நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்
***
நேற்று முதற்கொண்டு
சஷ்டிப் பெருவிரதம்
தொடங்கியுள்ளது..
நாடெங்கும்
தீநுண்மியின் பரவல்
முற்றாகக் குறையாத நிலையில்
இந்த வருடமும்
திருச்செந்தூரில்
சூர சம்ஹாரத் திருவிழா
தடை செய்யப்பட்டுள்ளது..
சூர சம்ஹாரம் என்பது
நம்முள் மண்டிக் கிடக்கும்
ஆணவ, மாயா, கன்ம மலங்களை
வேரறுத்தல் என்பர்
ஆன்றோர்..
சாமானியராகிய நமக்கு
அந்நிலை எவ்விதம் கைகூடும் என்பதற்கு
இறைவனின் திருவடிகளைச்
சரணடைதல்
என்பதே விடை..
அவன் அருளாலே
அவன் தாள் வணங்கி -
என்பார் மாணிக்க வாசகர்..
அந்த வகையில்
அசுரப் பெருங்கூட்டத்தை
அழித்தொழித்த
அறுமுகப் பெருமானின்
அடிதொழுது அவனருளை
வேண்டி நிற்போம்..
சஷ்டி விரதத்தின்
இரண்டாம் நாளாகிய இன்று
சிந்தைக்கு விருந்தாக
இனியதொரு திருப்புகழ்
***
அவனிதனிலே பிறந்து மதலையெனவே தவழ்ந்து
அழகுபெறவே நடந்து - இளைஞோனாய்
அருமழலையே மிகுந்து குதலை மொழியே புகன்று
அதிவிதமதாய் வளர்ந்து - பதினாறாய்
சிவகலைகள் ஆகமங்கள் மிகவுமறை ஓதும் அன்பர்
திருவடிகளே நினைந்து - துதியாமல்
தெரிவையர்கள் ஆசை மிஞ்சி வெகுகவலை யாய் உழன்று திரியும்
அடியேனை உன்றன் - அடிசேராய்
மவுன உபதேச சம்பு மதியறுகு வேணி தும்பை
மணிமுடியின் மீத ணிந்த - மகதேவர்
மனமகிழவே அணைந்து ஒருபுறம் அதாக வந்த
மலைமகள் குமார துங்க - வடிவேலா
பவனிவரவே உகந்து மயிலின்மிசையே திகழ்ந்து
படியதிரவே நடந்த - கழல்வீரா
பரமபதமே செறிந்த
முருகன் எனவே உகந்து
பழநிமலை மேல் அமர்ந்த - பெருமாளே..
***
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா..
வீரவேல் முருகனுக்கு
அரோகரா..
***
கந்தா சரணம். முருகா சரணம்.
பதிலளிநீக்குஇந்த் திருப்புகழ் படிக்கும் போது கண்ணிலிருந்து கண்ணீர் வரும்.
பதிலளிநீக்குவெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
அழகான திருப்புகழ்! பகிர்ந்தமைக்கு நன்றி.
பதிலளிநீக்குமனதில் நிற்கும் திருப்புகழ்
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. கந்தன் புகழையும், திருப்புகழும் அறிந்து/பாடி மகிழ்ந்தேன். ஐப்பசி மாதத்தில் வரும் இந்த கந்த சஷ்டி திருநாளில் முருகனை சரணடைந்து இனிய வாழ்வு பெறுவோம். அவனன்றி வேறு துணையில்லை. சரணம் சரணம் முருகா சரணம்.. கந்தா சரணம்.
பகிர்வினுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
திருப்புகழ்ப் பகிர்வுக்கு மிக்க நன்றி. தேவர்கள் சேனாபதியே போற்றி.
பதிலளிநீக்கு