புதன், டிசம்பர் 23, 2020

மார்கழி முத்துக்கள் 08

 தமிழமுதம்

அறத்தினூங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு..(032)
***
அருளமுதம்

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை
திருப்பாடல் 08

திருத்தங்கல் - சிவகாசி

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்
கூவுவான் வந்து நின்றோம் கோதுகலம் உடைய 
பாவாய் எழுந்திராய் பாடிப்பறை கொண்டு
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆவா என்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்!..

தித்திக்கும் திருப்பாசுரம்

ஸ்ரீராமன் - வடுவூர்
வினையால் அடர்ப்படார் வெந்நரகில் சேரார்
தினையேனும் தீக்கதிக்கட் செல்லார் - நினைதற்
கரியானைச் சேயானை ஆயிரம்பேர்ச் செங்கட்
கரியானைக் கைதொழுதக் கால்..(2146) 
-: பொய்கையாழ்வார் :-

ஓம் ஹரி ஓம் 
***

சிவ தரிசனம்

திருத்தலம்
திருஆனைக்கா



இறைவன் - ஸ்ரீ ஜம்புகேஸ்வரர்
அம்பிகை - அருள்தரு அகிலாண்டேஸ்வரி


தல விருட்சம் - நாவல்
தீர்த்தம் - காவிரி

ஸ்ரீ திருஞானசம்பந்தர் அருளிய
திருக்கடைக்காப்பு


வானைக்காவில் வெண்மதி மல்குபுல்கு வார்சடைத்
தேனைக்காவில் இன்மொழித் தேவிபாகம் ஆயினான்
ஆனைக்காவில் அண்ணலை அபயமாக வாழ்பவர்
ஏனைக்காவல் வேண்டுவார்க்கு ஏதம் ஏதும் இல்லையே!..(3/53) 
***
ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருப்பள்ளியெழுச்சி
திருப்பாடல் 08  

திருஆனைக்கா
முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய்
மூவரும் அறிகிலர் யாவர்மற் றறிவார்
பந்தணை விரலியும் நீயும்நின் அடியார்
பழங்குடில் தொறும்எழுந் தருளிய பரனே
செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டி
திருப்பெருந் துறையுறை கோயிலுங் காட்டி
அந்தணன் ஆவதுங் காட்டி வந்தாண்டாய்
ஆரமுதே பள்ளி எழுந்தரு ளாயே..
***
திருவெம்பாவை..
திருப்பாடல்கள் 05 -06


மாலறியா நான்முகனுங் காணா மலையினை நாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்க ளேபேசும்
பாலாறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டுஞ்
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்(று)
ஓலம் இடினும் உணராய் உணராய்காண்
ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய்... 5

மானே நீ நென்னலை நாளை வந்துங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானேவந் தெம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோர் எம்பாவாய்... 6

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
***

5 கருத்துகள்:

  1. பொக்கிஷப் பதிவுகள். வந்தேன், சுவைத்தேன்.

    பதிலளிநீக்கு
  2. நல்ல தரிசனம். வடுவூரானைப் பார்க்கப் பார்க்கப் பரவசம். திருத்தங்கல் போனதே இல்லை. ஆனைக்கா அப்பனும் அம்மையும் அழகோ அழகு. இங்கேயே இருந்தும் ஓரிரு முறைதான் இங்கே வந்தப்புறம் போக வாய்ப்புக் கிடைச்சிருக்கு. நல்ல தரிசனம். பதிகங்கள், பாசுரங்கள் பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. பாடல் அடிகளைப் பகிர்ந்தமைக்கு நன்றி. திருத்தங்கல் தவிர பிற தலங்களைப் பார்த்துள்ளேன். வாய்ப்பு கிடைக்கும்போது செல்வேன்.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    அருமையான தரிசனங்கள். திருதங்கல் நாராயணன் வடுவூர் கோதண்டராமன் ஆகிய மூர்த்திகளை தரிசிக்கும் பேறு பெற்றேன். திருஆனைக்கா எப்போதோ ஒரு தடவை சென்று வந்தது. அவ்வளவாக நினைவில்லை. சிவ பார்வதி தரிசனம் கண்டு ஆனந்தமடைந்தேன். பாசுரம், பதிகம், தேவாரம் என பதிவு அருமை. இன்றைய பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. திருவானைக்கா, வடுவூர் முதலான தலங்களின் தரிசனம்... நன்றி ஐயா.

    தொடரட்டும் பதிவுகள்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..