செவ்வாய், செப்டம்பர் 17, 2019

கொடை விழா

கடந்த ஆகஸ்ட் 27 செவ்வாய்க்கிழமை மாலை திருச்செந்தூரில்
இருந்து புறப்பட்டு முன்னிரவுப் பொழுதில் உவரியை அடைந்தோம்...

வருடாந்திரக் கொடை விழாவினை முன்னிட்டு
திருக்கோயில் வளாகம் வண்ண விளக்குகளுடன் ஜகஜோதியாக இருந்தது..


நாகஸ்வர மேளங்களும் செண்டை வாத்தியங்களும் முழங்கிக் கொண்டிருந்தன...

கோயிலின் முன்புறத்தில் கணியான் கூத்து நடந்து கொண்டிருந்தது..


இரவு ஒன்பது மணியளவில் உவரியின் குடியிருப்புகளிலிருந்து
மஞ்சள் பெட்டி சீர்வரிசைகள் வாண வேடிக்கை களேபரத்துடன் வரத் தொடங்கின...

பத்து வயதுடைய சிறுமிகளின் மீது அருள் கொண்டு இறங்கி
அன்னை பேச்சியம்மன் ஆடிக் களித்தாள்...

நள்ளிரவில் மகா தீப ஆராதனையுடன் சாமி வரவழைத்து
பூங்கரகம் எடுத்தனர்...

ஸ்ரீ பிரம்ம சக்தி அம்மனுக்கு இரண்டு பூங்கரகங்கள்..
ஸ்ரீ பேச்சியம்மனுக்கு அக்னிக் கொப்பரை...

ஆக இரண்டு குருக்கள் பூங்கரகங்களையும்
மற்றொருவர் அக்னிக் கொப்பரையையும் எடுத்துக் கொள்ள
ஸ்ரீ பிரம்ம சக்தி அம்மனும் ஸ்ரீ பேச்சியம்மனும் ஊர் சுற்றி வந்தனர்..

ஸ்ரீ மாடசாமி ஆவேசம் வந்து இறங்கி பந்தம் எடுத்துக் கொண்டு
திருக்கோயிலைச் சுற்றி வருவதுடன் சரி...

திருக்கோயில் எல்லையைத் தாண்டுவதில்லை...

கொடை விழாவில் எடுக்கப்பட்ட ஒருசில படங்கள்
இன்றைய பதிவில்!...









ஸ்ரீ மாடஸ்வாமி - ஸ்ரீ பேச்சியம்மன் - ஸ்ரீ இசக்கியம்மன் 
ஸ்ரீ சிவனணைந்த பெருமாள் 
ஸ்ரீ பிரம்மசக்தி அம்மன் 



விடியல் மூன்று மணியளவில்
ஊர்வலம் சென்ற சாமிகள் கோயிலுக்குத் திரும்பின...

எங்கள் தலைக்கட்டுக்கு உரிய குருக்கள் தான்
ஸ்ரீ பிரம்ம சக்தி அம்மனுக்குப் பூங்கரகம் எடுத்தவர்...

கோயிலில் காத்துக் கிடந்த எங்களை அழைத்து
மாலையிட்டு திருநீறு பூசி நல்வாக்கு சொல்லியது சாமி..

அடுத்த சிறிது நேரத்தில் கல்யாண விருந்து போன்ற
படைப்புச்சோறு பிரிக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது..

புதன் கிழமை காலையில் குளித்து விட்டு மீண்டும் தரிசனம் செய்து
பழ வகைகளுடன் புது வஸ்திரம் சமர்ப்பித்தோம்...

திருநீறு சந்தனப் பிரசாதங்களுடன் பொங்கலும் வழங்கினார்கள்...


மகிழ்ச்சியுடனும் மன நிறைவுடனும் திருக்கோயிலில் இருந்து புறப்பட்டு
திசையன்விளை வழியாக நெல்லைக்குச் சென்று,

அங்கிருந்து Intercity Express ல் பயணித்து
இரவு எட்டு மணியளவில் திருச்சியை அடைந்து
9:30 மணிக்கு பாசஞ்சர் வழி வீட்டுக்கு நல்லபடியாக வந்து சேர்ந்தோம்...

மறுநாள் வியாழக்கிழமை அதிகாலை புறப்பட்டு
மீண்டும் திருச்சிக்குச் சென்று அங்கிருந்து Vaigai Super Fast மூலமாக சென்னைக்கு வந்து மும்பை வழியே வெள்ளிக்கிழமை (30/8) காலையில் குவைத்துக்கு நலமுடன் திரும்பினேன்...

மலை போல வந்த துன்பம்
பனி போல நீங்கியது..
அனைத்திற்கும் அவனே சாட்சி...
அவன் தாள் வணங்குதற்கு
அவனே அருள் செய்தான்..

வாழ்க நலம்..
ஃஃஃ 

26 கருத்துகள்:

  1. முற்றிலும் கேள்விப் படாத திருவிழா முறைகள். எல்லாம் நன்றாக நடந்திருக்கின்றன. அம்பிகையின் அருளே காரணம். உங்களுக்கும் குலதெய்வக் கோயில் வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்றிருப்பதில் மனம் திருப்தி அடைந்திருக்கும். இரு முறை திருச்சி வந்திருக்கிறீர்கள். ஒரு வார்த்தை சொல்லி இருந்தால் வீட்டுக்கு வந்து விட்டுச் சென்றிருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா அக்கா அமெரிக்காவில் இருப்பதில் பதிவுகளுக்கு சீக்கிரம் சீக்கிரம் வந்துடறாங்க போலிருக்கு!

      நீக்கு
    2. அன்பின் அக்கா தங்களுக்கு நல்வரவு...

      மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
    3. அன்பின் அக்கா...

      தாங்கள் முன்பே தங்கள் இல்லத்துக்கு அழைத்திருந்தீர்கள்...
      ஆனாலும் நெல்லையிலிருந்து திருச்சிக்கு வந்த நேரம் இரவு 8.30...

      மறுநாள் காலையில் தஞ்சையிலிருந்து திருச்சிக்கு வந்த நேரம் காலை 7.45.. அங்கிருந்து வைகையில் புறப்பட்ட நேரம் 9.15..

      இந்த நேர நெருக்கடியில் நான் என்ன செய்யட்டும்!..

      ஸ்ரீரங்கனையும் சமயபுரத்தாளையும் தரிசித்துப் பல வருடங்கள் ஆகின்றன...

      காலம் கூடி வரும்... வாழ்க நலம்...

      நீக்கு
  2. உவரி....

    பெயர் மட்டும் கேள்விப்பட்டிருக்கிறேன்.  குட்மார்னிங்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      வருக.. வருக...

      சற்று அசந்து தூங்கி விட்டேன்... வேலைக்கு நேரம் ஆயிற்று...
      மாலையில் விரிவான பதில் தருகின்றேன்..

      மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  3. "பூவால் கரகம் எடுத்து ஆடிவருவோம்"  
    எல் ஆர் ஈஸ்வரி குரல் மனதில் ஒலிக்கிறது.
    பேச்சியம்மன் இசக்கியம்மன் அலங்காரம் அருமையாய் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கே கரகங்கள் வேறு யாரும் எடுப்பதற்கில்லை..

      கோயில் குருக்களே எடுக்கின்றார்கள்....

      பேச்சியம்மன் இசக்கியம்மன் தமது அருள் விளையாடல்களை என்னென்று சொல்வது?...அவர்களது ரூப லாவண்யங்களே வேறு...

      நீக்கு
  4. சிவனணைந்த பெருமாள் - அழகு + கம்பீரம்.

    படைப்புச்சோறு என்றால் என்ன வகை சாதம்?  சாம்பார் சாதம் போலவா?  கட்டுசாதம் போலவா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்...

      இங்கே படைப்புச் சோறு என்பது சாம்பார், கூட்டு, பொரியல், வறுவல், வடை, அப்பளம், பாயசம் எல்லாவற்றையும் முழு இலைகளை விரித்து அவற்றில் அப்படியே கொட்டி சமர்ப்பித்து விடுவது தான்..

      படத்தினைப் பெரிதாக்கிப் பார்த்தால் தெரியும்...

      தங்கள் வருகையும் கருத்துரைகளும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. மலைபோல் வந்த துன்பம் பனிபோல் நீங்கியதில் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்...

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. கொடை விழாவினைப் பற்றி தற்போதுதான் அறிகின்றேன். படங்களைப்பார்த்ததும், படித்ததும் மன நிறைவாக இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா...

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. திருப்தியான பயணம்... மகிழ்ச்சி ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்...

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. கடவுள் தரிசனங்கள் கிடைக்கப்பெற்றதும், துன்பம் பனிபோல் மறைந்ததும் கண்டு மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெல்லை...

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. கொடைவிழா படங்கள் அனைத்தும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்...

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  10. திருநெல்வேலியில் சொல்வார்கள் இந்த ஊர் அம்மனுக்கு கொடை, அந்த ஊர் சாமிக்கு கொடை என்று. கேள்வி பட்டு இருக்கிறேன், ஆனால் பார்த்தது இல்லை.
    இன்று நேரில் தரிசனம் பெற்ற நிறைவு கிடைத்தது.

    குலதெயவத்திற்கு செய்ய வேண்டியதை செய்தால் வீடும், நாடும் செழிக்கும்.
    உங்கள் குலதெய்வம் உங்கள் குடும்பத்தினர் எல்லோரையும் நல்லபடியாக காக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      கடந்த 14 வருடங்களாக வருடந்தோறும் திருச்செந்தூரும் குலதெய்வ சந்நிதியும் தரிசிக்கத் தவறுவதேயில்லை..

      அன்பின் கருத்துரைக்கு நன்றி..

      வாழ்க நலம்..

      நீக்கு
  11. குலதெய்வ வழிபாடு தங்களது குலம் காக்கும் ஜி வாழ்க நலம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  12. அருமையான கொடை விழா படங்கள் ..மிக சிறப்பு ..


    எங்கள் முன்னோர்களின் வாழ்விடம் களக்குடி அருகே என்று சொல்வார்கள் ,அங்கு இது போல் கொடை விழா நடக்குமாம் ...அது போல இருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      களக்குடி என்றால் தஞ்சாவூருக்கு அருகில் உள்ளதே அந்த ஊரா?....

      அன்பின் கருத்துரைக்கு நன்றி..
      வாழ்க நலம்..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..