செவ்வாய், நவம்பர் 16, 2021

நலமே வாழ்க..


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
முதற்கண்
வலைத்தள உறவுகள்
அனைவருக்கும்
நன்றி..


பதினைந்து நாட்களுக்கு முன்..

" தலைவலி மாத்திரை இருக்கின்றதா?.. " - எனக் கேட்டுக் கொண்டு சமையல் களப் பணியாளர்..

" இருக்கின்றதே!.. "
-  என்றபடி இரண்டு மாத்திரைகளைக் கொடுத்தேன்...

அவை சாதாரணமாக தலைவலி காய்ச்சல் இவற்றுக்குக்கானவை..

அவருக்கு மிகவும் சந்தோஷம்..

அவர் அங்கிருந்து சென்றதும் பின்னாலேயே இன்னும் சிலர்..
" எனக்கும் கொடுங்க! .. " - என்று..

கைப்பையில் வைத்திருந்த அனைத்தையும் கொடுத்து விட்டேன்..
இந்த மாத்திரைகள் நான் வாங்கியவை..

ஓராண்டுக்கு முன் பணி செய்த இடத்தில் முதலுதவிப் பெட்டி இருக்கும்.. அதில் மாத்திரைகள் பிளாஸ்டர்கள்
எல்லாமும் இருக்கும்..

 இருந்தாலும் யாருக்கும் கொடுக்கக் கூடாது... என்றொரு வறட்டு வாதம்..

ஊழியர்களுக்கு மாத்திரைகளைக் கொடுத்தால் அதே வேலையாக இருப்பார்கள்..
வேலை நடக்காது.. என்பது நடைமுறை..


மனம் பொறுக்கவில்லை.. சொந்த செலவில் தலைவலி மாத்திரைகளையும் தைலங்களையும் பிளாஸ்டர்களையும் தருவது எனக்கு வழக்கமாகிப் போனது..
இதனால் அங்கு பெரிதாக பிரச்னை ஏதும் ஏற்படவில்லை..

இப்படியாக  
சில தினங்களுக்கு முன் காய்ச்சல் மாத்திரை கொடுத்த சந்தர்ப்பத்தில் தான் எவரிடமிருந்தோ எனக்குத் தொற்றி இருக்கின்றது..

இதனை மிகவும் சிரமப்பட்டு காய்ச்சல் சளித் தொல்லையைக் கட்டுக்குள் கொண்டு வந்தேன்..

இந்நிலையில் உடல் நிலை சரியாக இருக்கின்றது என நினைத்துக் கொண்டு சென்ற வியாழனும் வெள்ளியும் மதிய உணவில் மோர் சேர்த்துக் கொண்டேன்..
வந்தது வினை..

உள்ளே ஒளிந்திருந்த கிருமிகள் விழித்துக் கொண்டன..
அதன் பிறகு உபத்திரவம் தான்..

தற்போது
நெஞ்சில் சளி கரையாமல் உறைந்து கிடக்கின்றது.. அது தான் பிரச்னை.. 
மூக்கினுள் ரணமாகி இருப்பது போல் உணர்வு..

மூன்று நான்கு நாட்களாக வெது வெதுப்பான குடிநீர் தான்..

நேற்று மதியத்திலிருந்து காய்ச்சல் சற்று குறைந்திருக்கின்றது.... இப்படியே நலமாகி விட்டால் நல்லது..

மற்றபடி உடல் நலனில் மிகுந்த கவனம் கொண்டிருப்பவன்.. காய்ச்சல் இருந்த போதிலும் தினசரி அதிகாலை மூன்றரைக்கு எழுந்து குளித்து விட்டு வேலைக்குச் செல்வதில் தவறவில்லை..

ஏதோ கெரகம்..

இவ்வேளையில், 
பதிவின் வழியாக நலம் கேட்டு ஆறுதல் கூறிய அனைவரது பிரார்த்தனைக்கும் நெஞ்சார்ந்த நன்றி..
மீண்டும்.. மீண்டும்!..


நாயினும் கடைப்பட்டேனை நன்னெறி காட்டியாண்டாய்
ஆயிரம் அரவம் ஆர்த்த அமுதனே அமுதம் ஒத்து
நீயும்என் நெஞ்சுள்ளே நிலாவினாய் நிலாவி நிற்க
நோயவை சாரும் ஆகில் நோக்கி நீ அருள் செய்வாயே..(4/76)
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

8 கருத்துகள்:

  1. சீக்கிரம் நலம்பெற வேண்டுகிறேன்.  இங்கு சென்னையிலும் 90 சதவிகிதம் பேர்களை வாட்டுவது அந்த சளியும் இருமலும்தான்.  என்ன மருந்து சாப்பிட்டாலும் அப்படியே இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  2. விரைவில் நலம் பெறப் பிரார்த்திக்கிறேன். சுக்கு, மிளகு, திப்பிலி, அதிமதுரம், சித்தரத்தை இவை கிடைத்தால் ஒன்றிரண்டாகத் தட்டிப் போட்டுக் கஷாயம் வைத்துக் குடியுங்கள். பொடியாகக் கிடைத்தாலும் வெந்நீரில் போட்டுச் சாப்பிடலாம். உடனடியாக குணம் தெரியும். பிரார்த்தனைகள் எப்போதும்.

    பதிலளிநீக்கு
  3. விரைவில் நலம் அடைய பிரார்த்தனைகள்.
    எல்லோருக்கும் மருத்து கொடுத்து உதவி இருக்கிறீர்கள்.

    நல்ல உள்ளத்துக்கு நலமே எல்லாம்.

    அவ்வினைக்கு இவ்வினை தேவாரம் பாடுங்கள்

    பதிலளிநீக்கு
  4. விரைவில் நலம் பெற எனது பிரார்த்தனைகளும்.

    நலமே விளையட்டும்.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    விரைவில் பூரண நலம் பெற எனது பிரார்த்தனைகளும்.

    நல்ல உள்ளத்துடன் நல்லது செய்யும் போது நன்மைகள்தான் விளையும். தீமை நம்மை அண்ட சாத்தியமில்லை. கடவுள் என்றும் துணையிருப்பார். நன்றி.

    அன்புடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. நலம் பெற வேண்டுகிறேன் ஜி

    பதிலளிநீக்கு
  7. உடல் நலம் தேற பிரார்த்தனைகள்.
    கடுகு எண்ணெயை லேசாக சூடாக்கி உள்ளங்கை, உள்ளங்கால்களில் தேய்த்துக் கொண்டு படுத்துக் கொள்ளவும்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..