திங்கள், ஏப்ரல் 13, 2020

சிவமே சரணம் 11

நாடும் வீடும் நலம்பெற வேண்டும்..
பிணியும் பகையும் தொலைந்திட வேண்டும்..
நலமும் வளமும் நிறைந்திட வேண்டும்..
***
இன்றைய பதிவில்
ஸ்ரீ சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள்
அருளிச் செய்த திருப்பதிகம்

ஏழாவது திருமுறை
திருப்பதிக எண் - 72

திருத்தலம் - திருவலம்புரம்


ஸ்ரீ வலம்புர நாதர் 
ஸ்ரீ வடுவகிர் கண்ணி 
இறைவன் - வலம்புர நாதர்
அம்பிகை - வடுவகிர்கண்ணி
தீர்த்தம் - பிரம தீர்த்தம்
தலவிருட்சம் - பனை

ஸ்ரீஹரிபரந்தாமன் வழிபட்டு
ஈசனிடமிருந்து வலம்புரிச் சங்கினைப் பெற்ற திருத்தலம்..

பூம்புகார் செல்லும் வழியில் பூம்புகாருக்கு முன்பாகவே

சாயாவனம் திருத்தலத்துக்கு அருகில் அமைந்துள்ளது..

இன்றைக்கு மேலப்பெரும்பள்ளம் எனப்படுகின்றது...

பதிவிலுள்ள படங்கள் இணையத்தில் பெறப்பட்டவை...


எனக்கினித் தினைத்தணைப் புகலிடம் அறிந்தேன்
பனைக்கனி பழம்படும் பரவையின் கரைமேல்
எனக்கினி யவன்தமர்க் கினியவன் எழுமையும்
மனக்கினி யவன் தனதிடம் வலம்புரமே.. 1

புரமவை எரிதர வளைந்தவில் லினன்அவன்
மரவுரி புலியதள் அரைமிசை மருவினன்
அரவுரி நிரந்தயல் இரந்துண விரும்பிநின்
றிரவெரி யாடிதன் இடம் வலம்புரமே.. 2

நீறணி மேனியன் நெருப்புமிழ் அரவினன்
கூறணி கொடுமழு ஏந்தியோர் கையினன்
ஆறணி ஐர்சடை அழல்வளர் மழலைவெள்
ளேறணி அடிகள்தம் இடம் வலம்புரமே.. 3


கொங்கணை சுரும்புண நெருங்கிய குளிரிளந்
தெங்கொடு பனைபழம் படுமிடம் தேவர்கள்
தங்கிடும் இடந்தடங் கடற்றிரை புடைதர
எங்கள தடிகள்நல் லிடம் வலம்புரமே.. 4

கொடுமழு விரகினன் கொலைமலி சிலையினன்
நெடுமதிள் சிறுமையின் நிரவவல் லவனிடம்
படுமணி முத்தமும் பவளமும் மிகச்சுமந்
திடுமணல் அடைகரை இடம் வலம்புரமே.. 5

கருங்கடக் களிற்றுரிக் கடவுள திடங்கயல்
நெருங்கிய நெடும்பணை அடும்பொடு விரவிய
மருங்கொடு வலம்புரி சலஞ்சலம் மணம்புணர்ந்
திருங்கடல் அடைகரை இடம் வலம்புரமே.. 6

நரிபுரி காடரங் காநட மாடுவர்
வரிபுரி பாடநின் றாடும்எம் மானிடம்
புரிசுரி வரிகுழல் அரிவையொர் பான்மகிழ்ந்
தெரிஎரி யாடிதன் இடம் வலம்புரமே.. 7

பாறணி முடைத்தலை கலனென மருவிய
நீறணி நிமிர்சடை முடியினன் நிலவிய
மாறணி வருதிரை வயலணி பொழிலது
ஏறுடை அடிகள் தம் இடம் வலம்புரமே.. 8

சடசட விடுபணி பழம்படும் இடவகை
படவட கத்தொடு பலிகலந் துலவிய
கடைகடை பலிதிரி கபாலிதன் இடமது
இடிகரை மணலடை இடம் வலம்புரமே.. 9

குண்டிகைப் படப்பினில் விடக்கினை ஒழித்தவர்
கண்டவர் கண்டடி வீழ்ந்தவர் கனைகழல்
தண்டுடைத் தண்டிதன் இனமுடை அரவுடன்
எண்டிசைக் கொருசுடர் இடம் வலம்புரமே.. 10


ஸ்ரீ சுந்தரர் 
வருங்கல மும்பல பேணுதல் கருங்கடல்
இருங்குலப் பிறப்பர்தம் இடம்வலம் புரத்தினை
அருங்குலத் தருந்தமிழ் ஊரன்வன் தொண்டன்சொல்
பெருங்குலத் தவரொடு பிதற்றுதல் பெருமையே.. 11

-: திருச்சிற்றம்பலம் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
ஃஃஃ

11 கருத்துகள்:

  1. பதிகம் படித்துப் பயன் பெறுவோம். பிணிப்பகை தொலைத்து நலம் பெறுவோம்.

    ஓம் சிவாய நம ஓம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்...
      தங்களுக்கு நல்வரவு....

      மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  2. சிவமே சரணம்
    வாழ்க வையகம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி...

      வாழ்க வையகம்.. வாழ்க வளமுடன்...
      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. வாழ்க வையகம்....

    ஓம் நமச் சிவாய.... நலமே விளையட்டும்.

    நல்லதொரு பதிகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்...

      நலமே விளையட்டும்...
      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. அன்பின் தனபாலன்...

    வாழ்க வளமுடன்..
    மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  5. இறை தரிசனம் இதம்.

    உலகம் இயல்பு நிலை பெற வேண்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      வாழ்க வளமுடன்...

      நீக்கு
  6. இத்தலத்தை தரிசனம் செய்து இருக்கிறோம்.

    பதிகம் பாடி வேண்டிக் கொண்டேன்.

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...

      நான் இந்தப் பதிவை எழுதியபோதே நினைத்தேன் - இத்தலத்தில் தரிசனம் செய்திருப்பீர்கள் என்று...

      மகிழ்ச்சி.. நன்றி..

      வாழ்க வையகம்.. வாழ்க வளமுடன்..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..