ஞாயிறு, நவம்பர் 17, 2019

ஓங்கி வரும் சரணத்திலே

இன்று கார்த்திகையின் முதல் நாள்..

நல்லோர் அனைவருக்கும் தெரியும் இன்றைய நாளின் சிறப்பு...


மானுடம் தாங்கி வந்த மகத்தான ஜோதி
மணிகண்டன் புகழ்ச் சேவடி மக்களைக் காக்கட்டும்...

தன்னை எதிர்த்தோரையும் இடர்ப்படுத்தியோரையும்
இன்முகத்துடன் அரவணைத்துக் கொண்டவன் மணிகண்டன்...

அல்லலுற்று அரற்றித் திரியும் உயிர்கட்கு
ஐயனாக அப்பனாக நிற்கின்ற அருட்செல்வன்..

மணிகண்டப் பெருமானின் திவ்ய சரித்திரத்துள்
மானுடம் காக்க வந்த திருக்குறளின் பாக்கள்
பலவற்றைக் காணலாம்!.. 

மணிகண்டன் வழி கொண்டு வையகம் வாழட்டும்...  
மணிகண்டன் வழி கண்டு வளமெலாம் சேரட்டும்...


நெஞ்சங் கவர்ந்த
இப்பாடலை இயற்றியவர் திரு K. சோமு..

இசை கூட்டிப் பாடியவர் திரு. K. வீரமணி..
*****

ஓங்கார நாதத்திலே ஓங்கி வரும் சரணத்திலே 
பாங்காகத் தோன்றிடுவான் பந்தளத்து சபரியப்பன்.. 
நீங்காத மனை செல்வம் நிலையான புகழ் தேகம் 
தாங்கி வரும் இருமுடிக்கு தக்கபடி தந்திடுவான்

ஓங்கார நாதத்திலே ஓங்கி வரும் சரணத்திலே 
பாங்காகத் தோன்றிடுவான் பந்தளத்து சபரியப்பன்..

 நெய் மணக்கும் மேனியப்பா நிம்மதிக்குத் தோணியப்பா
கை மணக்கும் வாய் மணக்கும் கனதனம் மணக்குமப்பா
ள்ளமே அவன் கோயில் கண்களே அவன் வாசல்
வள்ளல் மணிகண்டனப்பா.. வழிவேலன் தம்பியப்பா!...

ஓங்கார நாதத்திலே ஓங்கி வரும் சரணத்திலே 
பாங்காகத் தோன்றிடுவான் பந்தளத்து சபரியப்பன்..

கற்பூர ஜோதி மலை காந்த மலை சபரி மலை
நற்பதம் நாடி வரும் ஞானியர்தம் தியான மலை
பொற்பதம் மேடையிலே பூரணனின் காட்சியிலே
அற்புதங்கள் கோடியப்பா.. ஐயப்பா சரணம் அப்பா!..


ஐயப்பா சரணம் அப்பா!.. 


ஸ்வாமியே சரணம் ஐயப்பா!..
ஃஃஃ

14 கருத்துகள்:

  1. பதிவைக் காணோமேனு கொஞ்சம் முன்னர் தான் நினைச்சேன். ஸ்வாமியே சரணம் ஐயப்பா! பாடலைக் காலம்பர கேட்டுக்கணும். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் அக்கா..
      தங்களுக்கு நல்வரவு....

      பதிவை எப்போதும் இங்குள்ள நேரம் 3:30 க்கு ஒழுங்கு செய்து வைப்பேன்..

      இணையம் குதித்துக் கொண்டிருந்ததால் அதற்கு ஒன்றும் புரியவில்லை..

      நேரத்தை அதுவாகவே மாற்றிக் கொண்டிருக்கிறது...

      அரை மணி நேர தாமதத்தில்
      பதிவை நானே வெளியிட்டேன்...

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. நல்லதொரு பாடல். கேட்கத் தந்தமைக்கு நன்றி. ஐயனின் பூரண அருள் அனைவருக்கும் கிடைத்திடட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..

      ஐயன் அருள் எங்கும் நிறையட்டும்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  3. அற்புதமான பாடல் காலையில் இனித்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  4. ஸ்வாமியே சரணம் ஐயப்பா...  என்னுடைய இரண்டு நண்பர்கள் மாலை  போடப் போவதாகச் சொன்னார்கள்.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      ஐயன் அருள் எங்கும் நிறையட்டும்...
      மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  5. பாடலை எழுதியவரும் பாடியவரும் சகோதரர்களோ...

    பதிலளிநீக்கு
  6. கார்த்திகை மாதம் முழுவதும் ஸ்வாமியே சரணம் ஐயப்பா எனும் ஒலி கேட்டுக் கொண்டே இருக்கும் எங்கும்.
    பாடல் கேட்டு மகிழ்ந்தேன், இனிமையான பாடல்.
    படங்கள் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி... நன்றி...

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..