நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
புரட்டாசி மாதத்தின் மூன்றாவது
சனிக்கிழமையாகிய இன்றைய பதிவில்
ஸ்ரீ பொய்கையாழ்வார் அருளிச் செய்த
மூன்றாம் திரு
அந்தாதியின்
திருப்பாசுரங்களுடன்
தேரழுந்தூர்
ஸ்ரீ ஆமருவியப்பன்
திவ்ய தரிசனம்..
ஸ்ரீ பேயாழ்வார் அருளிச்செய்த மூன்றாம் திருவந்தாதி
திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணிநிறமும் கண்டேன் - செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரி சங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன்பால் இன்று... 2282
மனத்துள்ளான் மாகடல்நீ ருள்ளான் மலராள்
தனத்துள்ளான் தண்டுழாய் மார்பன் - சினத்துச்
செருநர்உகச் செற்றுகந்த தேங்கோத வண்ணன்
வருநரகம் தீர்க்கும் மருந்து.. 2284
கழல்தொழுதும் வாநெஞ்சே கார்கடல்நீர் வேலை
பொழிலளந்த புள்ளூர்திச் செல்வன் - எழிலளந்தங்
கெண்ணற் கரியானை எப்பொருட்கும் சேயானை
நண்ணற் கரியானை நாம்.. 2288
நாமம் பலசொல்லி நாராய ணாவென்று
நாமங்கை யால்தொழுதும் நன்னெஞ்சே - வா மருவி
மண்ணுலக முண்டுமிழ்ந்த வண்டறையும் தண்டுழாய்
கண்ணனையே காண்கநங் கண்.. 2289
வாய்மொழிந்து வாமனனாய் மாவலிபால் மூவடிமண்
நீயளந்து கொண்ட நெடுமாலே - தாவியநின்
எஞ்சா இணையடிக்கே ஏழ்பிறப்பும் ஆளாகி
அஞ்சா திருக்க அருள்.. 2299
கைய கனலாழி கார்க்கடல்வாய் வெண்சங்கம்
வெய்ய கதை சார்ங்கம் வெஞ்சுடர் வாள் - செய்ய
படைபரவ பாழி பனிநீ ருலகம்
அடியளந்த மாயன்
அவற்கு.. 2317
அவனே அருவரையால் ஆநிரைகள் காத்தான்
அவனே யணிமருதம் சாய்த்தான் - அவனே
கலங்காப் பொருநகரம் காட்டுவான் கண்டீர்
இலங்கா புரமெரித்தான்
எய்து.. 2332
தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்
சூழரவும் பொன்னாணும் தோன்றுமால் - சூழும்
திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு
இரண்டுருவு மொன்றாய் இசைந்து... 2344
***
இன்று
அக்டோபர் 2.
அன்பின் வழி நின்ற
மகாத்மா பிறந்த நாள்..
தன் குடும்பத்திற்கு
கஷ்டம் ஒன்றையே
விட்டுச் சென்ற
லால் பகதூர் சாஸ்திரி
பிறந்த நாள்..
ஏழ்மையில் பிறந்து
ஏழ்மையில் வளர்ந்து
தமிழகத்தின்
முதலமைச்சராகத்
தொண்டாற்றிய
பெருந்தலைவர்
அமரத்துவம் அடைந்த
நாள்..
இத்தகைய நல்லோர்களை
இப்புண்ணிய பாரதத்திற்கு
மீண்டும் தருவாய்
ஹரி நாராயணா!..
ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய நம..
ஃஃஃ
கோவிந்த தரிசனம் அருமை. கோவிந்தா, கோவிந்தா! நினைவு கூர்ந்த நல்லோருக்கு அஞ்சலிகள்.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றியக்கா...
நீக்குதரிசனம் நன்று ஜி வாழ்க நலம்.
பதிலளிநீக்குஅன்பின் ஜி..
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...
புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை பதிவு அருமை.
பதிலளிநீக்குஅருமை...
பதிலளிநீக்குவாழ்க நலம்..
நீக்குமகிழ்ச்சி.. நன்றி..
கோவிந்தா கோவிந்தா என்று சொல்லி தரிசனம் செய்தேன்.
பதிலளிநீக்கு//கோவிந்த நாம சங்கீர்த்தனம்
குடிகொண்ட நெஞ்சில்தான்
பெரும் ஆலயம்//
என்ற பாடல் நினைவுக்கு வந்தது.
பதிவு அருமை.
காந்தி, காமராஜர், லால்பகதூர் சாஸ்திரியை நினைவு கொண்டு வணங்குவோம்.
தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. புரட்டாசி மூன்றாம் சனி கிழமைக்கு பகிர்ந்த ஸ்ரீமன்நாராயணனின் படங்கள் கண்களுக்கும், மனதுக்கும் அருமையாக இருந்தது. கோவிந்தா, கோவிந்தா என நாம் மனமாற துதிக்கும் போது நாம் செய்த கோடி பாவங்கள் விலகிப் போகும். தித்திக்கும் பாசுரங்களுடன், அருளமுதம் நிறைந்த "அவன்" படங்களை தரிசித்துக் கொண்டேன். கோவிந்தன் அனைவரையும் நோயின்றி, குறையின்றி காத்து ரடசிக்கட்டும் என பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
தேச தலைவர்களை நினைவு கூர்ந்ததும் நன்று. அவர்களையும் வணங்கிப், போற்றுவோம். நேற்று என்னால் வலைப்பக்கம் வர இயலவில்லை. அதனால் இந்தப் பதிவுக்கு வர தாமதமாகி விட்டது வருந்துகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்களது வருகையே எனக்கு மகிழ்ச்சி... தாமதமாக வருவதனால் ஒரு குறையும் இல்லை..
நீக்குஅன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி. நன்றி.
சிறப்பாக இருக்கிறது அண்ணா. தாழ்சடையும் பார்த்தாலே உடன் எம் எஸ் சுப்புலக்ஷ்மி அவர்களின் குரல் நினைவுக்கு வந்துவிடும்.
பதிலளிநீக்குகீதா
தேரழுந்தூர் பல முறை சென்றுள்ளேன். உங்கள் பதிவு மூலமாக தற்போது சென்ற உணர்வு. நன்றி.
பதிலளிநீக்கு