல்ல எம்பெருமானின் திருவருளால்
அகிலம் முழுதிலும் அறம் ஓங்குக..
அன்பு ஓங்குக..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

22 கருத்துகள்:

  1. சிறப்பு.

    அறம் ஒங்க, அன்பு தழைக்க, நோயுற்று வாழ, நிம்மதி நிலவ, நினைத்தது நிறைவேற, நல்லன நினைக்க அஞ்செழுத்து மந்திரம் சொல்வோம்.

    நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. அன்பின் ஸ்ரீராம்..
    தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..

    நோயற்ற வாழ்வில் நிம்மதியுடன் வாழ்வதற்கு வேண்டிக் கொள்வோம்..
    மகிழ்ச்சி.. நன்றி..

    ஓம் நம சிவாய..

    பதிலளிநீக்கு
  3. மக்கள் மஹா சிவராத்திரியின் நலன் பெறுக...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மக்கள் மஹா சிவராத்திரியின் நலன்களைப் பெறட்டும்..

      வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஜி..

      நீக்கு
  4. சிவ தரிசனம் மிக அருமை.
    சிவராத்திரி வழிபாட்டால் மக்கள் துன்பம் நீங்கி இன்பவாழ்வு பெறவேண்டும்.அன்பே சிவம் என்றபடி அன்பு செய்து வாழ்வோம்.

    அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
    அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
    அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
    அன்பே சிவமாய் அமர்ந்தி ருப்பாரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே!..

      அவ்வண்ணமே ஆகுதற்கு பிரார்த்திப்போம்..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. படங்கள் எல்லாம் நல்ல தேர்வு

    பதிலளிநீக்கு
  6. நல்ல அருமையான படங்கள். நல்லதொரு தேர்வு. விரிவான விபரங்கள். ஒவ்வொரு காலத்துக்கும் ஒவ்வொரு ஊர்க்கோயில் என்பதை இன்றே அறிகிறேன். தகவலுக்கு நன்றி. பள்ளி நாட்களில் சிவராத்திரி/வைகுண்ட ஏகாதசி இரண்டையும் அனுபவித்துக் கழித்திருக்கேன். பின்னர் முடியறதில்லை. அவ்வளவு தான். :(

    பதிலளிநீக்கு
  7. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...

    நான்கு காலத்திற்கும் நான்கு கோயில்கள் என்று -
    அன்றைக்கு ஆன்றோர்கள் சொல்லி வைத்தார்கள்..

    அது அங்கே அருகில் இருக்கும் ஊர்க்காரர்களுக்குத் தான் ஒத்து வந்திருக்கும்..

    இப்போது வாகன வசதியுடையோர் நான்கு காலத்திற்கும் நான்கு கோயில்களில் தரிசனம் செய்கின்றனர்..

    சூழ்நிலை அவ்விதம் இயல வில்லை எனில் என்ன செய்வது?..

    அவன் அருளாலே
    அவன் தாள் வணங்குவோம்!..

    அன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றியக்கா..

    பதிலளிநீக்கு
  8. சிறப்பான தகவல்களுடனான பதிவு. அதற்கான படங்களும் அருமை, அண்ணா. சிவ தரிசனம் நன்று.

    சிறு வயதில் சிவராத்திரி அன்று நாம ஜெபம் என்று ஒரு ஊரில் இருந்த போது. எங்கள் ஊரில் சிவராத்திரி என்றால் பெரும்பாலும் திருவிளையாடல், திருவருட்செல்வர் படங்கள் தேரடியில் போடுவார்கள்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      அந்த காலத்தில் சிவராத்திரி, திருவிழா என்றால் திருவிளையாடல், திருவருட் செல்வர், சரஸ்வதி சபதம் போன்ற படங்கள் தானே...

      இப்போதும் உற்சாகம் குறையாத வழிபாடு சிவராத்திரி..

      அன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. நன்னாளில் அதிகமான தகவல்களுடன் சிறப்பான பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்களது வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  10. என் இஷ்டமான இறைவனின் நாள் இன்று, ஒவ்வொரு கால பூஜைக்கும் ஒவ்வொரு கோயில் என்பதை புதியதாய் அறிகிறேன்.

    இன்று விரதம். பூஜை முடித்து, கோயிலுக்குச் சென்று எல்லா கால பூஜையும் வழிபடுவதுண்டு. இன்றைய நாளில் சிறப்பான பதிவும் தரிசனமும். மிக்க நன்றி

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் துளசிதரன்..

      சிவராத்திரியில் ஒவ்வொரு காலத்துக்கு ஒரு கோயில் என்பது பற்றி ஆறேழு ஆண்டுகளுக்கு முன் எழுதியிருக்கின்றேன்..

      தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  11. ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!

    பதிலளிநீக்கு
  12. தகவல்கள் சிறப்பு. ஓம் நமசிவாய.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      ஓம் சிவாய நம ஓம்..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..