தமிழமுதம்
யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு..(127)
***
அருளமுதம்
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை
உற்று வணங்கித் தொழுமின் உலகேழும்
முற்றும் விழுங்கும் முகில்வண்ணம் - பற்றி
பொருந்தாதான் மார்பிடந்து பூம்பா டகத்துள்
இருந்தானை ஏத்துமென் நெஞ்சு..(2275)
-: பூதத்தாழ்வார் :-
***
சிவ தரிசனம்
திருத்தலம்
திருஆலங்காடு
அம்பிகை
ஸ்ரீ வண்டார்குழலி
தல விருட்சம் - ஆல்
ஸ்ரீ திருஞான சம்பந்தர் அருளிய
திருக்கடைக்காப்பு
பறையுஞ் சிறுகுழலும் யாழும்பூதமும் பயிற்றவே
மறையும் பலபாடி மயானத்துறையும் மைந்தனார்
பிறையும் பெரும்புனல்சேர் சடையினாரும் பேடைவண்
டறையும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே..(1/45)
ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிய
தேவாரம்
கூடினார் உமைதன்னோடே குறிப்புடை வேடங்கொண்டு
சூடினார் கங்கையாளைச் சுவறிடு சடையர் போலும்
பாடினார் சாமவேதம் பைம்பொழிற் பழனை மேயார்
ஆடினார் காளி காண ஆலங்காட்டு அடிகளாரே..(4/68)
ஸ்ரீ சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் அருளிய
திருப்பாட்டு
வண்டார்குழலி உமைநங்கை பங்கா கங்கை மணவாளா
விண்டார் புரங்கள் எரிசெய்த விடையாய் வேத நெறியானே
பண்டாழ் வினைகள் பலதீர்க்கும் பரமா பழைய னூர்மேய
அண்டா ஆலங்காடா உன்னடியார்க்கு அடியன் ஆவேனே..(7/52)
***
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***
இனிக்கும் பாசுரங்கள்...
பதிலளிநீக்குதிருவாலங்காடு தவிர பிற இடங்களுக்குச் சென்றுள்ளேன். இறையருள் துணை நிற்க அங்கு சென்று எம்பெருமானைக் காணும் நாளுக்காகக் காத்திருக்கிறேன்.
பதிலளிநீக்குஇது எந்தத் திருவாலங்காடு? மாயவரத்துக்கிட்டே இருப்பதெனில் நாங்க போகலை. அரக்கோணம் அருகே இருப்பதற்குப் போயிருக்கோம். நரசிம்ம தரிசனம் அருமை. கண்ணனின் திரிவிக்ரம அவதாரமும் அழகு. இவை எல்லாம் எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது.
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய தமிழமுதம் அருமை. உலகளந்த பெருமாள் திவ்ய தரிசனம் பெற்று மகிழ்ந்தேன்.
காரைக்கால் அம்மையார்
முக்தி நலம் எய்திய திருத்தலமாகிய திருவாலங்காடு ஈசனையும் பக்தியுடன் பணிந்து கொண்டேன். பாடல்களும் எப்போதும் போல் இனிக்கின்றன. இரு மூர்த்திகளையும் ஒரே நிலையில் இன்று கண்டுவக்க செய்தமைக்கு மிக்க நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் ஐயா.
பதிலளிநீக்குநலமே விளையட்டும். சிறப்பான பதிவு. தொடரட்டும் பாசுர அமுதம்.
ஓம் நம சிவாய...
பதிலளிநீக்கு