வெள்ளி, அக்டோபர் 23, 2020

திவ்ய தரிசனம் 1

 


நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***

நவராத்திரி விசேஷங்கள்
திருக்கோயில்கள் தோறும்
சிறப்புற நிகழ்ந்து
கொண்டிருக்கின்றன..

இவ்வேளையில்
புல்லர்கள் அழியவும்
புன்மைகள் தொலையவும்
அன்னை ஆதிபராசக்தியின்
திருவடித் தாமரைகளைப்
போற்றுவோம்..
***
இவ்வருடம்
வழக்கம் போல
நவராத்திரிப் பதிவுகளை
வழங்குவதற்கு
இங்குள்ள சூழ்நிலையில்
இயலவில்லை..

Fb ல் கிடைத்த படங்களுடன்
நண்பர் 
திரு. தஞ்சை ஞானசேகரன்
வழங்கிய படங்களை
இன்றைய பதிவில் வழங்கியிருக்கின்றேன்..

ஞானசேகரன் அவர்களுக்கு
நெஞ்சார்ந்த நன்றி..
***











முதலிரண்டு படங்களும்
தஞ்சை ஸ்ரீ பிரஹந்நாயகி அம்மன்.

இடையில்
தஞ்சை 
ஸ்ரீ கொங்கணேஸ்வரர் கோயில்
ஸ்ரீ துர்கை..

அச்சங்குட்டம்
ஸ்ரீ முத்தாரம்மன் மற்றும்
திருமங்கலக்குடி
ஸ்ரீ மங்களாம்பிகை...
***
இன்றைய பதிவில்
இனிய பாடல் ஒன்று..


காத்யாயனாய வித்மஹே
கன்யா குமாரி தீமஹி
தந்நோ துர்கே ப்ரசோதயாத்:

ஓம் சக்தி ஓம் சக்தி 
ஓம் சக்தி ஓம்..
ஃஃஃ

22 கருத்துகள்:

  1. இனிய திவ்ய தரிசனம். அச்சங்குட்டம் முத்தாரம்மன் கோயிலுக்குச் சென்றதில்லை. அன்னையின் அருளால் வாய்ப்பு கிடைக்கும்போது செல்வேன்.
    வெகுநாளுக்குப் பின்னர் உங்களின் பதிவினை கண்டதில் மகிழ்ச்சி. உடல் நலனை கவனித்துக்கொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் அவருக்கு மகிழ்ச்சி..
      நலமாக இருக்கின்றேன்.. தங்கள் அன்பினுக்கு நன்றி...

      நீக்கு
  2. வெள்ளி தரிசனம் ஆச்சு.   எப்போது உங்கள் கணினியை இயக்கும் வாய்ப்பு கிடைக்குமோ...   அந்த நாள் சீக்கிரமே நிகழட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. என் அப்பா ஒரு தாயத்து கட்டி இருந்தார்.  யாரோ ஒரு தாடி வைத்த காவி வெட்டிக்காரர் கொடுத்தது.  எதற்கு கட்டி இருந்தாரோ...   இன்றுவரை தெரியாது.  அதை வெள்ளிதோறும் பூஜையில் வைத்து பூஜை செய்வார்.  பின்னர் அதை கொங்கணேஸ்வரர் கோவில் துர்க்கையிடம் கொண்டு சென்ட்ரஸ் சன்னதியில் வைத்து அர்ச்சனை செய்து வருவோம்.  பெரும்பாலும் நானும் அண்ணனும்தான் சென்று வருவோம்.  பின்னர் மறுபடி கட்டிக்கொள்வார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      முன்பே ஒருமுறை இதனைச் சொல்லியிருக்கின்றீர்கள்...
      கொங்கண சித்தரால் பூஜிக்கப்பட்ட தலம்..
      அம்மன் சந்ந்திக்கு இருபுறமும் ஸ்ரீகாளியும் ஸ்ரீ துர்கையும்..

      அன்னபூரணி சந்நிதி விளங்கும் விசேஷமான கோயில்...
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. சீர்காழி குரலில் மிக இனிய பாடல்.  கேட்டு ரசித்தேன்.  பாஸுக்கும் பிடித்த பாட்டு.  அவரும் கேட்டு ரசித்தார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      காலத்தை வென்றிருக்கும் பாடல்களுள் இதுவும் ஒன்று.. தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. காலை தரிசனம் நன்று.
    சீர்காழியின் பாடல் அற்புதம் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி.
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. ஆஹா! இருந்த இடத்திலிருந்தபடியே தேவியின் பல ரூபங்களை தரிசித்து விட்டேன். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும்
      கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. படங்கள் அருமை. எல்லா அம்பிகைகளையும் தரிசனம் செய்ய வைத்துவிட்டீர்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெல்லை..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. அம்பிகை தரிசனம் அழகு. காந்திமதியின் அழகு கண்களைப் பறிக்கிறது. சீர்காழியில் இந்தப் பாட்டு என்னைப் பித்துப் பிடிக்க வைக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும்
      கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

      நீக்கு
  10. "சீர்காழியின்" இந்தப்பாட்டு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிறு எழுத்துப் பிழை..
      அதனால் என்ன!..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  11. வணக்கம் சகோதரரே

    இன்றைய நவராத்திரி வெள்ளியில் பல ஊர்களின் அம்மன் தரிசனங்களை காண நான் மிகவும் கொடுத்து வைத்துள்ளேன். திருநெல்வேலி காந்திமதி அம்மனின் தரிசனம் என்னை அங்கே அழைத்துச் சென்றது. சீர்காழியின் குரல் வளத்தில் அற்புதமான பாடல் பகிர்வையும் பக்தியுடன் கேட்டு மகிழ்ந்தேன். அழகான படங்கள். அருமையாக பதிவு. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  12. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

    கடந்த வருடங்களில் எல்லாம் நவராத்திரி சமயத்தில் நிறைய பதிவுகள் தந்திருக்கிறேன்.. வேலை சூழ்நிலையின் காரணமாக தற்சமயம் இயல்வில்லை..

    அம்பாள் அவளே துணை..
    வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..