இன்றைய பதிவில்
முத்தான நகைச்சுவையும் இனிய காணொளி ஒன்றும்..
இனியும் இதுபோல் வாய்க்குமா !..
- என்று ஒவ்வொருவரையும் மயங்க வைக்கும் காணொளி -
கண்களையும் கலங்க வைக்கும்...
FB ல் கிடைத்தது இந்தக் காணொளி..
இதனை உருவாக்கியவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி..
மாற்றங்கள் இயல்புதான்..
ஆனாலும்
இன்றைய நவீனங்களால்
நாம் எய்தப் பெற்றது வரமா!... சாபமா?..
தெரியவில்லை...
முத்தான நகைச்சுவையும் இனிய காணொளி ஒன்றும்..
ரெட்டை வால் ரெங்குடு - ஆனந்த விகடன் |
- என்று ஒவ்வொருவரையும் மயங்க வைக்கும் காணொளி -
கண்களையும் கலங்க வைக்கும்...
FB ல் கிடைத்தது இந்தக் காணொளி..
இதனை உருவாக்கியவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி..
மாற்றங்கள் இயல்புதான்..
ஆனாலும்
இன்றைய நவீனங்களால்
நாம் எய்தப் பெற்றது வரமா!... சாபமா?..
தெரியவில்லை...
வாழ்க நலம்..
ஃஃஃ
...
மதன் ஜோக் பிரமாதம். அம்மா மிரண்டுவிட மாட்டாரோ!
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம்..
நீக்குதங்களுக்கு நல்வரவு...
மாடு மிரளாமல் இருக்கிறதே..
அதன் நடையைப் பாருங்களேன்...
அந்தக் காணொளி பார்க்கும்போது மனம் அந்தக்காலத்துக்கு சென்று விடுகிறது. ஆமாம், ஆமாம், இவை எல்லாம் நாமும் அனுபவித்திருக்கிறோம் என்று தோன்றுகிறது. இன்னும் இதில் சொல்லாமல் விட்டது எவ்வளவு என்றும் தோன்றுகிறது...
பதிலளிநீக்குஇந்தக் காணொளிக்கே வித்தியாசமாக ஒரு சந்தோஷ பின்னணி இசை கொடுத்திருந்தார்கள் என்றால் வேறு மாதிரி இருக்கும். இனிய நினைவுகள்தான். ஆனால் அவை சந்தோஷ நினைவுகளும் கூட!
பதிலளிநீக்குஇந்த மாறுதல்கள் எல்லாம் கூட விதிதான்! எல்லாம் இப்படி மாறி அனுபவிக்கவேண்டும் என்பதுவும் விதி!
பதிலளிநீக்கு"காலம் ஒருநாள் மாறும்... நம் கவலைகள் யாவும் தீரும்... நடந்ததை எண்ணி அழுகிறேன்... நாட்டப்படி எண்ணி சிரிக்கிறேன்...."
இந்த வரிகள் இங்கு பொருந்தாது இல்லை?!
இந்தக் காணொளி எனக்கு வாட்சப்பிலும் வந்தது. பார்க்கையில் மனம் விம்மியது. ஆனால் இப்போதைய காலத்தில் இருக்கும் இளைய தலைமுறை இன்னும் 20 வருடம் கழித்து ஏற்படும் முன்னேற்றங்களைப் பார்த்து, எங்க காலம் தான் பொற்காலம் என்று சொல்லலாம். நம் காலம் கற்கால நிலைக்குப் போகலாம்.
பதிலளிநீக்குகாலம் மாறவில்லை மனிதன்தான் மாறிக்கொண்டே போகிறான்.
பதிலளிநீக்குஅடுத்த தலைமுறைகளின் வாழ்வுநிலை ?
மனிதன் தான் மாறி விட்டான்
பதிலளிநீக்குஏன் மாறி விட்டது ஐயா...?
நீக்குவந்த நாள் முதல் இந்த நாள் வரை
வானம் மாறவில்லை...
வான் மதியும் நீரும் கடல் காற்றும்
மலரும் மண்ணும்
கொடியும்சோலையும் நதியும் மாறவில்லை...
மனிதன் மாறிவிட்டான்...
ஓஊஅ ஓஊஅ ஊஓஓஓஒ ஒயே (2)
நிலை மாறினால் குணம் மாறுவார் - பொய்
நீதியும் நேர்மையும் தேடுவார் - தினம்
ஜாதியும் பேதமும் கூறுவார் - அது
வேதன் விதியென்றோதுவார்...
மனிதன் மாறிவிட்டான்...
மதத்தில் ஏறிவிட்டான்...
இன்பமும் காதலும் இயற்கையின் நீதி
ஏற்றதாழ்வுகள் மனிதனின் ஜாதி...
பாரில் இயற்கை படைத்ததையெல்லாம்...
பாவி மனிதன் பிரிந்து வைத்தானே...?
மனிதன் மாறிவிட்டான்...
மதத்தில் ஏறிவிட்டான்...
மதத்தில் அவன் ஏறியிருந்தால்
நீக்குமனிதனாகி இருப்பான்..
மதம் அல்லவோ ஏறி விட்டது..
அதனால் மிருகம் ஆகி விட்டான்....
அன்பின் தனபாலன்..
மகிழ்ச்சி.. நன்றி..
// மதம் அல்லவோ ஏறி விட்டது..
நீக்குஅதனால் மிருகம் ஆகி விட்டான்... //
உண்மை... புரிதலுக்கு நன்றி ஐயா...
நல்லதொரு காணொலி... முகநூலிலும் கண்டேன்... இந்த காணொலி இன்றைய நிலைக்கு சரி தான் (கேவலம்...) நன்றி ஐயா...
பதிலளிநீக்குரெட்டை வால் ரங்குடு ஜோக் ரசித்தேன்.
பதிலளிநீக்குகாணொளி நன்றாக இருக்கிறது.
வீட்டில் நிறைய குழந்தைகள் கிடையாது. ஒரே குழந்தை.
விளையாட்டு முறைகள் மாறி விட்டது.
இந்தக் கால குழந்தைகளும் சந்தோஷமாய்தான் இருக்கிறார்கள் அவர்கள் உலகத்தில்.
இந்த வருடம் தீபாவளிக்கு மகன் ஊரில் தமிழ்ச்சங்க நாடகம் ''அன்றும், இன்றும்தான்.' காலையந்திரத்தில் ஏறி முற்காலத்துக்கு போவார்கள் அங்குள்ள விளையாட்டுக்களை விளையாடுவார்கள் . ஒரு நாள் அந்த காணொளியை போடுகிறேன் பதிவில்.
பதிலளிநீக்குபேரன் தான் காலசக்கரத்தை இயக்குமபவராய் வருவான்.
துரை செல்வராஜு சார்... மொபைலுக்கு முன்னால், தொலைக்காட்சி வந்தபோதே குடும்பத்திற்குள் விரிசல் ஏற்பட்டுவிட்டது. பெண்கள் சீரியலில் மூழ்க ஆரம்பித்துவிட்டார்கள்.
பதிலளிநீக்குநம் முன்னுரிமை மாறிவிட்டது என்றுதான் தோன்றுகிறது.
முதல் ஜோக்கப் பார்த்ததும்.... தற்போது அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் கிரஹப்ப்ரவேசத்தின் போது, பசு மாட்டைக் கூட்டிச் செல்ல முடியாதாகையால் (லிஃப்ட் பிரச்சனைகள்), அதற்குப் பதில் இப்போதெல்லாம் பசு பொம்மையை வைத்து அதற்குரிய சாங்கியங்கள் செய்துவிடுகிறார்களாம்.
பதிலளிநீக்குஒரு சிலர் அடுக்குமாடிக்குடியிருப்பின் மாடிக்கு அருகே வந்து பசுவை வைத்து பூஜை செய்தது உண்டு. இல்லை எனில் கோபூஜையை மானசிகமாகப் பண்ணி விடுகிறார்கள்.
நீக்குஇரண்டையும் பார்த்தேன். யதார்த்தத்தை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளீர்கள். நாம் பெற்றது சாபமே.
பதிலளிநீக்குதமிழ் விக்கிபீடியா டிசம்பர் 2019இல் நடத்துகின்ற ஆசிய மாதம் போட்டியில் கலந்துகொண்டு கட்டுரைகளை எழுதி வருகிறேன். இந்த மாதம் 30ஆம் நாள் வரை இப்போட்டி நடைபெறுகிறது. தமிழில் இல்லாத செய்திகளை/பதிவுகளை ஆங்கில விக்கிபீடியாவிலிருந்து தமிழுக்குக் கொண்டு வரும் என்னுடைய சிறிய முயற்சி. ஒரு நாளைக்குக் குறைந்தது ஒரு கட்டுரையாவது எழுத/மொழிபெயர்க்க திட்டமிட்டு எழுதி வருகிறேன். ஆதலால் கருத்துரை இடுவதில் தாமதமாகிறது. பொறுத்துக்கொள்க.