திங்கள், ஆகஸ்ட் 02, 2021

ஆடிக் கிருத்திகை

       

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடிக் கிருத்திகை..


முருகனுக்குரிய
விரத நாள்..

சரவணத்தில் உதித்த
சண்முகப் பெருமானை
சீராடிப் பாராட்டி வளர்த்த
தேவ கன்னியர் அறுவரும்
விண்மீன்களாகும் படிக்கு
சிவபெருமான் ஆசியளித்த
நன்னாள்..

கார்த்திகைக் கன்னியர்
அறுவரது பெயர்கள் -
நிதர்த்தனி, அபரகேந்தி, மேகேந்தி, வர்தயேந்தி, அம்பா, துலா என்பவனவாகும்..

கார்த்திகை நாளில்
விரதம் இருந்து
கந்தனைத் துதிப்பவர்கள்
அனைத்து நலன்களையும்
எய்துகின்றனர் என்பது
நிதர்சனம்..

இன்றைய நாளில்
கந்தனை வந்தித்து
சிந்திப்பதற்கு
திருப்புகழ் பாடல் ஒன்று..


அவனிதனிலே பிறந்து மதலை எனவே தவழ்ந்து
     அழகுபெறவே நடந்து -  இளைஞோனாய்

அருமழலையே மிகுந்து குதலை மொழியே புகன்று
     அதி விதமதாய் வளர்ந்து - பதினாறாய்

சிவகலைகள் ஆகமங்கள் மிகவும் மறை யோதும் அன்பர்
     திருவடிகளே நினைந்து -  துதியாமல்

தெரிவையர்கள் ஆசை மிஞ்சி வெகுகவலையாய் உழன்று
     திரியும் அடியேனை உன்றன் - அடி சேராய்..


மவுன உபதேச சம்பு மதியறுகு வேணி தும்பை
     மணிமுடியின் மீத ணிந்த -  மகதேவர்

மனமகிழவே அணைந்து ஒருபுறம தாக வந்த
     மலைமகள் குமார துங்க - வடிவேலா

பவனி வரவே உகந்து மயிலின் மிசையே திகழ்ந்து
     படியதிரவே நடந்த - கழல்வீரா

பரமபதமே செறிந்த முருகன்
னவே உகந்து
     பழநிமலை மேல் அமர்ந்த - பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-


ஆறிரு தடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்க வெற்பைக்
கூறு செய் தனிவேல் வாழ்க
குக்குடம் வாழ்க செவ்வேள்
ஏறிய மஞ்ஞை வாழ்க  யானைதன்
அணங்கு வாழ்க 
மாறிலா வள்ளி வாழ்க  வாழ்க
சீரடியார் எல்லாம்..

வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா..
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
***

13 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்களது வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    ஆடிக் கிருத்திகை சிறப்பு பதிவு அருமையாக உள்ளது. தாயின் மடியில் பாலமுருகன், மற்ற முருகன் படங்கள் கண்களுக்கு விருந்து. அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பாடி மகிழ்ந்தேன். முருகா சரணம் என துதிப்போர்க்கு முக்காலமும் சங்கடங்கள் இல்லை. அவன் அருள் தினமும் வேண்டி நானும் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.🙏. அழகான பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. மனதிற்கு நிறைவினைத் தருகின்ற சிறப்பான பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. பகிர்ந்த இந்த திருப்புகழ் பாடல் இப்போது வாட்ஸ் அப்பில் வலம் வருகிறது. மிக அருமையான பாடல். ஒவ்வொரு கிருத்திகைக்கும் மாயவரத்தில் இருக்கும் போது வைத்தீஸ்வரன் கோயில். மதுரை வந்த பின் பழமுதிர்ச்சோலை போய் வந்தது நினைவுகளில். முருகன் எல்லோருக்கும் நலம் தர வேண்டும்.
    முருகா சரணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      வாழ்க வையகம்..

      நீக்கு
  5. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்களது வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. ஆறுமுகம் பன்னிரு கரங்களால் நம்மைக் காக்கட்டும்.  ஆடிக் கிருத்திகையைக் கொண்டாடுவோம்.  கொரோனா இல்லாவிட்டால் கோவில்கள் இன்று எப்படி ஜேஜே என்றிருக்கும் என்று எண்ணிப்பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்.
      தங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. ஆடிக் கிருத்திகை - வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..