திங்கள், டிசம்பர் 09, 2019

கார்த்திகை தரிசனம்

இன்று கார்த்திகைத் திங்களின் நான்காவது திங்கள்..

இன்றைய பதிவில் காசியம்பதிக்கு நிகரான
திரு ஐயாறு தரிசனம்..


திருத்தலம்
திரு ஐயாறு



இறைவன் - ஸ்ரீ ஐயாறப்பர்,  பஞ்சநதீஸ்வரர்,
அம்பிகை - ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி



தல விருட்சம் - வில்வம்
தீர்த்தம் - காவிரி..


கங்கையைச் சடையுள் வைத்தார் கதிர்ப்பொறி அரவும் வைத்தார்
திங்களைத் திகழ வைத்தார் திசை திசை தொழவும் வைத்தார்
மங்கையைப் பாகம் வைத்தார் மான்மறி மழுவும் வைத்தார்
அங்கையில் அனலும் வைத்தார் ஐயன் ஐயாறனாரே..4/38

உடைதரு கீளும் வைத்தார் உலகங்கள் அனைத்தும் வைத்தார்
படைதரும் மழுவும் வைத்தார் பாய்புலித் தோலும் வைத்தார்
விடைதரு கொடியும் வைத்தார் வெண்புரி நூலும் வைத்தார்
அடைதர அருளும் வைத்தார் ஐயன் ஐயாறனாரே..



வானவர் வணங்க வைத்தார் வல்வினை மாய வைத்தார்
கானிடை நடமும் வைத்தார் காமனைக் கனலா வைத்தார்
ஆனிடை ஐந்தும் வைத்தார் ஆட்டுவார்க்கு அருளும் வைத்தார்
ஆனையின் உரிவை வைத்தார் ஐயன் ஐயாறனாரே..

பத்தர்கட்டு அருளும் வைத்தார் பாய்விடை ஏறவைத்தார்
சித்தத்தை ஒன்ற வைத்தார் சிவமதே நினைய வைத்தார்
முத்தியை முற்ற வைத்தார் முறைமுறை நெறிகள் வைத்தார்
அத்தியின் உரிவை வைத்தார் ஐயன் ஐயாறனாரே..



இரப்பவர்க்கு ஈய வைத்தார் ஈபவர்க்கு அருளும் வைத்தார்
கரப்பவர் தங்கட்கு எல்லாம் கடுநரகங்கள் வைத்தார்
பரப்புநீர் கங்கை தன்னைப் படர்சடைப் பாகம் வைத்தார்
அரக்கனுக்கு அருளும் வைத்தார் ஐயன் ஐயாறனாரே!..



ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
ஃஃஃ

21 கருத்துகள்:

  1. சிறுவயதில் ஒரே ஒருமுறை திருவையாறு சென்றிருக்கிறேன்.   ஜனவரி மாதத்தில் தியாகய்யர் உற்சவத்துக்குச்சென்று வந்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. ஐயாறப்பரை தரிசனம் செய்துகொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்று அருகிலுள்ள சிவ ஆலயத்தில் தரிசனம் செய்வது நன்று..

      மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  3. இன்று நான்காவது சோமவாரத்தில் ஐயாறப்பர் தரிசனம் கிடைத்தது.

    பதிலளிநீக்கு
  4. படங்கள் மிக அழகு, துல்லியமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதெல்லாம் படங்களை வலையேற்றிய அன்பர்களையே சாரும்...

      மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  5. படங்கள், பதிவு வழி சிறப்பான தரிசனம். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. ஐயாறப்பர் தரிசனம் நன்று

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  7. ஒரு முறை தியாகையர் உற்சவத்துக்கு திருவையாறு சென்று வந்திருக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. நேற்றுத்தான் திருவையாறு பற்றியும் சோமசூக்தப் பிரதக்ஷிணம் பற்றியும் பேசிக் கொண்டிருந்தோம். இன்று இங்கே ஐயாறப்பர் தரிசனம் கிடைத்து விட்டது. மிக்க நன்றி பகிர்வுக்கு.

    பதிலளிநீக்கு
  10. காசியம்பதிக்கு நிகரான ஐயாறப்பன் என்று சொல்லியிருக்கீங்களே.. (காசிக்கு நிகர் தென்காசிதான் இல்லையா?)

    தரிசனம் கண்டு மகிழ்ந்தேன்.

    பதிலளிநீக்கு
  11. அன்பின் நெல்லை..

    ஸ்வேதாரண்யம் பஞ்சநதம் கௌரி மாயூரம் அர்ஜூனம் சாயாவனம் ச ஸ்ரீ வாஞ்சியம் காசீ ஷேத்ர ஷமான ஷட்..

    என்று ஸ்லோகம்..

    திருவெண்காடு, திருஐயாறு, மயிலாடுதுறை, திருவிடை மருதூர், சாயாவனம் ஸ்ரீவாஞ்சியம் எனும் ஆறு தலங்களே காசிக்கு நிகரானவை..

    தென்காசி இத்துடன் சொல்லப்படும் வேறு தளங்கள் எல்லாம் அன்பினால் சொல்லப் படுபவை....

    என்றாலும்
    எல்லாத் தலங்களிலும் உறைபவன் திருக்கயிலாயநாதனே!... என்று திருநாவுக்கரசர் எடுத்துரைக்கின்றார்....

    தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி... நன்றி...

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..