சனி, ஜூன் 13, 2020

உவரி தரிசனம்

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***

தொடர்ந்து பதிவுகளை எழுதிக்கொண்டிருந்த நிலையில்
விரும்பத்தகாத சூழல் அமைந்து விட்டது..

கடுமையான காய்ச்சலில் இருந்து
நண்பர்களாகிய தங்களின் அன்பினாலும்
பெரியோர்களின் ஆசிகளினாலும்
தெய்வத்தின் பேரருளினாலும்
நல்லபடியாக மீண்டிருக்கிறேன்..

முன்பிருந்த பத்தாவது தளம் முற்றாகக் காலி செய்யப்பட்டு விட்டது...
அங்கு விஷக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பணியாளர்களைக்
கொண்டு வந்து வைத்திருக்கின்றது நிறுவனம்...

நான் தற்போது எனது உடைமைகளுடன் வேறொரு அறையில்..
அங்கு நானே இடைஞ்சல்... கூடவே கணினியும் அதன் மேசையும்..

எனவே, வீண் பிரச்னைகள் வேண்டாம் என
பத்து நாட்களுக்கும் மேலாகக் 
கணினியைத் தொடவில்லை...

இன்று (12/6) சிறுகதை ஒன்றை வடித்து
ஸ்ரீராம் அவர்களுக்கு அனுப்பி விட்டு
இந்தப் பதிவினை வெளியிடுகின்றேன்..

வழக்கம் போல தங்கள் அன்பினை வேண்டுகிறேன்..
Blogger முதன் முறையாக
ஒத்துழைக்கவில்லை..
கைப்பேசி வழியாக
படங்களை இணைத்துள்ளேன்..

இன்றைய பதிவில்
திருநாவுக்கரசர் அருளிய திருப்பதிகப் பாடல்களுடன்
சிவ தரிசனம்..

திருத்தலம் - உவரி



இறைவன் - ஸ்ரீ சுயம்புலிங்க ஸ்வாமி
அம்பிகை - ஸ்ரீ மனோன்மணியாள்



தல விருட்சம் - கடம்பங்கொடி
தீர்த்தம் - அக்னி தீர்த்தம் எனப்படும் வங்கக்கடல்

ஸ்ரீ ப்ரம்ம சக்தி அம்பாள், ஸ்ரீ பேச்சியம்மன் ஸ்ரீ இசக்கியம்மன்
ஸ்ரீ மாடசாமி, ஸ்ரீ சிவனணைந்த பெருமாள், ஸ்ரீ முன்னோடியார் 
- என பரிவார மூர்த்திகள் விளங்குகின்றனர்...



திருக்கோயிலுக்குப் பின்புறம் 
கன்னி மூலை ஸ்ரீ விநாயகரும்
வன்னியடி ஸ்ரீ சாஸ்தாவும்
தனிக்கோயில் கொண்டு விளங்குகின்றனர்..

இத்திருத்தலம் 
திருச்செந்தூரில் இருந்து குலசேகரன் பட்டினம் வழியாக
நாகர்கோயில் செல்லும் வழியில் 42 கி.மீ தொலைவிலுள்ளது..



மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசுதென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறைப் பொய்கையும் போன்றதே
ஈசன் எந்த இணையடி நிழலே.. (5/90)



நமசிவாயவே ஞானமும் கல்வியும்
நம சிவாயவே நானறி இச்சையும்
நம சிவாயவே நா நாவின்றேத்துமே
நம சிவாயவே நன்னெறி காட்டுமே.. (5/90)

வேதநாயகன் வேதியர் நாயகன்
மாதின் நாயகன் மாதவர் நாயகன்
ஆதிநாயகன் ஆதிரை நாயகன்
பூத நாயகன் புண்ணிய மூர்த்தியே.. (5/100)



அப்பன் நீ அம்மையும் நீ ஐயனும் நீ

அன்புடைய மாமனும் மாமியும் நீ
ஒப்புடைய மாதரும் ஒண் பொருளும் நீ
ஒருகுலமும் சுற்றமும் ஓரூரும் நீ
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ
துணையாய் என்னெஞ்சம் துறப்பிப்பாய் நீ
இப்பொன் நீ இம்மணி நீ இம்முத்தும் நீ
இறைவன் நீ ஏறூர்ந்த செல்வன் நீயே..(6/95)

ஓம் நம சிவாய சிவாய நமஓம்
ஃஃஃ

24 கருத்துகள்:

  1. உவரி அம்மையையும், அப்பனையும் தரிசித்தேன்.

    மனக்கவலைகளும், இன்னல்களும் தீர்ந்து மனம் அமைதிபெற இறைவனை வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  2. இந்த நாளின் காலையில் இனிமையான தரிசனம்.

    நலமே விளையட்டும் ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்களது வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. திருச்செந்தூருக்குப் பல முறை போயும் உவரிக்குப் போனதில்லை/ நேர்ந்தது இல்லை. இங்கே உங்கள் மூலம் தரிசனம் கிடைக்கப் பெற்றது. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...
      வாய்ப்பு கிடைக்கும் போது தரிச்னம் செய்யுங்கள்...

      நீக்கு
  4. உடல் நலத்தைக் கவனித்துக்கொள்ளவும். தக்க மருந்துகள் எடுத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கிருக்கும் ஒரே ஆறுதல் பதிவுகள் எழுதுவதும், எங்கள் எல்லோரிடமும் இணையம் மூலம் பேசுவதும் தான். ஆகவே தொடர்பில் இருங்கள். ஓய்வும் எடுத்துக்கொள்ளவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாங்கள் சொல்வது உண்மை தான்..
      தற்போது எனக்கிருக்கும் ஒரே நிம்மதி இணையம் தான்... எப்போது கணினியை எடுத்து வைப்பது என்று தெரியவில்லை..

      தங்கள் அன்பினுக்கு மகிழ்ச்சி..
      நன்றியக்கா...

      நீக்கு
  5. உவரி அம்மன் உங்களது நலத்தை காக்கட்டும் வாழ்க நலம்.

    கவனமாக இருங்கள் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி...

      நானும் கவனமாகத் தான் இருக்கிறேன்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. உவரி என்றதும் எனக்கு மாதா கோவில்தான் நினைவுக்கு வந்தது.

    பழமைமிக்க கோவில் இருக்கிறதா அங்கு? எனக்கு இது புதிய செய்தி.

    உங்களுக்கு எல்லாமே நலமுடன் நடக்கட்டும். முதலில் உடலைப் பார்த்துக்கொள்ளுங்கள். எல்லாம் நல்லபடியா அமையும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெல்லை...

      பதிவில் சொல்லப்பட்டிருக்கும் உவரி கோயில் பல நூற்றாண்டுகளாக இருக்கிறது...

      இந்தப் பதிவுக்கென வந்த படங்களை கணினி வழி தளத்தில் பதிய முடிய வில்லை...

      விரைவில் திருக்கோயிலின் படங்களை பதிவில் தருகிறேன்...

      அன்பின் அறிவுரைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  7. குமார் அவர்களும் சிரமத்தில் உள்ளார்...

    ஓம் நம சிவாய...

    அனைத்து பிரச்சனைகளும் தீரட்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்...

      குமார் அவர்களது பிரச்னைகளும் விரைவில் தீர்ந்திட வேண்டும்...
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. உங்கள் பிரஸ்னைகள் விலகி எல்லாம் இயல்பு நிலை திரும்ப இறைவனை வேண்டுகிறேன்.
    பூரண நலம் பெற்றது மகிழ்ச்சி.
    உவரி கோவில் தரிசனம் கிடைத்தது மகிழ்ச்சி.
    வாழ்க வையகம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      வாழ்க வையகம்
      வாழ்க வளமுடன்..

      நீக்கு
    2. அன்பு துரை என்றும் வளமுடன் இருங்கள்.
      உடல் நலம் இல்லாமல் நீங்கள்
      அவதிப்பட்டது கவலையைத் தந்தது.
      இறைவன் நலத்தையும் நன்மையும்
      உங்கள் வழி அனுப்புவார்.

      தாங்கள் பதிந்துள்ள உவரி இறைவன், அன்னை படங்கள்
      மிகவும் அழகு.
      குடும்பத்தை விட்டுப் பிரிந்திருப்பதே
      உங்களுக்கும் மற்றவர்களுக்கும்
      துன்பம் தருகிறது.
      அனைத்து உலகமும் தாயாரின் கருணையால்
      நன்மை பெறும்.
      மன உறுதியுடன் இருங்கள். எங்கள் அன்பு உங்களுடன்.

      நீக்கு
    3. தங்கள் அன்பின் வருகையும் ஆறுதலான கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றியம்மா..

      நீக்கு
  9. நீங்களும், உங்களைப் போன்றோரும் தொலைதூரத்தில் இருந்தாலும், எங்களைப் பொறுத்தவரை மனதில் மிகவும் நெருக்கமாக உள்ளீர்கள். உங்களைப் போன்றோரின் நினைவுகள் எங்களுக்கு இருந்துகொண்டே இருக்கின்றன. பக்கத்தில் இருப்போர் நேருக்கு நேராக கருத்துகளை பரிமாறிக்கொள்ள முடியும். உங்களைப் போன்றோருடன் நாங்கள் இவ்வாறாக இணையம் மூலமாகவே தொடர்புகொள்கிறோம். உடல்நலனை கவனித்துக்கொள்ளுங்கள். உங்கள் பக்தியும், எண்ணமும் உங்களையும் பிற நண்பர்களையும் நல்ல நிலையில் வைத்திருக்கும். எங்கள் அனைவருடைய பிரார்த்தனைகளும், அன்பும் எப்போதும் உண்டு. நாடும் வீடும் விரைவில் நலம் பெறும். நம்புவோம். இறைவன் துணையிருப்பான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா...

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
      அன்புடன் தங்களது ஆறுதலான கருத்துக்கள் மனதை நெகிழ்விக்கின்றன..

      இறைவன் துணையிருக்கிறான்..
      மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  10. உவரி கோவில் விஷயங்கள், திருநாவுக்கரசர் திருப்பதிகங்கள்.. குளுமை. நன்றி.
    காய்ச்சல் விட்டது கடவுளின் செயலால்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஏகாந்தன்..

      கடவுள் அருளால் தான் காய்ச்சல் விட்டது..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  11. உவரி கோயில் அம்மை அப்பன் தரிசனம் கிடைக்கப் பெற்றோம். காய்ச்சலில் இருந்து மீண்டது அறிந்து சந்தோஷம். எப்போதும் நலமே விளைந்திடட்டும்.

    துளசிதரன், கீதா

    உவரி வழி பல முறை பயணம் செய்திருந்தாலும் இறங்கி கோயிலுக்குச் சென்றதில்லை. உங்கள் பதிவுகளின் மூலமே அறிகிறேன்.

    உடல் நலனைப் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் பிரச்சனைகள் எல்லாம் விரைவில் தீர்ந்திடட்டும். நலமே விளைந்திடட்டும்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் துளசிதரன்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..

      தங்கள் அன்பின் பிரார்த்தனைகளால்
      நான் நலமாக இருக்கிறேன்...

      எங்கும் நலமே நிறையட்டும்..
      மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  12. உவரிக்கு ஒருமுறை சென்றிருக்கிறேன். .. நாங்க போனபோது வைகாசி விசாகம், கோவில் முழுக்க கூட்டம்.. அதனால் கோவில் அமைப்பு நினைவில் இல்லை.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..