வெள்ளி, டிசம்பர் 18, 2020

மார்கழி முத்துக்கள் 03

 தமிழமுதம்

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது..(007) 
***

அருளமுதம்

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை
திருப்பாடல் 03

ஸ்ரீ கிருஷ்ணன் - உடுப்பி, கர்நாடகா

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்குபெரும் செந்நெல் ஊடுகயல் உகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண் படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்!..

ஸ்ரீ ராஜகோபாலன் - மன்னார்குடி

தித்திக்கும் திருப்பாசுரம்

கங்கையிற் புனிதமாய காவிரி நடுவு பாட்டு
பொங்குநீர் பரந்து பாயும் பூம்பொழில் அரங்கந் தன்னுள்
எங்கள்மால் இறைவன்ஈசன் கிடந்ததோர் கிடக்கை கண்டும்
எங்ஙனம் மறந்து வாழ்கேன் ஏழையேன் ஏழையேனே..(894)
-: தொண்டரடிப் பொடியாழ்வார் :-

ஓம் ஹரி ஓம் 
***

சிவ தரிசனம்

திருத்தலம்
திருவெண்காடு


இறைவன் - ஸ்ரீ ஸ்வேதாரண்யேஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீ பிரம்மவித்யா நாயகி

தலவிருட்சம்
ஆல், கொன்றை, வில்வம்
தீர்த்தம்
அக்னி தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம்



ஸ்ரீ திருஞானசம்பந்தர் அருளிய
திருக்கடைக்காப்பு

மண்ணவர் விண்ணவர் வணங்க வைகலும்
எண்ணிய தேவர்கள் இறைஞ்சும் எம்மிறை
விண்ணமர் பொழில்கொள் வெண்காடு மேவிய
அண்ணலைத் தொழ அல்லல் இல்லையே..(3/15) 
***

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருப்பள்ளியெழுச்சி
திருப்பாடல் 03

ஸ்ரீ சுத்த ரத்னேஸ்வரர் - ஊற்றத்தூர்

கூவின பூங்குயில் கூவின கோழி
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்
ஓவின தாரகை ஒளிஒளி உதயத்து
ஒருப்படு கின்றது விருப்பொடு நமக்குத்
தேவநற் செறிகழல் தாளிணை காட்டாய்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே
யாவரும் அறிவரி யாய்எமக் கெளியாய்
எம்பெரு மான்பள்ளி எழுந்த ருளாயே..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
***

9 கருத்துகள்:

  1. அருமையான பாசுரங்களை ரசித்தேன்.  மார்கழி மூன்றாம் நாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்.. நல்வரவு...
      தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. சிறப்பான படங்களும் சீரிய பாடல்களும்.

    மார்கழி மூன்றாம் நாள் சிறப்புப் பதிவு நன்று. நலமே விளையட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. நல்ல பாசுரங்கள், நல்ல பதிகங்களோடு கூடிய அருமையான பதிவுக்கு நன்றி.
    "யாவரும் அறிவரியாய் எமக்கெளியாய்!" எம்பெருமானின் அருள் வேண்டும்.

    பதிலளிநீக்கு
  4. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றியக்கா..

    பதிலளிநீக்கு
  5. பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..