இன்றைய பதிவில் இரண்டு காணொளிகள்...
இரண்டும் வேறு வேறு நிலைகள்..
ஆயினும் இரண்டிலும் நோக்கம் ஒன்றே!..
WhatsApp ல் வந்தவை...
டால்பின் நாயைக் காப்பாற்றுவது
ஏற்கனவே வந்திருக்கிறது என்று நினைக்கிறேன்..
அல்லது இது வேறா!.. - தெரியவில்லை...
இங்கே ஈத் (பக்ரீத்) கொண்டாட்டங்களை முன்னிட்டு
வெள்ளிக்கிழமையில் இருந்து ஐந்து நாட்களுக்கு அரசு விடுமுறை...
பல்லாயிரக்கணக்கான இணைப்புகள்..
இணையம் தடுமாறிக் கொண்டிருக்கிறது..
நவீன தொழிநுட்பத்தைக் காட்டி தொலைத் தொடர்புக்காக
பணத்தைக் கவர்வதில் ஆர்வம் காட்டுகின்ற நிறுவனங்கள்
சேவையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதில்லை...
இரண்டு நாட்களாக நள்ளிரவில் விழித்திருந்து
பதிவுகளை வழங்குகின்றேன்...
வாயில்லா ஜீவன்களாகிய டால்பினும் நாயும்
ஒன்றுக்கொன்று வெளிப்படுத்திக் கொள்ளும்
அன்பிற்கு ஈடாக எதைச் சொல்வது?..
இரண்டும் வேறு வேறு நிலைகள்..
ஆயினும் இரண்டிலும் நோக்கம் ஒன்றே!..
WhatsApp ல் வந்தவை...
டால்பின் நாயைக் காப்பாற்றுவது
ஏற்கனவே வந்திருக்கிறது என்று நினைக்கிறேன்..
அல்லது இது வேறா!.. - தெரியவில்லை...
இங்கே ஈத் (பக்ரீத்) கொண்டாட்டங்களை முன்னிட்டு
வெள்ளிக்கிழமையில் இருந்து ஐந்து நாட்களுக்கு அரசு விடுமுறை...
பல்லாயிரக்கணக்கான இணைப்புகள்..
இணையம் தடுமாறிக் கொண்டிருக்கிறது..
நவீன தொழிநுட்பத்தைக் காட்டி தொலைத் தொடர்புக்காக
பணத்தைக் கவர்வதில் ஆர்வம் காட்டுகின்ற நிறுவனங்கள்
சேவையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதில்லை...
இரண்டு நாட்களாக நள்ளிரவில் விழித்திருந்து
பதிவுகளை வழங்குகின்றேன்...
வாயில்லா ஜீவன்களாகிய டால்பினும் நாயும்
ஒன்றுக்கொன்று வெளிப்படுத்திக் கொள்ளும்
அன்பிற்கு ஈடாக எதைச் சொல்வது?..
ஏதொன்றையும் எதிர்நோக்காத இந்த அன்பு
இவ்வையகத்தை இனிதாய் வாழவைக்கட்டும்...
வாழ்க நலம்
ஃஃஃ
காணொளியை மத்தியானமாய்த் தான் பார்க்கணும். இப்போ முடியாது. விடுமுறையைச் சிறப்பாகவும் அமைதியாகவும் கழிக்கப் பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குஅன்பின் அக்கா அவர்களுக்கு நல்வரவு...
நீக்குஅருமை. இரண்டு காணொளிகளும் கண்களில் நீரை வரவழைத்தன. அதிலும் டால்ஃபினின் சிரிப்பு அட்டகாசம்! கடைசியில் போகும் முன்னர் செல்லத்திடம் வந்து விடைபெற்றுச் செல்வதும் செல்லம் வாலை ஆட்டிக் கொண்டு நக்கி விடை கொடுப்பதும்! கண் கொள்ளாக் காட்சி!
நீக்குமுதல் காணொளியில் குழந்தை காப்பாற்றப்பட்டது மனதை மகிழ்வித்தது.
காலை வணக்கம்.
பதிலளிநீக்குஎனக்கு யு பி எஸ் பிரச்னை. அடிக்கடி அணைந்து கடுப்பேற்றுகிறது கணினி.
அன்பின் ஸ்ரீராம்...
நீக்குதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி...
யுபிஎஸ் - சர்வீசுக்குக் கொடுக்கலாகுமோ?...
டால்பின் நாயைக்காப்பாற்றுவது பழசுதான். இன்னொன்று என்ன என்று பார்க்கவேண்டும்.
பதிலளிநீக்குடால்பின் நாயைக் காப்பாற்றுவது பழசு தானே..
நீக்குநானும் அதைத்தான் நினைத்தேன்...
ஆனால் எங்கே சரி பார்த்து பதிவில் சேர்ப்பது?....
நூற்றுக் கணக்கான வீடியோக்கள் கோப்புகளில்...
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
முதல் காணொளியும் முன்னரே பார்த்து நெகிழ்ந்திருக்கிறேன்.
பதிலளிநீக்குஆகா...
நீக்குஅதுவும் பழசா?...
ஏன் இப்படியாகிப் போனது?..
அதனால் என்ன, யாரும் பார்க்காததையா தரமுடியும்? நாம் ரசித்ததை மற்றவர்களுக்கும் ரசிக்கத் தருகிறோம். பார்க்காதவர்கள் புதுசாய் ரசிப்பார்கள். மற்றவர்கள் மறுபடி ரசிப்பார்கள். அவ்வளவுதானே? உடன்பிறந்த குழந்தையை காப்பாற்றிய சிறுவன் முகம்....!
நீக்குநான் இரண்டுமே பார்த்தது இல்லை! ஆகவே புதுசு தான் என் வரை!
நீக்குஅண்ணா இரு காணொளிகளுமே பார்த்திருக்கிறேன். பழசுதான் என்றாலும் மிகவும் ரசிக்கலாம் அதுவும் டால்ஃபின் செல்லம் பைரவ செல்லத்தைக் காப்பாற்றி கடைசிய்ல் உம்மா கொடுத்து விடை பெறுவது வரை கண்ணில் நீர் துளிர்த்து....நெகிழ்ந்த தருணங்கள் இரண்டுமே.
நீக்குமுதல் காணொளி மலையாளத்தில் படமாகவே வந்தது. ஆங்கிலப்படத்தின் தழுவல்தான். அப்புறம் அது தமிழிலும் எடுக்கப்பட்டது. மாலூட்டி என்ற படம். ஜெயராம், ஊர்வசி நடித்த படம். தமிழிலும் வந்தது. ஆனால் தமிழில் வந்ததன் பெயர் நினைவில்லை..
கீதா
அன்பின் கீதா...
நீக்குஇயற்கையாகவே டால்பின்கள்
பெருந்தன்மை, இரக்கம் , பிற உயிர்களுக்கு உதவுதல் போன்ற நற்குணங்களை உடையவை என்று படித்திருக்கிறேன்...
அது மீண்டும் ஒருமுறை
பதிவாகி இருக்கிறது..
வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...
குழந்தையை வெளியே தூக்கி வந்த இளம்பெண்ணை வாழ்த்துவோம்.
பதிலளிநீக்குஇரண்டாவது காணொளி பார்த்து இருக்கிறேன்.
عيدمبارك
அன்பின் ஜி..
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
நல்வாழ்த்துகள்...
இரண்டு காணொளியும் அன்பை சொல்லுது.
பதிலளிநீக்குபதற்றம், இறைவழிபாடு, தவிப்பு கிடைத்த பின் மகிழ்ச்சி ஆகிய கலவை முதல் காணொளி . அடுத்து விலங்குகளுக்கும் அன்பு, நேசம் எல்லாம் இருக்கிறது , தன் நன்றியை கூற நாய் தவிக்கும் தவிப்பு அதை ஏற்று டால்பின் மகிழ்ந்து தான் காப்பாற்றிய நாய்க்கு மகிழ்ச்சியை தெரிவித்து விடைபெறுவது கண்ணில் நீரை வரவழைத்து விட்டது.
இரண்டு காணொளிகளையும் பார்த்திருக்கிறேன்... அன்பே அனைத்தும்...
பதிலளிநீக்குஅன்பின் தனபாலன்..
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...
பதிலளிநீக்குடால்பினின் முகத்தில் தெரியும்
மகிழ்ச்சி .. அடடா...
தண்ணீரில் விழுந்த நாயை மோப்பம் பிடிக்கும் சுறாவிடம் ஏதோ சொல்லிவிட்டு வருகிறது...
இயற்கையின் விநோதங்களை மனிதனால் புரிந்து கொள்ள முடிவதில்லை...
வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...
இரண்டு காணொளிகளும் பார்த்தவை என்றாலும் மீண்டும் பார்க்கத் தூண்டும் காணொளிகள். எத்தனை அன்பு... அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்....
பதிலளிநீக்குவிடுமுறை இனிமையாகக் கழிந்திட வாழ்த்துகள்.
வாங்க வெங்கட்....
நீக்குவிலங்குகள் ஒன்றுக்கொன்று காட்டும் அன்பு பிரமிக்க வைக்கிறது..
வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...
பார்த்தவைதான். இருந்தாலும் உங்கள் தளத்தின்வழியாக மீண்டும்...
பதிலளிநீக்குஅன்பின் ஐயா..
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...