வெள்ளி, பிப்ரவரி 28, 2020

ஸ்ரீசங்கரநாராயணன்

முந்தைய பதிவு ஒன்றில் தஞ்சை மாநகரின்
ஸ்ரீசங்கரநாராயணர் திருக்கோயிலைப் பற்றிச் சொல்லியிருந்தேன்..

தஞ்சை மேலராஜவீதியில் விளங்கும் ஏழு திருக்கோயில்களில்
முதலாவதாகத் திகழ்வது இத்திருக்கோயிலே...

இத்திருக்கோயிலில்
ஸ்ரீ மஹாசிவராத்திரியை ஒட்டி நிகழ்ந்த
சந்தனக்காப்பு வைபவத்தின் திருக்காட்சி இன்றைய பதிவில்...

காலத்தால் முந்தைய தலம்..
திருக்கோயிலின் கட்டுமானம் பிந்தையது..

மூலவர் ஸ்ரீசங்கரநாராயண லிங்கம்..
அம்பிகை ஸ்ரீ பாலாம்பிகை...

கருவறைக்கு நேர் பின்புறமாக
பிரகார மண்டபத்தில் ஸ்ரீ சங்கர நாராயணர் திருமேனி..

ஆறடி உயரத்துக்கு ஆகிருதி...

சிவபெருமானின் இடப்புறம் நாராயண அம்சம்...

திருக்கோலத்தின் வலப்புறம் மலைமகள்... இடப்புறம் அலைமகள்...
பார்த்துக் கொண்டே இருக்கலாம்... அப்படியொரு அழகு...

படங்களை வழங்கியவர் அன்பின் திரு தஞ்சை ஞானசேகரன்..
அவர் தமக்கு நெஞ்சார்ந்த நன்றி...





ஸ்ரீ சங்கரநாராயணர் திருக்கோயில் 

சந்தனக்காப்பு அலங்காரத்தில் ஸ்ரீ சங்கரநாராயணர் 
ஏற்றான் புள்ளூர்த்தான் எயிலெரித்தான் மார்விடந்தான்
நீற்றான் நிழல்மணி வண்ணத்தான் கூற்றொருபால்
மங்கையான் பூமகளான் வார்சடையான் நீண்முடியான்
கங்கையான் நீள்கழலான் காப்பு..(2155)
-: பொய்கையாழ்வார் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

12 கருத்துகள்:

  1. நம் தஞ்சை சங்கரநாராயணர் தரிசனம் பெற்றேன்.   நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்களுக்கு நல்வரவு..
      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. உங்கள் இணையம் படுத்துவது சரியாகி விட்டதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விடாது கருப்பு!... - என்கிற மாதிரி இருக்கிறது...

      சாதாரணமாக ஒரு பதிவைத் தயார் செய்வதற்கு இரண்டு நாட்களாகின்றன..

      நீக்கு
  3. பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி... நன்றி..

      நீக்கு
  4. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி... நன்றி..

      நீக்கு
  5. சந்தனக்காப்பு மிக அருமை.
    படங்கள் எல்லாம் அழகு.
    தரிசனம் செய்தேன்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி... நன்றி..

      நீக்கு
  6. சந்தனக் காப்பு அலங்காரத்தில் சிறப்பான தரிசனம்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..