புதன், ஏப்ரல் 01, 2020

சிவமே சரணம் 7

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..

நாளும் பாராயணம் செய்வோர் தம் வாழ்வில்
நலம் பல சேர்க்கும் அற்புதத் திருப்பதிகம்

இன்றைய பதிவில்
ஸ்ரீ அப்பர் ஸ்வாமிகள்
அருளிச் செய்த திருப்பதிகம்..

நான்காம் திருமுறை
திருப்பதிக எண் - 38

திருத்தலம் - திருஐயாறு


இறைவன் - அருள் தரும் ஐயாறப்பர், செம்பொற்சோதி
அம்பிகை - ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி


தலவிருட்சம் - வில்வம்
தீர்த்தம் - காவிரி

கங்கையைச் சடையுள் வைத்தார் கதிப்பொறி அரவும் வைத்தார்
திங்களைத் திகழ வைத்தார் திசை திசை தொழவும் வைத்தார்
மங்கையைப் பாகம் வைத்தார் மான்மறி மழுவும் வைத்தார்
அங்கையுள் அனலும் வைத்தார் ஐயன் ஐயாறனாரே.. 1

பொடிதனைப் பூச வைத்தார் பொங்கு வெண்ணூலும் வைத்தார்
கடியதோர் நாகம் வைத்தார் காலனைக் கால வைத்தார்
வடிவுடை மங்கை தன்னை மார்பிலோர் பாகம் வைத்தார்
அடியிணைத் தொழவும் வைத்தார் ஐயன் ஐயாறனாரே.. 2


உடைதரு கீளும் வைத்தார் உலகங்கள் அனைத்தும் வைத்தார்
படைதரு மழுவும் வைத்தார் பாய்புலித் தோலும் வைத்தார்
விடைதரு கொடியும் வைத்தார் வெண்புரி நூலும் வைத்தார்
அடைதர அருளும் வைத்தார் ஐயனை ஐயறனாரே.. 3


தொண்டர்கள் தொழவும் வைத்தார் தூமதி சடையில் வைத்தார்
இண்டையைத் திகழ வைத்தார் எமக்கென்றும் இன்பம் வைத்தார்
வண்டுசேர் குழலினாளை மருவியோர் பாகம் வைத்தார்
அண்டவா னவர்கள் ஏத்தும் ஐயன் ஐயாறனாரே.. 4

பூசப் படித்துறை - திரு ஐயாறு 
வானவர் வணங்க வைத்தார் வல்வினை மாய வைத்தார்
கானிடை நடமும் வைத்தார் காமனைக் கனலா வைத்தார்
ஆனிடை ஐந்தும் வைத்தார் ஆட்டுவார்க் கருளும் வைத்தார்
ஆனையின் உரிவை வைத்தார் ஐயன் ஐயாறனாரே.. 5

சங்கணி குழையும் வைத்தார் சாம்பர் மெய் பூச வைத்தார்
வெங்கதிர் எரிய வைத்தார் விரிபொழில் அனைத்தும் வைத்தார்
கங்குலும் பகலும் வைத்தார் கடுவினை களைய வைத்தார்
அங்கம் அதுஓத வைத்தார் ஐயன் ஐயாறனாரே.. 6


பத்தர்கட்கு அருளும் வைத்தார் பாய்விடை ஏற வைத்தார்
சித்தத்தை ஒன்ற வைத்தார் சிவமதே நினைய வைத்தார்
முத்தியை முற்றவைத்தார் முறைமுறை நெறிகள் வைத்தார்
அத்தியின் உரிவை வைத்தார் ஐயன் ஐயாறனாரே.. 7

ஏறுகந்து ஏறவைத்தார் இடைமருது இடமும் வைத்தார்
நாறுபூங் கொன்றை வைத்தார் நாகமும் அரையில் வைத்தார்
கூறுமை பாகம் வைத்தார் கொல்புலித் தோலும் வைத்தார்
ஆறும்ஓர் சடையில் வைத்தார் ஐயன் ஐயாறனாரே.. 8


பூதங்கள் பலவும் வைத்தார் பொங்கு வெண்ணீறும் வைத்தார்
கீதங்கள் பாடவைத்தார் கின்னரந் தன்னை வைத்தார்
பாதங்கள் பலவும் வைத்தார் பத்தர்கள் பணிய வைத்தார்
ஆதியும் அந்தம் வைத்தார் ஐயன் ஐயாறனாரே.. 9

இரப்பவர்க்கு ஈய வைத்தார் ஈபவர்க்கு அருளும் வைத்தார்
கரப்பவர் தங்கட்கு எல்லாம் கடுநரகங்கள் வைத்தார்
பரப்புநீர் கங்கை தன்னைப் படர் சடைப்பாகம் வைத்தார்
அரக்கனுக்கு அருளும் வைத்தார் ஐயன் ஐயாறனாரே.. 10

திருச்சிற்றம்பலம்

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

8 கருத்துகள்:

  1. ஓம் சிவாய நாம.   வணங்குகிறேன், பணிகிறேன். சரணடைகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      தங்களுக்கு நல்வரவு....

      நம சிவாய ஓம்....

      நீக்கு
  2. ஓம் நம சிவாய...
    வாழ்க வையகம்.

    பதிலளிநீக்கு
  3. ஓம் நமசிவாய...
    ஓம் நமசிவாய...
    ஓம் நமசிவாய...

    பதிலளிநீக்கு
  4. நமச்சிவாய வாழ்க. நாதன் தாள் வாழ்க!

    உலகில் நன்மை விளையட்டும். மனிதனின் சுயநலம் விலகவேண்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. பதிவு அருமை.
    அறம் வளர்த்த நாயகி,ஐயாறப்பர் எல்லா நலன்களையும் அருள வேண்டும்.
    ஓம் நம சிவாய
    சிவாய நம ஓம்.

    பதிலளிநீக்கு
  6. சிவாய நமவென்று சிந்தித்திருப்போர்க்கு அபாயம் ஒரு போதும் இல்லை.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..