செவ்வாய், ஜூலை 30, 2019

கருணை முகங்கள் ஓராறு

கடந்த வெள்ளி மலர் பதிவில் முருகப் பெருமானைப் பற்றியும் கார்த்திகைப் பெண்களைப் பற்றியும் குறிப்பிட்டிருந்த போது -

அன்பின் ஸ்ரீராம் அவர்களும் ஸ்ரீமதி கோமதி அரசு அவர்களும் இந்தப் பாடலைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தனர்...

அப்போதே இந்தப் பாடலைப் பதிவில் வழங்குதற்கு ஆவல் கொண்டேன்..

அதை அடுத்த நிகழ்வாக இந்தப் பாடலை
ஸ்ரீமதி கோமதி அரசு அவர்கள் தனது தளத்தில் பதிவு செய்து இருந்தார்கள்...


கார்த்திகேயன் என்பது முருகப்பெருமானுடைய திருப்பெயர்களுள் ஒன்று..

கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டவன் என்பது பொருளாகும்..

வான் மகிழ வந்த அறுமுகச் செவ்வேளைச்
சரவணத்தில் வளர்த்தெடுத்த கார்த்திகைப் பெண்களின் திருப்பெயர்கள் -

நிதர்த்தனி, அபரகேந்தி, மேகேந்தி,
வர்த்தயேந்தி, அம்பா, துலா.. - என்பதாகும்..

கங்கைக் கரையின் சரவணத்தில் முருகப்பெருமான் தோன்றியதால்
பெருமானின் - காங்கேயன் என்ற திருப்பெயரும் வழங்கப்படுகின்றது.....

கந்தன் கருணை என்ற திரைப்படத்தின் பாடல் இது..

கவியரசரின் பாடலுக்கு இசை - திரை இசைத்திலகம் K.V. மகாதேவன்..
பாடலைப் பாடியிருப்பவர்கள் - 
சூலமங்கலம் ராஜலக்ஷ்மி, A.P. கோமளா மற்றும் ஜமுனாராணி..

இனியதொரு பாடலை
மீண்டும் வழங்கும் முகமாக இன்றைய பதிவில் 
ஆறுமுகமான பொருள் வான் மகிழ வருகின்றான்...


ஆறுமுகமான பொருள் வான் மகிழ வந்தான் 
அழகன் இவன் முருகன் என இனிய பெயர் கொண்டான்..

காலமகள் பெற்ற மகன் கோல முகம் வாழ்க..
கந்தன் என குமரன் என வந்த முகம் வாழ்க..


ஆறுமுகமான பொருள் வான் மகிழ வந்தான் 
அழகன் இவன் முருகன் என இனிய பெயர் கொண்டான்..

தாமரையில் பூத்து வந்த தங்க முகம் ஒன்று..
தண்ணிலவின் சாறெடுத்து வார்த்த முகம் ஒன்று..

பால் மணமும் பூ மனமும் பதிந்த முகம் ஒன்று..
பாவலர்க்குப் பாடம் தரும் பளிங்கு முகம் ஒன்று..

வேல் வடிவில் கண் இரண்டு விளங்கும் முகம் ஒன்று..
வெள்ளி ரதம் போல வரும் பிள்ளை முகம் ஒன்று..

ஆறுமுகமான பொருள் வான் மகிழ வந்தான் 
அழகன் இவன் முருகன் என இனிய பெயர் கொண்டான்!....


கந்தா போற்றி.. கடம்பா போற்றி..
கார்த்திகை மைந்தா போற்றி.... போற்றி..

ஃஃஃ

30 கருத்துகள்:

  1. குட்மார்னிங்.

    சூலமங்கலம் பாடல் வரிகளாய் சொல்லி மனதில் பாடலை ஓட விடுகிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  2. கார்திகைப் பெண்களின் திருப்பெயர்களை இன்றே அறிகிறேன். லாங்கேயன் என்கிற பெயரும் கந்தனுடைய நாமங்களிலொன்றா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மன்னிக்கவும் லாங்கேயன் என்று வந்து விட்டது. காங்கேயன் என்று படிக்கவும்.

      நீக்கு
    2. அன்பின் ஸ்ரீராம்...
      காங்கேயன் என்பதுவும் முருகனின் திருப்பெயரே..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. என்ன ஒரு இனிமையான பாடல்... மிக இனிமையான பாடல். கந்தன் கருணை படத்தில் அனைத்துப்பாடல்களுமே மிக இனிமையாய் இருக்கும். எனக்கு "மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு" பாடல் மிகவும் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      எனக்கும் அப்படித்தான்.. இந்தப் பாடலை எங்கு கேட்டாலும் நின்று கேட்டுவிட்டுத் தான் செல்வேன்...

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  4. இங்கு பாடல்மறுபடியும் கேட்டு ரசித்து விட்டேன். இப்போது யூ டியூப் தளம் சென்று 'கருணை முகங்கள் ஓராறு... காக்கும் கரங்களோ ஈராறு...' பாடல் கேட்கப்போகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருணை முகங்கள் ஓராறு...
      காக்கும் கரங்கள் ஈராறு...

      பூவை செங்குட்டுவன் அவர்கள் எழுதியது என்று நினைக்கின்றேன்...

      நீக்கு
    2. இத்தனை நாட்களாகக் கார்த்திகைப் பெண்களின் பெயர்கள்
      அறிந்திருக்கவில்லை.
      அன்பு துரை அறியக் கொடுத்ததற்கு மிக நன்றி.
      செவ்வேள் முருகனுக்கு அரோகரா.
      பாடலின் அமைதியான இசை மனதைத் தாலாட்டும்.

      சூலமங்கலம் சகோதரிகளும் ,ஜானகி அவர்களும் பக்தியில்
      குழைந்து பாடியிருக்கின்றனர். நன்றி மா.
      மகாபாரதத்தில் பீஷ்மருக்கும் கங்கையின் மைந்தர் என்பதால் காங்கேயர்
      என்ற பெயர் உண்டு.

      நீக்கு
    3. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சியம்மா...

      சூலமங்கலம் ராஜலக்ஷ்மி, ஜமுனாராணி A.P. கோமளா ஆகியோர் பாடிய பாடல் இது.

      தவறுதலாக ஜானகி என்று பதிந்து விட்டேன்...

      பீஷ்மருக்கும் காங்கேயன் என்ற பெயருண்டு..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. எத்தனைமுறை கேட்டாலும் திகட்டாத பாடல் ஜி

    பதிலளிநீக்கு
  6. பாடல் பரவாயில்லாமல்தான் இருக்கு. செட் நன்றாகத் தெரிகிறது.

    நிறைய லட்டு லட்டான முருகன் பாடல்கள் இருக்கே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெல்லை..

      ஏதோ அந்தக்காலத்தில் செய்தது இன்றைக்கும் பேசு பொருளாக இருக்கிறதே...

      இன்றைக்கெல்லாம் காலையில் வெளியாகின்ற பெரும்பாலான பாடல்கள் மதியத்தில் மண்ணோடு மண்ணாக மக்கிப் போய் விடுகின்றன...

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. மிகவும் ரசிக்கும் பாடல்களில் ஒன்று...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  8. பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. மனதைக் கவர்ந்த பாடல்களில் ஒன்று. கந்தன் கருணையின் எல்லாப்பாடல்களுமே நன்றாக இருக்கும். சூலமங்கலம் சகோதரிகள் பாடிய முருகன் பாடல்கள் எல்லாமே கேட்கக் கேட்கப் பரவசம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  10. கோமதி அரசுவும் பகிர்ந்துள்ளாரா? இனி தான் போய்ப் பார்க்கணும்.

    பதிலளிநீக்கு
  11. மீண்டும் பாடலை கேட்டு ரசித்தேன். எத்தனை முறை கேட்டாலும் திகட்டா பாடல்.

    கார்த்திகை பெண்கள் தெய்வக்குழ்ந்தைகளை தாமரை மஞ்சத்தில் சயனிக்க செய்து தாலாட்டுப்பாடி கண் துயிலசெய்தனர்.

    அப்போது அவர் செய்த திருவிளையாடல்களை கந்த புராணத்தில் படிக்க இன்பம்.

    ஒரு திருமுகம் கொண்ட குழ்ந்தை துயிலும், ஒரு கந்த குழ்ந்தை துயில் நீங்கி மழலை மொழி பேசும், ஒரு பாலசுப்பிரமணிய குழந்தை பாலை தன் செம்பவள வாய்தனில் வைத்து உண்ணும், ஒரு வேலாயுதக் குழந்தை பூத்து குலுங்கும் புன்முறுவலோடு திகழும், ஒரு சரவணக் குழந்தை எல்லையில்லா மகிழ்வோடு விளையாடும்.ஒரு அக்கனி கர்ப்பக்குழந்தை அழும்.

    இவ்வாறாக விளையாடி கார்த்திகை பெண்களை மகிழ்வித்தனர், அவர்களும் போற்றிப் பேணி வளர்த்தனர்.

    கீதா சாம்பசிவம் உங்கள் பதிவில் தெரிந்து கொண்டு வந்து கருத்து சொல்லி இருக்கிறார்கள். மகிழ்ச்சி என் தளத்தை குறிப்பிட்டமைக்கு. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் மேலதிகச் செய்திகளுடன் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  12. தலைப்பில் உள்ள பாடலை கேட்க ஆசை வந்து விட்டது கேட்க வேண்டும்.
    மனம் படைத்தேன் பாடல் இன்று காலை தேனருவியில்(வசந்த் தொலைக்காட்சியில்) கேட்டு மகிழ்ந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் கருத்துரை கண்டு மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  13. கந்தனின் வடிவமும் தங்கள் எழுத்தைப் போன்றே இனிமையானது. மனதைக் கவ்ர்ந்து பரவசப்ப்டுததக் கூடியது.
    -இராய செல்லப்பா (தற்போது நியூ ஜெர்சியில் இருந்து)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  14. கார்த்திகைப் பெண்களின் பெயர்கள் - முதல் முறை படித்து அறிந்தேன். நன்றி.

    பாடல் இனிமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..