வியாழன், மார்ச் 18, 2021

குரு தரிசனம்

          

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

கடந்த வியாழன்று
எங்கள் பிளாக்கில்
அன்பின் ஸ்ரீராம் அவர்களது
பதிவுக்குக் கருத்துரை இடும்போது
அப்படி இப்படி சுற்றிக் கொண்டு
தஞ்சை வடவாற்றின் தென்கரையில் விளங்கும்
ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளது
ப்ருந்தாவனத்தைப் பற்றிச்
சொல்ல வேண்டியதாயிற்று..


கருத்துரைகளின்
ஊடாக சொல்லப்பட்டிருந்த
அதனைப் பற்றி அடுத்தடுத்த
நாட்களில் சிந்தனை..


ஞாயிறன்று காலை
எனது Fb யில்
ஆனந்த அலைகளாக
ஸ்ரீ ஸ்வாமிகள் விளங்கும்
தஞ்சை ப்ருந்தாவனத்தின்
திருக்காட்சிகள்
தரிசனம் ஆகின..



ஸ்வாமிகள்
தஞ்சை வடவாற்றின் கரையில்
சந்நியாசம் (1621) ஏற்ற பிறகு
பன்னிரண்டு ஆண்டுகள் தவம் இருந்திருக்கின்றார்கள்...

பின்னாளில் அந்த இடத்தை
அறிய இயலாமல் அன்பர்கள்
தவித்த போது
ஐந்தலை அரவு ஒன்று
அங்கே தோன்றி
ஸ்வாமிகள் தவமிருந்த
இடத்தை மண்டலமிட்டுக்
காட்டியதாக வரலாறு..


மேற்கூரையில்லாமல்
விளங்குகின்ற
ப்ருந்தாவனத்தின் பீடத்தின் கீழ்
ஐந்தலை அரவின்
ஸ்வரூபத்தினைத்
தரிசிக்கலாம்...


ஸ்ரீ ராகவேந்த்ர ஸ்வாமிகள் தான்
அவ்விதம் தோன்றியருளினார் என்றும் போற்றுகின்றனர்...

ஸ்ரீ ப்ருந்தாவனத்தின்
அலங்காரத் திருக்காட்சிகளை
இன்று பதிவு செய்வதில்
மகிழ்ச்சியடைகின்றேன்..



அழகிய படங்களை வலையேற்றிய
( Thanjavur Ragavendraswamy Brindavanam)அன்பர்களுக்கு
நெஞ்சார்ந்த நன்றி..
***
தஞ்சை பழைய பேருந்து 
நிலையத்திலிருந்து
சீனிவாச புரம் வழியாக
பூதலூர் செல்லும் பேருந்துகள்
ஸ்ரீ ராகவேந்திர பிருந்தாவனம்
வழியாகச் செல்கின்றன..

வியாழக் கிழமைகளில்
சிவகங்கைப் பூங்கா கோட்டை
வாசலில் இருந்து ஆட்டோக்கள்
இயக்கப்படுகின்றன...


பூஜ்யாய ராகவேந்த்ராய
சத்ய தர்ம ரதாய ச பஜதாம்
கல்ப வ்ருக்ஷாய நமதாம்
காமதேனவே..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

18 கருத்துகள்:

  1. மிகுந்த ஆச்சர்யம் என்ன என்றால் அந்த சிந்தனையில் இருந்து அதைத் தேடிக் கொண்டிருக்கும்போது அது தானாக கண்ணில் படுவதுதான்.  

    ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்களுக்கு நல்வரவு.. மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. தரிசனத்தோடு கூடிய தகவல்கள் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்களது வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    அருமையான பதிவு. நாம் ஒன்றை நினைக்கும் போது தெய்வ சங்கல்பமாய் அது நம்மை வந்தடைவது மெய் சிலிர்க்கும் நிகழ்வு. அதை தாங்கள் பெற்றிருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி.

    இந்த குரு வாரத்தில் என் மானசீக குருவின் படங்கள் அனைத்தையும். விபரங்களையும் பக்தியுடன் தெரிந்து கொண்டேன். நான் தினமும் சொல்லும் ஸ்ரீ ராகவேந்திரா ஸ்லோகம் இது. இப்போது என் பேத்தியும் இதை என்னுடன் கூறுகிறாள்.ஸ்ரீ ராகவேந்திரர் அருள் அனைவருக்கும் கிடைக்க அவரை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குரு ராயரின் திருவருளால் எங்கும்
      நலமும் வளமும் நிறையட்டும்..

      தங்களது அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. சிறப்பான தகவல்கள்.

    ஸ்ரீராகவேந்திரர் அனைவருக்கும் அருள் புரியட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. பதில்கள்
    1. அன்பின் தனபால்..
      தங்களது வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. நல்ல தகவல்கள். ராகவேந்திரர் தவம் செய்த இடம். நிச்சயம் அடுத்த முறை தஞ்சை செல்லும்போது சேவிக்கும் வாய்ப்பு கிட்டணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெல்லை..
      தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. ராகவேந்திரர் பிறந்த ஊர் புவனகிரியில் இருக்கும் பிருந்தவனத்திற்கு என் தோழியுடன் மாயவரத்தில் இருக்கும் போது போய் இருக்கிறேன்.
    தட்டச்சு கற்றுக் கொள்ளும் போது சொல்லி கொடுத்த ஆசிரியர்

    //பூஜ்யாய ராகவேந்த்ராய சத்ய தர்ம ரதாயச |
    பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம் காமதேனவே ||//

    இந்த மந்திரத்தை சொல்லி தந்தார் . படமும் கொடுத்தார்.

    இன்று உங்களின் அனுபவ பகிர்வாய் ராகவேந்திரர் தவம் செய்த இடத்தின் தரிசனம் கிடைத்து விட்டது மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      தஞ்சையில் இருந்தும் ஸ்ரீ ப்ருந்தாவனத்துக்கு ஒரு முறை தான் சென்றிருக்கிறேன்... ஊருக்குத் திரும்பியதும் தரிசிக்க வேண்டிய தலங்கள் பல உள்ளன... ஸ்வாமிகளின் திருவருளால் மந்த்ராலயம் தரிசனம் செய்ய வேண்டும்..

      அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..


      நீக்கு
  8. இது எப்படிக்கண்களில் படாமல் போனதுனு புரியலை. புவனகிரிக்கும் போயிருக்கோம். மந்த்ராலயமும் போயிருக்கோம். மந்த்ராலயம் 2,3 தரம் போக நேர்ந்தது. அருமையான தரிசனம். தஞ்சை ப்ருந்தாவனம் போனதில்லை. கும்பகோணத்தில் இவருடைய குருவின் ப்ருந்தாவனம் போனோம்னு நினைவு. அம்பத்தூரில் எங்க வீடு இருந்த தெருவுக்கு 2 தெருக்கள் தள்ளி ஸ்ரீராகவேந்திரருடைய ப்ருந்தாவனம் அமைக்கப்பட்டுள்ளது. எண்பதுகளில் அமைக்கப்பட்டது. நடிகர் ரஜினிகாந்த் பண உதவி செய்ததாகச் சொல்லுவார்கள். ஆராதனையின் போது பிரபலங்கள் கச்சேரி, கதாகாலட்சேபம் என நடைபெறும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      நான் மனதளவில் மிகவும் சோர்ந்திருக்கின்றேன்.. தங்களது வருகையும் கருத்துரையும் உற்சாகத்தை அளிக்கின்றன...

      குருராயரின் ஆசியால் அனைவரும் நலமாக இருக்க வேண்டும்...

      மகிழ்ச்சி.. நன்றியக்கா...

      நீக்கு
    2. @துரை, அம்மாவின் உடல் நலமாக இருக்கு தானே? ஒண்ணும் பிரச்னை இல்லையே? உங்கள் அலுவலகப் பளு காரணமா? எப்படியானாலும் உங்கள் மன/உடல் நலனுக்காக இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

      நீக்கு
  9. அக்கா... உங்கள் பிரார்த்தனைகளால் அனைவரும் நலமே!... கோவிந்தன் அருளால் குறையொன்றும் இல்லை....

    ஆனலும் ஏதேதோ உளைச்சல்...
    கடந்து விடும்... இதுவும் கடந்து விடும்...

    தங்களது அன்பினுக்கு மகிழ்ச்சி.. நன்றி..
    வாழ்க வையகம்...

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..