செவ்வாய், டிசம்பர் 24, 2019

மார்கழி தரிசனம் 08

தமிழமுதம்

ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தாற் செயின்..(484) 
***
அருளமுதம்

ஸ்ரீ சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்
ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை
திருப்பாடல் - 08


கீழ்வானம் வெள்ளென்று எருமைச் சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்
கூவுவான் வந்து நின்றோம் கோதுகலம் உடைய
பாவாய் எழுந்திராய் பாடிப்பறை கொண்டு
மாவாய்ப் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்
ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்!..

ஆழ்வார் அமுதம்


ஸ்ரீ ஸ்ரீநிவாசப்பெருமாள்
கல் கருடவாகனம் - நாச்சியார் கோயில் 
காலை எழுந்துலகம் கற்பனவும் கற்றுணர்ந்த
மேலைத் தலைமறையோர் வேட்பனவும் வேலைக்கண்
ஓராழியானடியே ஓதுவதும் ஓர்ப்பனவும்
பேராழி கொண்டான் பெயர்.. (2147)
-: பொய்கையாழ்வார் :-

ஓம் ஹரி ஓம் 
* * *

சிவ தரிசனம்
திருஆரூர்



ஒருவனாய் உலகேத்த நின்ற நாளோ
ஓருருவே மூவுருவம் ஆன நாளோ
கருவனாய்க் காலனை முன் காய்ந்த நாளோ
காமனையும் கண்ணழலால் விழித்த நாளோ
மருவனாய் மண்ணும் விண்ணும் தெரித்த நாளோ
மான்மறிக் கையேந்தியோர் மாதோர் பாகம்
திருவினாள் சேர்வதற்கு முன்னோ பின்னோ 
திரு ஆரூர்க் கோயிலா கொண்ட நாளே..(6/34)
-: திருநாவுக்கரசர் :-
***

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிச் செய்த 
திருப்பள்ளியெழுச்சி
திருப்பாடல் - 08

ஸ்ரீ வீதிவிடங்கப்பெருமான் - திருஆரூர் 
முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய்
மூவரும் அறிகிலாய் யாவர் மற்றறிவார்
பந்தணை விரலியும் நீயும் நின்னடியார் 
பழங்குடில் தொறும் எழுந்தருளிய பரனே
செந்தழல் புரைதிரு மேனியும் காட்டித்
திருப்பெருந் துறையுறை கோயிலுங் காட்டி
அந்தணன் ஆவதுங் காட்டி வந்தாண்டாய்
ஆரமுதே பள்ளி எழுந்தருளாயே!.. 
* * *

தேவி தரிசனம்



சொல்லும் பொருளும் என நடமாடும் துணைவருடன்
புல்லும் பரிமளப் பூங்கொடியே நின்புது மலர்த்தாள்
அல்லும் பகலும் தொழுமவர்க்கே அழியா அரசும்
செல்லும் தவநெறியும் சிவலோகமும் சித்திக்குமே.. (28)
- அபிராமிபட்டர் -

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
* * *

11 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்...
      தங்களுக்கு நல்வரவு...

      மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  2. பதில்கள்
    1. அன்பின் ஜி..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி... நன்றி..

      நீக்கு
  3. முத்துப் போல் நான்கு பாடல்கள்,

    ஆண்டாள் தரிசனம், அம்பிகை ஈஸ்வரன் அருள்,அபிராமி அந்தாதி
    படிக்கும் வாய்ப்பு,
    கல்கருடனின் பார்வை எல்லாம் ஒருமிக்கக் கிடைத்தது. மிக நன்றி அன்பு துரை,.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றியம்மா...

      நீக்கு
  4. நாச்சியார் கோவில் கருடசேவை தரிசனம், திருஆரூர் வீதிவிடங்கப் பெருமான் தரிசனம் மிக அருமை.
    தரிசனம் செய்தேன்.
    நன்றி, வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  5. வீதி விடங்கரும், கமலாம்பிகையும் அருமையான தரிசனம். தொடர்ந்து இறை தரிசனங்களைக் கொடுத்து வருவதற்கு நன்றி. மீண்டும் உங்கள் மூலம் கல்கருடன் தரிசனமும் கிடைத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி... நன்றியக்கா...

      நீக்கு
  6. அன்பின் தனபாலன்..
    தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி... நன்றி..

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..