செவ்வாய், நவம்பர் 03, 2020

அன்னாபிஷேகம்

   


நாடும் வீடும் நலம் பெறவேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***


இன்றைய பதிவில்
ஐப்பசி நிறைநிலா நாளன்று
சிவாலயங்களில் நடைபெற்ற
அன்னாபிஷேக வைபவத்தின்
திருக்காட்சிகள்..

Fb வழியாக நண்பர்கள்
பகிர்ந்தவை..

திருக்கோயில்களின் 
பெயர் அறியக்கூடவில்லை..

ஸ்ரீ வராஹி அம்மன்
திருக்கோலத்தினை அனுப்பித்
தந்தவர் தஞ்சை ஞானசேகரன்..

அனைவருக்கும்
நெஞ்சார்ந்த நன்றி..





ஏர் கலப்பையுடன்
உலக்கையையும்
தாங்கியிருப்பவள்
அன்னை ஸ்ரீ வராஹி..

ஐப்பசி நிறைநிலா நாளன்று
தஞ்சை பெரிய கோயிலில்
ஸ்ரீ வராஹி அம்மனுக்கும்
அன்னாபிஷேகம்
நிகழ்த்தப்பட்டது..



எல்லாம் வல்ல இறைவனுக்கு
நிகழ்த்தப்படும்
அன்னாபிஷேக தரிசனம்
என்றென்றும் குறைவின்றி
அன்ன விருத்தி என்பதாக
நம்பிக்கை..
***
Fb ல்
கிடைத்த காணொளி


காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது
நாதன் நாமம் நம சிவாயவே..
-: திருஞானசம்பந்தர் :-
***
இவ்வேளையில்
புல்லர்கள் அழியவும்
புன்மைகள் தொலையவும்
எல்லாம் வல்ல இறைவனின்
திருவடித் தாமரைகளைப்
போற்றுவோம்..
***
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
ஃஃஃ

9 கருத்துகள்:

  1. நிறைநிலா -  நல்ல வார்த்தை.

    தரிசனம் செய்துகொண்டேன்.

    பதிலளிநீக்கு
  2. அன்னாபிஷேஹப் படங்கள் அனைத்தும் சிறப்பு. தரிசித்துக் கொண்டேன். வாராஹியின் அபிஷேஹக் காட்சிப் படம் எனக்கும் வந்திருந்தது.

    பதிலளிநீக்கு
  3. அன்னம் அபிஷேகம் செய்து கொண்ட ஈசன் கிருபையில்
    பசி இல்லா நாட்கள் தொடரட்டும்.
    மிகச் சிறப்பான தரிசனம்.

    வராஹி அம்மன் ஏரும் கலப்பையும் வைத்திருப்பது
    காணக்கிடைக்காத வரம். மிக நன்றி துரை.

    பதிலளிநீக்கு
  4. படங்கள் அழகாக இருக்கின்றன துரை அண்ணா. அம்மனும் தான். டக்கென்று தெரியவில்லை அன்னாபிஷேகம் என்று. விபூதிக்காப்பு போல இருக்கிறது!

    கீதா

    பதிலளிநீக்கு
  5. அன்னாபிஷேக படங்களும், தஞ்சை பெரிய கோவில் காணொளியும் மிக அருமை.
    //என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே !" தேவார பாடலும் கேட்டு மகிழ்ந்தேன். அருமையான தரிசனம்
    பகிர்வுக்கு நன்றி.
    வாழ்த்துக்கள். நாங்கள் கோவிலுக்கு போகவில்லை. வீட்டில் அன்னாபிஷேகம் செய்து வழிப்பட்டு விட்டோம்.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    அருமையான பதிவு. அனைத்து படங்களும், அன்னாபிஷேக காணொளியும், கண்களை கவர்கிறது. வாராஹி அன்னையையும், தஞ்சை பெரிய கோவில் அன்னாபிஷேக சிவனாரையும் உங்கள் தயவால் இங்கிருந்தபடியே பக்தியுடன் தரிசித்து வேண்டிக் கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. அருமையான படங்கள். அன்னாபிஷேகம் கண்டதன் பலனால்   உலகில் வறுமை இல்லாமல் இருக்கட்டும். 

    பதிலளிநீக்கு
  8. கண்ணில் படுவதெல்லாம் படம் சொல்லும் கதையாகவே இருக்கிறது. என்ன மாயமோ, மந்திரமோ... அனைத்தும் சிறப்பு.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..