நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஆடி மாதத்தின்
இரண்டாவது வெள்ளிக்கிழமை
இன்று..
ஆடி வெள்ளிக்கிழமைகள்
பெண்மை சிறப்பிக்கப்படும்
நாட்களும் ஆவன..
இந்நாளில்
அம்பிகையின்
அருட்கோலங்களை
சிந்தித்திருப்போம்...
கலையாத கல்வியும் குறையாத வயதும்
ஓர் கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழுபிணி இலாத உடலும்
சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு
துன்பம் இல்லாத வாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே
ஆதிகட வூரின் வாழ்வே
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி அபிராமியே..
கண்ணியது உன் புகழ் கற்பது உன் நாமம் கசிந்து பத்தி
பண்ணியது உன் இரு பாதாம்புயத்தில் பகல் இரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து நான் முன்செய்த
புண்ணியம் ஏது? என் அம்மே புவி ஏழையும் பூத்தவளே.. (012)
நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து
நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய் நின்னை உள்ள வண்ணம்
பேயேன் அறியும் அறிவு தந்தாய் என்ன பேறு பெற்றேன்
தாயே மலைமகளே செங்கண் மால் திருத் தங்கச்சியே.. (061)
-: ஸ்ரீ அபிராமி பட்டர் ;-
***
அம்பிகையைச் சரணடைந்தால்
அதிக வரம் பெறலாம்..
-: மகாகவி :-
***
ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம்..
***
அபிராமி அந்தாதி பாடி அபிராமியை வணங்கி கொண்டேன்.
பதிலளிநீக்குஅம்பிக்கையைச் சரணடைந்தால் அதிகம் வரம் பெறலாம் பாடல் பிடித்த பாடல் மகா கவி பாடலில்.
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்.
அருமை...
பதிலளிநீக்குஅம்பிகையைச் சரணடைந்து கொண்டாடுவோம்.
பதிலளிநீக்குஆடி இரண்டாம் வெள்ளிக்கான பதிவு நன்று.
பதிலளிநீக்குநாடு நலம் பெறட்டும் வாழ்க நலம்.
பதிலளிநீக்குஆடி வெள்ளிப் பதிவு சிறப்பு. போன வெள்ளியன்று இத்தனை பிரச்னைகளோடு பிள்ளையாருக்குப் பிரார்த்தனைகளை நிறைவேற்றினேன். அடுத்த வெள்ளிக்கும் இப்படி ஓர் விஷயம் இருக்கு. நல்லபடி நிறைவேறணும். எல்லாம் அந்த அம்பிகை கைகளில் விட்டு விட்டேன்.
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவும். அம்மன் படங்களும் அழகு. ஆடி இரண்டாம் வெள்ளிக்கிழமைக்கான அம்மன் பதிவு சிறப்புடன் உள்ளது. அபிராமியை பக்தியுடன் வணங்கிக் கொண்டேன். அபிராமி அந்தாதி பாடி மகிழ்ந்தேன். அம்பிகையின் அருள் அனைவருக்கும் பரிபூரணமாக கிடைக்க எனது பிராத்தனைகளையும் அவள் பாதத்தில் பணிவுடன் சமர்ப்பித்து கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நாயேனையும் என்ற சொல்லைக் கண்டபோது நாயிற்கடையேனையும் என்ற நாயன்மார் பாடல் நினைவிற்கு வந்தது. அம்மை நம்மை ஈடேற்றுவாள். திருத்தங்கச்சியே என்பது ஓர் இடத்தைக் குறிக்கிறதா? தங்கை என்ற பொருளில் வந்துள்ளதா? அறிய விரும்புகிறேன்.
பதிலளிநீக்குதிருமாலின் தங்கை என்ற பொருளில் இங்கு வந்துள்ளது என நினைக்கிறேன்.
பதிலளிநீக்கு