செவ்வாய், ஏப்ரல் 20, 2021

அன்புள்ள நெஞ்சம்

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்றைய பதிவில்
அழகான காணொளி ஒன்று..


காக்கை குருவி எங்கள் ஜாதி.. என்றார் மகாகவி..

சிற்றுயிர்களைப் புரத்தல்
மிகப் பெரிய தர்மம்..

கரவாது கரையும் காக்கை
தனக்கு உணவளிப்பவர் சொல்கேட்டு உண்ணும் அழகே அழகு..

அந்த எளிய ஜீவனுடன் பேசியபடி உணவளிக்கும்
அன்பு நெஞ்சத்திற்கு
வணக்கம்
***

இக்காணொளியைக் கண்டதும் மதிப்புக்குரிய ஸ்ரீமதி கோமதி அரசு அவர்கள் தான் எனது நினைவுக்கு வந்தார்கள்..

காக்கை கரவாது கரைந்து உண்ணும் ஆக்கமும் அன்னநீரார்க்கே உள..

வாழ்க வையகம்.. வாழ்க வளமுடன

ஃஃஃ

12 கருத்துகள்:

  1. இந்த காக்கை தமிழக காக்கை அல்ல! மும்பை வாலா போல ஆகவேதான் மோடிக்கு பிடித்தமான ஹிந்தி பேசுது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..

      தங்களது தளம் இங்கே திறப்பதில்லை..
      தங்களது தளத்திற்கு வர இயலாததற்கு மன்னிக்கவும்.. நன்றி..

      நீக்கு
  2. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி... நன்றி..

      நீக்கு
  3. நம்மூர்ல ஹை ஹை என்றால் விரட்டுகிறார்கள் என்றெண்ணிப் பறந்து விடும்.  அங்கே பாஷை அதுதான் என்று அதற்கும் தெரிந்திருக்கிறது.    தமிழில் பேசினால்தான் அதற்குப் புரியாது போல!  ஆனால் அன்பிற்கு எது பாஷை!  எவ்வளவு புரிந்துகொண்டு செயல்படுகிறது.  ஆச்சர்யம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. வா.. இரு..சத்தம் போடாதே.. என்று தான் சொல்கின்றார்கள்.. அதை அந்தக் காக்கை புரிந்து கொள்கின்றது.. வியப்பு..

      நன்றி..

      நீக்கு
  4. நல்லதொரு காணொளி. முன்னரே பார்த்திருக்கிறேன். மீண்டும் பார்க்கத் தந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      நான் இப்போது தான் இக்காணொளியைப் பார்க்கிறேன்... தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    காணொளி அருமை. காக்கை அவர்கள் அன்புக்கு கட்டுப்பட்டு பிஸ்கட்டை வாங்கிக் கொள்வதும், அதை தண்ணீரில் நனைத்து சாப்பிடுவதுமாக காணொளி நன்றாக உள்ளது. உணவு கொஞ்சம் கடினமானதாக இருந்தால் அதை நீரில் நனைத்து சாப்பிடுவதையும் முன்பு நேரடியாக பார்த்துள்ளேன். இன்றும் அவர்கள் சொல்படி கேட்டு நடப்பதும், அவர்கள் பேசும் பாஷையை புரிந்து கொள்வதும், ஆச்சரியமாக உள்ளது. அன்பான பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
      சாதாரணமாக காக்கை மனிதருடன் நெருங்கிப் பழகாது.. ஆனால் இது மிகவும் ஆச்சர்யம்..

      அன்பின் கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  6. அருமையான காணொளி . என்ன உணவு வைத்தாலும் தண்ணீரில் கழுவிதான் சாப்பிடும் காக்கா. இங்கே வா என்றால் வருகிறது. முட்டை கொடுக்கிறார்கள் சாப்பிடுகிறது பார்க்க அழகாய் இருக்கிறது. தினம் வைக்கும் நேரம் வந்து விடும். காலியாக இருந்தால் வீட்டுக்குள்ப் பார்த்து குரல் கொடுக்கும். நேரத்திற்கு உணவு வைக்கும் வீட்டையும் மனிதர்களையும் பார்க்க வருவது , பேசுவது காகத்தின் இயல்பே. சத்தம் போடாதே என்றால் அமைதி ஆகி விடுவது வியப்புதான்.

    என் அம்மா 12 மணிக்கு மதியம் காக்காவிற்கு வைத்து விட்டுதான் சாப்பிடுவார்கள். அம்மா உடல் சுகமில்லாமல் படுத்து இருந்த காலத்திலும் காகத்திற்கு உணவு வைத்து விட்டீர்களா என்று கேட்டு விட்டுதான் சாப்பிடுவார்கள்.

    அந்த ஊர் காகம் அந்த ஊர் மொழிதானே பேசும்.
    காணொளியைப் பார்த்ததும் என் நினைப்பு வந்ததது அறிந்து மகிழ்ச்சி, நன்றி.

    பதிலளிநீக்கு
  7. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..

    தினசரி குளிக்கும் வழக்கத்தினை உடையது காக்கை... சத்தம் போடாதே - என்றதும் அமைதியாக இருப்பது ஆச்சர்யம்..

    நம்முன்னோர்கள் காக்கையை சாதுர்யமான பறவை என்று சும்மாவா சொல்லி வைத்தார்கள்!..

    மகிழ்ச்சி.. நன்றி..

    வாழ்க வையகம்..

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..