வெள்ளி, டிசம்பர் 20, 2019

மார்கழி தரிசனம் 04

தமிழமுதம்

செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றலரிது.. (101)
* * *

அருளமுதம்

சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள்
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை
திருப்பாடல் - 04


ஆழிமழைக் கண்ணா ஒன்றுநீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழிமுதல்வன் உருவம் போல் கறுத்துப்
பாழியந் தோளுடைப் பற்பநாபன் கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழை போல்
வாழஉலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்!..

ஆழ்வார் அமுதம்



புரியொருகை பற்றி பொன்னாழி ஏந்தி
அரியுருவம் ஆளுருவுமாகி எரியுருவ
வண்ணத்தான் மார்பிடந்த மாலடியை அல்லால்மற்
றெண்ணத்தான் ஆமோ இமை.. (2112)
-: பொய்கையாழ்வார் :-

ஓம் ஹரி ஓம் 
* * *

சிவதரிசனம்
திருச்சோற்றுத்துறை

ஸ்ரீ சோற்றுத்துறை நாதன் - ஸ்ரீ அன்னபூரணி
திருச்சோற்றுத்துறை 
மூத்தவனாய் உலகுக்கு முந்தினானே
முறைமையால் எல்லாம் படைக்கின்றானே
ஏத்தவனாய் ஏழுலகும் ஆயினானே
இன்பனாய்த் துன்பங் களைகின்றானே
காத்தவனாய் எல்லாந்தான் காண்கின்றானே
கடுவினையேன் தீவினையைக் கண்டு போகத்
தீர்த்தவனே திருச்சோற்றுத் துறையுளானே
திகழொளியே சிவனே உன் அபயம் தானே.. (6/44)
-: திருநாவுக்கரசர் :-
* * *

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிச் செய்த
திருப்பள்ளியெழுச்சி
திருப்பாடல் - 04

ஸ்ரீ பிரம்மபுரீசர் - திருப்பட்டூர்
இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே
என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!..
* * *
தேவி தரிசனம்


பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்
காத்தவளே பின் கரந்தவளே கறைக்கண்டனுக்கு
மூத்தவளே என்றும் மூவாமுகுந்தற்கு இளையவளே
மாத்தவளே நின்னையன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே.. (013)
-: அபிராமி பட்டர்:-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
* * *

11 கருத்துகள்:

  1. திருப்பட்டூர் இரண்டு, மூன்று முறை போனோம். அழகிய படங்களுடன் சுருக்கமான அழகிய பதிவு. நரசிம்மர் அழகோ அழகு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அக்கா..
      தங்களுக்கு அன்பின் நல்வரவு...

      நீக்கு
    2. திருப்பாடல்களையும் திருப்பாசுரங்களையும் மட்டுமே பதிவில் கொடுக்க முடிகிறது..

      இவ்வருடம் இந்த அளவுக்குச் செய்வதே
      அவள் தந்த வரம்...

      நீக்கு
  2. படித்தேன். ரசித்தேன். 

    ஆழிமழைக் கண்ணா பாடலுக்கு விளக்கம் கீதா அக்கா பதிவில் படித்து வந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஸ்ரீராம்...

      கீதா அக்கா பதிவிற்கு இனிமேல் தான் செல்ல வேண்டும்...

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

  5. அருளுமுதம்,ஆழ்வார் அமுதம், சிவதரிசனம் அனைத்தும் அருமை.
    நரசிம்மர் மஞ்சகாப்பா அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..