ஞாயிறு, அக்டோபர் 20, 2019

வாழ்க மாமன்னன்..

தஞ்சை அரண்மனை வளாகத்தில்
புத்தகக் கண்காட்சி அரங்கு அமைப்பதற்காகக்
குழிகள் தோண்டியபோது
பழைமையான பொருட்கள்
கிடைத்துள்ளன...

அதைத் தொடர்ந்து அங்கே
அகழ்ந்து ஆய்வு செய்வதற்கு
கோரிக்கைகள் எழுந்துள்ளன...

சோழர்களது அரண்மனையின்
அடித்தளத்தின் மீது தான்
பின்னர் வந்த நாயக்கர்கள் 
தங்களுக்கான அரண்மனையை எழுப்பினார்கள்
என்று ஒரு கருத்தும் உள்ளது..

விரிவான ஆய்வு நடத்தப்பட்டால்
நல்ல விவரங்கள் கிடைக்கக் கூடும்..

இன்னும் இரு வாரங்களில்
சதயப்பெருவிழா நிகழ உள்ளது..

தமிழகத்தின் பெருமையை விண்ணளவுக்கு உயர்த்திய
மாமன்னன் ஸ்ரீராஜராஜ சோழனின் புகழ் வாழ்க...











தமிழ் மண்ணின்
பெருமை தன்னைக்
கடல் கடந்தும் நிலைநாட்டிய
மாமன்னன் திருவடிகளைப் போற்றி வணங்குகின்றேன்..

ராஜராஜனின் புகழ் ஓங்குக.. 
ஃஃஃ  

35 கருத்துகள்:

  1. குட்மார்னிங்.  முன்னொருநாள் நானும் தஞ்சைவாசி என்பதால்  அதிகமாகவே மனம் பெருமையில் பூரிக்கிறது.  வாழ்க ராஜராஜன் புகழ்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      தங்களுக்கு நல்வரவு...
      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    படங்கள் அனைத்தும் தெளிவுடன் அழகாக உள்ளது. காலையில் மகேஸ்வரனின் தரிசனம் மனதிற்கு மகிழ்வாக உள்ளது. சரித்திரப் புகழ் ராஜ ராஜ சோழனுக்கு என்னுடைய சிரம் தாழ்ந்த வணக்கங்களும்..இன்றைய தினம் அவர் பெருமையை அறிய தந்தமைக்கு தங்களுக்கு நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...
      தங்களுடன் நானும் எனது வணக்கங்களைச் செலுத்துகின்றேன்..

      மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  3. முதல் படத்தில் உள்ளது திருவாலங்காட்டுச் செப்பேடுகளா?

    ராஜராஜ சோழனை நினைவுகூர்ந்தது சிறப்பு.

    பொதுவா தந்தை பெரும் புகழ் பெற்று விளங்கினால் தமையன் சிறப்பாக ஆட்சி புரிவதில்லை, பெயர் பெறுவதில்லை, ஒழுக்க நெறியில் ஒழுகுவதில்லை. (தந்தை, சகோதர்ர்களைக் கொன்று ஆட்சி செய்யும் முஸ்லீம் மன்னர்களைக் குறிப்பிடலை).

    இங்கு ராஜராஜன், அவனைவிட வீரம் (ஈரமல்ல) காண்பித்த ராஜேந்திரன், அவனுக்குப் பின் வந்த அரசன் என்று மூன்று தலைமுறைகள் தமிழகத்தில் தங்கள் கைவண்ணத்தைக் காலா காலத்துக்கும் விட்டுச் சென்றிருக்கின்றனர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெல்லை...


      அந்தப் படத்தில் காணப்படும் செப்பேடுகள் திருவாலங்காட்டு செப்பேடுகளா?..

      தெரியவில்லை...
      திரு. கரந்தை ஜெயக்குமார் அவர்கள் அறிந்திருக்கக் கூடும். மேலும் கரந்தைச் செப்பேடுகளைப் பற்றியும் குறிப்புகள் தருவார்...

      அறத்தின் வழி நின்று ஆட்சி நடாத்தியவர்கள் - நமது தமிழகத்தின் மன்னர்கள்...

      தஞ்சையும் கங்கை கொண்ட சோழபுரமும் தாராசுரமும் கலைப் பொக்கிஷங்கள்...

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி... நன்றி..

      நீக்கு
  4. தஞ்சையம்பதி வாழ்க, இராஜராஜன் புகழ் வாழ்க, நினைவு கூர்ந்த துரை செல்வராஜூ சார் வாழ்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் கௌதமன் ...

      தங்கள் வருகையும்கருத்துரையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. வணக்கம் ஜி
    மாமனிதரை நினைவு கூர்ந்து பதிவிட்டமைக்கு நன்றி.

    படங்கள் மிகவும் தெளிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி ...

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. பதில்கள்
    1. அன்பின் தனபாலன் ...

      நீண்ட நாட்களுக்குப் பின் தங்களது வருகை...
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. ஐப்பசி சதயம் அவர் பிறந்த நாள் இப்போதே கொண்டாடுகிறார்களா?
    என் மகன் ஐப்பசி சதயம் (ராஜ ராஜ சோழன் பிறந்த நாளில் பிறந்தான் என்று பேசிக் கொள்வோம் ) அவன் பிறந்த நாள் நவம்பர் 6 தான் வருகிறது
    இந்த பதிவை படித்தவுடன் காலண்டரை பார்த்தால் இன்று திருவாதிரை என்று இருக்கிறது.

    திருவிழா முன்பே ஆரம்பித்து விட்டதோ!

    ராஜராஜசோழன் புகழ் வாழ்க!
    படங்கள் எல்லாம் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      தங்களது கருத்துரைக்குப் பிறகுதான் விழித்துக் கொண்டேன்...
      பல்பு வாங்கிய கதையை பின்னொரு நாளில் சொல்கிறேன்..

      வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. நல்ல கால்ம் சோழர்களும்நாயக்கர்களும் பிரித்து அறியப்படுவதில்லை இல்லையென்றால் பாபர் மசூதி போல் சச்சரவுகள் எழலாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜி.எம்.பி. சார்... நீங்க என்ன எழுதியிருக்கீங்க? எனக்குப் புரியலை.

      நாயக்கர்கள், இஸ்லாமிய படையெடுப்பில் அழிந்த கோவில்களை புனருத்தாரணம் செய்தவர்கள். நாயக்கர் படையெடுப்பு சோழ அரசை அழிப்பதற்காக நடந்ததில்லை. அப்படியே நடந்திருந்தாலும், சேர சோழ பாண்டியர்கள்போல் அது உடன் பிறந்தவர்களுக்கிடையில் நடக்கும் சண்டை. இந்த மூவரும் கோவில்களையோ நம் கலாச்சாரங்களையோ அழித்தவர்கள் கிடையாது.

      அதில் எப்படி பாபர் மசூதி சர்ச்சை வரும்? தெரிந்துதான் எழுதறீங்களா?

      நீக்கு
    2. ஜி.எம்.பி ஐயா, சோழர்கள் முழுக்க முழுக்க வேறு. நாயக்கர்கள் பிற்காலப் பாண்டியர்களுக்கும் பின்னால் மதுரையில் சுல்தான் ஆட்சிக்கும் பின்னால் வந்தவர்கள். அவர்களுக்கும் நீங்கள் குறிப்பிட்டிருப்பவைக்கும் என்ன சம்பந்தம் என்பது விளங்கவே இல்லையே. சேர,சோழ, பாண்டியர்கள் யாரும் உடன்பிறந்தவர்கள் இல்லை நெல்லைத்தமிழரே. பின்னர் ஒரு முறை சோழபரம்பரையையும், பாண்டிய பரம்பரையையும் குறித்து எழுதுகிறேன். பின்னாட்களில் திருமண பந்தம் மூலமாக உறவாக ஆனார்கள்.

      நீக்கு
    3. கீசா மேடம்... நான் உடன் பிறந்தவர்கள் என்று சொன்னது, தமிழர் தமிழர் கலாச்சாரம், கோவில்கள் என்ற அர்த்தத்தில். இவங்க தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டபோது அவங்க அவங்க அரச மாளிகைகளைத் தரை மட்டமாக்கியிருக்காங்க. ஆனால் கோவில்களைக் கொளுத்தியதில்லை, சிலைகளை உடைத்து கோவில்களை நிர்மூலமாக்கியதில்லை. ஏனென்றால் அந்த மூவரின் வேர்களும் ஒன்று.

      ஆனால் மிலேச்சர்கள் தமிழகம் வந்தபோது வட இந்தியாவில் செய்ததுபோல ஹிந்து கோவில்களை நிர்மூலமாக்கினார்கள். அவங்க காலம் முடியும்போது நாயக்கர்கள் மீண்டும் கோவில்களை புனருத்தாரணம் செய்தார்கள். அந்த நிலையிலிருந்து பிரிட்டிஷ் ஆட்சிக்குச் சென்றபோது அவர்கள் கோவில்க்ளை மீண்டும் அழிக்கவில்லை (ஒரு சிலவற்றைத் தவிர. அதில் ஒன்று போர்ச்சுக்கீசியர்கள், மயிலை கற்பகாம்பாள் கோவிலை தற்போது இருக்கும் சாந்தோம் இடத்திலிருந்து இப்போது இருக்கும் டேங்க் பக்கத்தில் மாற்றவைத்தார்கள்).

      முஸ்லீம்கள் மதுரைக்கு வர முக்கியக் காரணம் அரியணைப் போர் நடத்திய சகோதரர்கள். வரலாறு கொஞ்சம் கொஞ்சம் படித்திருக்கிறேன்.

      நீக்கு
    4. வேல்நெடுங்கண்ணி என்னும் வேளாங்கண்ணியை விட்டுட்டீங்களே? :)))))))

      நீக்கு
    5. அன்பின் GMB ஐயா அவர்கள் ஏன் அப்படியொரு கருத்து சொன்னார்கள் என்று புரியவில்லை...

      தொடர்ந்து அன்பின் நெல்லை அவர்களும் கீதா அக்கா அவர்களும் தந்துள்ள வரலாற்றுச் செய்திகளை அப்படியே வழி மொழிகின்றேன்..

      பிரிட்டிஷ்காரர்களின் அடாவடியைப் போல்
      பிரஞ்சுக்காரர்கள் புதுச்சேரியில் - அங்கிருந்த வேதபுரீஸ்வரர் திருக்கோயிலை மதம் மாறியவர்களை வைத்தே தகர்த்ததாக சொல்வார்கள்...

      வரலாற்றின் சில பக்கங்கள அழிக்க முடிவதில்லை...

      நீக்கு
    6. பிருங்கி மலை, பறங்கிமலையான கதையும், இப்போதைய அச்சிறுபாக்கம் கோயிலில் நடக்கும் சச்சரவும் ஜிஎம்பி ஐயா அவர்கள் அறியவில்லை போல!

      நீக்கு
    7. மயிலை கபாலி கோயிலை விட்டுட்டோமே! :(((( எத்தனையோ விட்டுக்கொடுத்தாச்சு!

      நீக்கு
    8. அங்கெல்லாம் செல்வதை விட -
      இந்த தஞ்சை பெரிய கோயில் திருவிழா முடிந்து அஸ்திர தேவர் தீர்த்த வாரியின் போது அருகிலுள்ள சிவகங்கைக் குளத்தின் அருகில் இருக்கும் கிறிஸ்தவ ஆலயத்தினர் அங்கே மேளதாளங்கள் முழங்குவதை எதிர்க்கிறார்கள்..

      2017 ல் நேரில் பார்த்தேன்.. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தீர்த்தவாரி நடந்தது...குளத்துக்குச் செல்லும் வழியை அடைத்துப் பூட்டி இருக்கின்றார்கள்..

      ஏதோ பெருந்தன்மையால் பெரிய கோயில் கோட்டைக்குள் சிவகங்கைக் குளக்கரையில் கிறிஸ்தவர்களுக்கு வழிபட சர்ச் எழுப்பிக் கொடுத்தவர் சரபோஜி மன்னர்..

      இதுபற்றிய செய்திகள் நாளிதழ்களில் வந்துள்ளன...

      தங்கள வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
    9. Yes. We saw that news in papers. somebody posted in FB also.

      நீக்கு
  9. அழகான படங்கள். அருமையாக நினைவுகூர்ந்திருக்கிறீர்கள். ஐப்பசி சதயம் நெருங்குகிறதா? அகழாய்வு செய்து பார்த்து மேலதிகத்தகவல்கள் கிடைத்தால் நம் சரித்திரம் இன்னமும் நமக்கு நன்றாகப் புலப்படும். அதற்கான ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும். ராஜ ராஜன் சிலையை விட ஓவியத்தில் அழகும் கம்பீரமும் நிறைந்து காணப்படுகின்றன. நல்லதொரு பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களன்பின் வருகைக்கு மகிழ்ச்சியக்கா..

      அந்த ஓவியம் ராஜராஜ சோழனும் சித்தர் கருவூராரும் - என்று குறிப்பிடுவார்கள்..

      ஆனால் அப்படியெல்லாம் இல்லை...
      அந்த ஓவியத்தில் இருப்பவர்கள் சுந்தரரும் அவரைத் தடுத்தாட்கொண்ட இறைவனும்.. - என்று சாதிப்பவர்களும் இருக்கின்றனர்...

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
    2. நானும் அதான் கேள்விப் பட்டிருக்கேன்.

      நீக்கு
  10. மாமன்னன் புகழ் இன்னும் ஓங்கி ஒலிக்க வேண்டும் ....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாமன்னனின் புகழ் இன்னும் ஓங்கி ஒலிக்க வேண்டும்!...

      வேண்டும்... வேண்டும்...

      மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  11. படங்கள் அருமை அண்ணா. தகவலும் அறிய முடிந்தது.

    மற்றக் கருத்துகளையும் பார்த்துக் கொண்டேன் துரை அண்ணா.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா..
      அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  12. அழகான படங்களோடு நல்லதொரு பதிவு. 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  13. இனிய தீபாவளி வாழ்த்துகள் சகோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கும் அன்பின் நல்வாழ்த்துகள்...

      தங்கள் வருகைக்கும்
      வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..