ஞாயிறு, டிசம்பர் 22, 2019

மார்கழி தரிசனம் 06

தமிழமுதம்

உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.. (105)
* * *

அருளமுதம்

சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள்
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை
திருப்பாடல் - 06



புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ
பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்!..
* * *

ஆழ்வார் அமுதம்

ஸ்ரீ ராமஸ்வாமி - திருக்குடந்தை
அயல் நின்ற வல்வினையை அஞ்சினேன் அஞ்சி
உயநின் திருவடியே சேர்வான் நயநின்ற
நன்மாலை கொண்டு நமோநாரணா என்னும்
சொன்மாலை கற்றேன் தொழுது.. (2138)
-: பொய்கையாழ்வார் :-

ஓம் ஹரி ஓம்
* * *

சிவதரிசனம்
திருநல்லூர்

ஸ்ரீ பஞ்சவர்ணேஸ்வரர் - திருநல்லூர்
(தஞ்சை பாபநாசம் அருகில்) 

நினைந்துருகும் அடியாரை நைய வைத்தார்
நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார்
சினந்திருகு களிற்றுரிவைப் போர்வை வைத்தார்
செழுமதியின் தளிர் வைத்தார் சிறந்து வானோர்
இனந்துருவி மணிமகுடந் தேறத் துற்ற
இனமலர்கள் போதவிழ்ந்து மதுவாய்ப் பில்கி
நனைந்தனைய திருவடியென் தலைமேல் வைத்தார்
நல்லூர் எம்பெருமான் நல்லவாறே.. (6/14)
-: திருநாவுக்கரசர் :-
***

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிச் செய்த
திருப்பள்ளியெழுச்சி
திருப்பாடல் - 06

பப்பற வீட்டிருந்து உணரும்நின் அடியார்
பந்தணை வந்தறுத்தார் அவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானுடத்து இயல்பின்
வணங்குகின்றார் அணங்கின் மணவாளா
செப்புறு கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே
இப்பிறப்பறுத்து எம்மை ஆண்டருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!..
* * *
தேவி தரிசனம்

ஸ்ரீ மாரியம்மன் 
மணியே மணியின் ஒளியே ஒளிரும்மணி புனைந்த
அணியே அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப்
பிணியே பிணிக்கு மருந்தே அமரர்பெரு மருந்தே
பணியேன் ஒருவரை நின்பத்ம பாதம் பணிந்தபின்னே.. (024)
-: அபிராமி பட்டர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
* * *

12 கருத்துகள்:

  1. தரிசித்தேன்.   அனைவரும் திருப்பாவை மட்டுமே வெளியிடும்போது நீங்கள் மட்டுமே மற்றவற்றையும் வெளியிடுபவர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்களுக்கு நல்வரவு...

      சென்றவருடம் நினைத்திருந்தேன்...
      இவ்வருடம் மேம்படச் செய்ய வேண்டும் என்று...

      அது இங்குள்ள சூழலில் சாத்தியப்பட வில்லை..

      பாருங்கள்... இன்றிலிருந்து வியாழன் வரை பகலில் மடை திறந்த வெள்ளமாக இணையம் பாய்ந்து வரும்...

      ஆனால் பகலில் வேலைக்குச் சென்றாக வேண்டுமே...

      எல்லாம் அவனருள்...

      தங்கள் அன்பினுக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. பதிவு அருமை. தரிசனம் செய்ய அருமையான படங்கள்.
    படித்து பார்த்து கண்குளிர தரிசனம் செய்தேன்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. முன்னால் எல்லாம் திருப்பாவை, திருவெம்பாவை சேர்த்தே போட்ட நினைவு. பதிவுகள் பெரியதாக இருந்தன என்பதால் அப்புறமாப் போடலைனு நினைக்கிறேன். ஆனால் திருவெம்பாவைப் பதிவுகள் மரபு விக்கியிலும், என்னோட இன்னொரு வலைப்பக்கம் "என் பயணங்களில்" பக்கமும் காணக்கிடைக்கும். இப்போது one india வில் திருவெம்பாவைக்கு எளிய பொருள் (தத்துவார்த்தமாகக் கொடுக்கலை) எல்கே மூலம் வெளி வருகிறது. (ஹிஹி) விளம்பரந்தேன்! :))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் விரிவான கருத்துரையும் மகிழ்ச்சி...
      நன்றியக்கா..

      நீக்கு
  5. இங்கே காலைவேளையில் அனைத்து தெய்வ தரிசனங்களும் கிடைத்தன். நேற்று எப்படியோ பார்க்காமல் விட்டிருக்கேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல தளங்களுக்கும் செல்ல வேண்டியதிருக்கும்...
      விடுபட்டிருந்தால் என்ன!.. இப்போது வந்து விட்டீர்களே...

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...நன்றியக்கா..

      நீக்கு
  6. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி... நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..