தமிழமுதம்
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்..(121)
ஆரிருள் உய்த்து விடும்..(121)
***
அருளமுதம்
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை
திருப்பாடல் 21
ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப *
ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்
ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய்
மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற்கண்
ஆற்றாது வந்து உன்னடி பணியுமா போலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்..
தித்திக்கும் திருப்பாசுரம்
ஓம் ஹரி ஓம்
***
சிவ தரிசனம்
திருத்தலம்
திருச்செங்குன்றூர்
திருச்செங்குன்றூர்
இறைவன் - ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீ பாகம்பிரியாள்
தல விருட்சம் - இலுப்பை
வாருறு கொங்கைநல்ல மடவாள் திகழ் மார்பில் நண்ணுங்
காருறு கொன்றையொடுங் கதநாகம் பூண்டருளிச்
சீருறும் அந்தணர்வாழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
நீறுரு செஞ்சடையன் கழலேத்தல் நீதியே..(1/107)
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணை திருந்தடி பொருந்த கைதொழ
கற்றுணைப் பூட்டியோர் கடலில் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நம சிவாயவே..
-: திருநாவுக்கரசர் :-
*
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***
படித்தேன், தரிசித்தேன்.
பதிலளிநீக்குவானமுட்டிக் கோழிகுத்திப்பெருமாள் கோயிலிற்கு இன்னமும் போனதில்லை. ஆனால் வண்டியில் போகும்போதும் வரும்போதும் பார்த்திருக்கோம். திருச்செங்கோடு ஒரே முறை சென்றோம். ஆமை வடிவப் பிரகாரம் மறக்க முடியாத ஒன்று அழகான தரிசனம். அரங்கன் அழகோ அழகு. நேற்றுடன் வைகுண்ட ஏகாதசித் திருநாள் உற்சவங்கள் முடிந்து விட்டன. நேற்று நம்மாழ்வார் மோக்ஷம்! இம்முறை ஒரு நாள் கூட அரங்கனைப் பார்க்கப் போக முடியவில்லை. எப்போ அழைக்கிறானோ, பார்க்கலாம்.
பதிலளிநீக்குசிறப்பு...
பதிலளிநீக்குஓம் நம சிவாய...