அருணாசல சிவம்
அருணாசல சிவம்
***
நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***
இன்று
திருக்கார்த்திகைத்
திருநாள்..
சகல சிவாலயங்களிலும்
திருமுருகன் சந்நிதிகளிலும்
சிறப்புறு வழிபாடுகள்
நிகழ்த்தப்படும் நன்னாள்..
ஞானசம்பந்தப் பெருமான்
தமது திருப்பதிகத்தில்
குறித்தருளும்
திருநாள்..
உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன்
பெண்ணாகிய பெருமான் மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன அருவித்திரள்
மழலைம் முழவதிரும்
அண்ணாமலை தொழுவார் வினை
வழுவா வண்ணம் அறுமே..
-: திருஞானசம்பந்தர் :-
பகை எனவும் பிணி எனவும்
நம்மைச் சூழ்ந்திருக்கும்
இருள் விலகிட வேண்டுமென
இந்நாளில் வேண்டிக்
கொள்வோம்..
துயறுற்றுத் தவிக்கும்
அனைவருக்கும்
ஆறுதலும் தேறுலும் நல்கி
அரவணைத்துக் கொள்ள
வேண்டும் எனவும்
ஜோதி மயமான இறைவனை
இவ்வேளையில்
பிரார்த்தித்துக் கொள்கிறேன்..
வேலுண்டு வினையில்லை
மயிலுண்டு பயமில்லை
குகனுண்டு குறையில்லை மனமே
குகனுண்டு குறைவில்லை மனமே..
அண்ணாமலைக்கு அரோகரா..
அண்ணாமலைக்கு அரோகரா!..
***
அண்ணாமலையாரின் அருளும், சிவகுமாரனின் அருட்பார்வையும் உலகைக் காக்க வேண்டும். திருக்கார்த்திகை தின வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஅண்ணாமலையானுக்கு அரோஹரா! அவன் தான் அனைவரையும் காத்து ரக்ஷிக்க வேண்டும்.
பதிலளிநீக்குஅன்பு துரை படங்களுக்கும் பாடல்களுக்கும் நன்றி.
பதிலளிநீக்குதிருவண்ணாமலையாரும் உண்ணாமுலை அம்மையும்,
கந்த முருகனும் நம்மைக் காக்கட்டும்.
நல் திருக்கார்த்திகை வாழ்த்துகள்.
அண்ணாமலைக்கு அரோகரா... திருக்கார்த்திகை வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஅண்ணாமலைக்கு அரோகரா
பதிலளிநீக்குவாழ்க நலம்
சிவ சிவ...
பதிலளிநீக்குஓம் ஜோதியே போற்றி ...
இனிய நாள். அருமையான நன்னாள் பதிவு.
பதிலளிநீக்கு