வியாழன், பிப்ரவரி 06, 2020

குடமுழுக்கு தரிசனம்

தஞ்சை ஸ்ரீராஜராஜேஸ்வரத்தின்
தட்சிணமேருவுக்கு இன்று வெகு சிறப்பாக
திருக்குட முழுக்கு நடைபெற்றுள்ளது...

அனைவரும் நேரிலோ தொலைக்காட்சி வழியாகவோ
கண்டு மகிழ்ந்திருக்கலாம்..



இருப்பினும், நமது தளத்தில் இவ்வைபவத்தின்
சில நிகழ்வுகளை காட்சிப்படுத்துவதில் மகிழ்ச்சி..





















மூலஸ்தானத்தில் ஈசன் எம்பெருமானின் தரிசனம்...



காணொளி மற்றும் சில படங்களைத் தவிர மற்றவற்றை
வலையேற்றிய ஸ்வாமி பைன் ஆர்ட்ஸ் ஸ்டுடியோ அவர்களுக்கு
நெஞ்சார்ந்த நன்றி...





பல்லாயிரக் கணக்கில் பக்தர்கள் கலந்து கொண்ட
இப்பெரும் விழா வெகு சிறப்பாக நடந்துள்ளது...

அல்லும் பகலும் சிறப்பாகப் பணியாற்றிய
அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்...

எல்லாவற்றுக்கும் மேலாக
குளிர் மா முகிலாகக் கூடி வந்த
இறைவனின் திருவருளைப் போற்றி நிற்போம்..


தஞ்சை விடங்கர் - ஸ்ரீ தியாகராஜப்பெருமான் அல்லியங்கோதை 
எவரும் மாமறைகள் எவையும் வானவர்கள்
ஈட்டமும் தாள்திருக் கமலத்
தவரும் மாலவனும் அறிவரும் பெருமை
அடல்அழல் உமிழ்தழல் பிழம்பர்
உவரி மாகடலின் ஒலிசெய் மாமறுகில்
உறுகளிற்று அரசினது ஈட்டம்
இவருமால் வரைசெய் இஞ்சிசூழ் தஞ்சை
இராசராசேச்சரத்து இவர்க்கே.. 
-: கருவூரார் - திருவிசைப்பா :- 
(ஒன்பதாம் திருமுறை)

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
ஃஃஃ

17 கருத்துகள்:

  1. குடமுழுக்குக் காட்சிகள் அருமையாக இருக்கின்றன. மந்திர ஒலிகளின் கூடவே தேவார, திருவாசகப் பாராயணமும் நடந்திருக்கிறது. தமிழ் ஆர்வலர்கள் அதைத் தமிழிலும் குடமுழுக்கு எனச் சொல்லி மகிழ்ந்திருக்கின்றனர். ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் தஞ்சைக்கோயிலில் தமிழ் அரியணை ஏறியது என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். ஒரு பக்கம் பரிதாபம், இன்னொரு பக்கம் சிரிப்பு! இதைக் கூடப் புரிந்து கொள்ள முடியாதவர்கள் தான் தமிழில் குடமுழுக்கு எனக் கேட்டுக் கொண்டு இருக்கின்றனர். இன்னும் சிலர் தமிழுக்குக் கிடைத்த வெற்றி என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். காலம் காலமாக எல்லாச் சிவன் கோயில்களிலும் பஞ்சப் புராணங்களும் பாடப்பட்டு வருகின்றன. ஓதுவார்களுடன் கூடவே சிவாசாரியார்களும் சொல்லுவார்கள். இப்போது அவர்களுடன் ஆதீனங்களும் சேர்ந்து கொண்டிருக்கின்றனர். அவ்வளவே. பஞ்சப் புராணம் சொல்லாமல் எந்தக் கோயிலிலும் கற்பூர ஆரத்தி கிடையாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி....

      இதெல்லாம் அன்றாடம் சிவாலயங்களுக்குச் செல்வோர்களுக்குத் தான் தெரிந்திருக்கும்...

      திருக்கோயில் நடைமுறைகளைப் பற்றித் தெரியாமல்
      பேசிக்கொண்டு இருப்போர்களைப் பற்றி நினைக்கும்போது
      வேதனையாகத் தான் இருக்கிறது...

      இதைப் பற்றி தனிப் பதிவே எழுதலாம்...

      மகிழ்ச்சி... நன்றியக்கா..

      நீக்கு
  2. பதில்கள்
    1. அன்பின் தனபாலன் ..
      வருகைக்கு மகிழ்ச்சி... நன்றி..

      நீக்கு
  3. பதில்கள்
    1. அன்பின் ஜி ..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி... நன்றி..

      நீக்கு
  4. பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி... நன்றி..

      நீக்கு
  5. நேரலையில் கூட என்னால் காண முடியவில்லை.  பணி.   சிறப்பான படங்களாலும் காணொளியாலும் குறை தீர்ந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      நான் இங்கே நேரலையில் தான் தரிசித்தேன்..
      இந்த வரம் கிடைத்ததே பேரருள்..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி... நன்றி..

      நீக்கு
  6. நீங்கள் சொல்லி இருப்பதுபோல குடமுழுக்குசிறப்பாக நடைபெற இறைவன் திருவுள்ளம் இருந்ததே,  நன்றி தெரிவிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      அவனது அருளே பெருந்துணை..

      தங்கள் கருத்துரைக்கு மகிழ்ச்சி... நன்றி..

      நீக்கு
  7. நேற்று வீட்டிலிருந்து நேரடி ஒலிபரப்பை காணமுடியவில்லை.
    வானரமுட்டியில் உறவினர் வீட்டு புதுமனைபுகுவிழாவிற்கு செல்லும் போது புதியதலைமுறையில் நேரடி ஒளிபரப்பை பார்த்துக் கொண்டு சென்றோம்.

    உங்கள் தளத்திலும் கண்டு மகிழ்ந்தேன்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் மகிழ்ச்சியும்
      கண்டு மகிழ்ச்சி... நன்றி..

      நீக்கு
  8. மிகச் சிறப்பான படங்களை இங்கே தொகுத்துத் தந்தமைக்கு நன்றி ஐயா.

    நேரலையில் பார்க்க இயலவில்லை. சில காணொளிகள் முகநூல் வழி ரசித்தேன். இங்கே நிழற்படங்களாக பார்க்கக் கிடைத்ததில் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி... நன்றி..

      நீக்கு
  9. அருமை. நேரில் கண்டு இன்புற்றேன். தற்போது உங்கள் பதிவு மூலமாகவும்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..