சனி, ஜூன் 22, 2019

சிக்கல் 2

ஸ்ரீ வேல்நெடுங்கண்ணியம்மை உடனாகிய
ஸ்ரீ வெண்ணெய் நாதர் திருக்கோயில்...



ஞானசம்பந்த மூர்த்தியின் திருப்பதிகம் பெற்ற பெருமான்..

எனினும்
பேரையும் புகழையும் தனது திருக்குமாரனுக்கே கொடுத்து விட்டு
சிவனே!.. என்றிருக்கின்றது சிவம்...

இந்த சிவாலயம் மாடக்கோயில்...

பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும்
பெருங்கோயில் எழுபதினோடு எட்டு மற்றும்..

- என்று, க்ஷேத்ரக் கோவையில் அப்பர் பெருமான் குறிப்பிட்டருளும்
மாடக்கோயில்களுள் இக்கோயிலும் ஒன்று...

இவ்வகையான மாடக்கோயில்களை எடுப்பித்தவர் கோச்செங்கட்சோழர் என்பது தெளிவு..

யானை ஏற முடியாதபடிக்கு படிகளுடன் கூடிய திருக்கோயில்..

இவரே முற்பிறப்பில்
திருஆனைக்காவில் ஜம்புகேஸ்வரருக்கு
வலைப்பந்தல் இட்டு வழிபாடு இயற்றிய சிலந்தி...



திருக்கோயிலுக்கு முன்புறம் நிழற்கொட்டகை இருந்தபடியால்
ராஜகோபுரத்தின் அழகைக் காட்ட முடியவில்லை...

நீண்ட மண்டபத்தைக் கடந்து செல்ல திருக்கொடிமரம்..

கொடிமரத்தின் வடபுறம் அம்பிகையின் சந்நிதி..

தென்புறமாக மேலேறிச் செல்லும் படிக்கட்டுகள்..

எத்தனை என்று எண்ணவில்லை.. பதினைந்து இருபது இருக்கலாம்...

படிகளைக் கடந்து மேலே சென்றால் நேரெதிரே
அருள் தரும் வெண்ணெய் நாதர்.. ஸ்ரீ நவநீதேஸ்வரர்..

ஐயனின் அழகைக் காண ஆயிரங்கண்ணும் போதாது..

ஜோதி மயமாக சிவலிங்கம்...



ஸ்வாமி சந்நிதிக்கு வடபுறமாக தெற்கு நோக்கிய நிலையில்
ஸ்ரீ சிங்கார வேலன் தேவியரோடு திருக்காட்சி நல்குகின்றனன்..

என்ன தவம் செய்தனம்!... - என்று அரற்றுகின்றது மனம்...  

ஸ்ரீ சனைச்சரன்  

பிரகாரத்திலுள்ள முருகன் சந்நிதி 
திருக்கோயிலில் வடக்குப் பிரகாரத்தில்
ஸ்ரீ கோலவாமனப் பெருமாளின் சந்நிதி...

ஸ்ரீ கோலவாமனப் பெருமானின் சந்நிதிக்கு வடமேற்குப் பக்கமாக
ஸ்ரீ ஆஞ்சநேயப்பெருமானின் சந்நிதி..

வரசித்தி ஹனுமான் என்றும் புகழப்படுகின்றார்..

இங்கே அனுமனுக்கு தயிர் சாத நிவேதனம் என நேர்ந்து கொள்கின்றனர்...

அனுமன் சந்நிதியின் வாசலில் பெரிது பெரிதாக விளம்பரங்கள்..
எனவே திருவாசலைப் படமெடுக்கவில்லை...

தவிரவும் பெண்களும் ஆண்களுமாக திருக்கூட்டம் நிறைய.. அதனால்
மண்டபங்களையும் சுற்றுப் பகுதிகளையும் படமெடுக்க மனமில்லை.

ஸ்ரீ ஆஞ்சநேயர் சந்நிதி 


திருச்சுற்றில் வலம் வந்து
அன்னையின் சந்நிதியை அடைந்தால் -



துன்பங்களைத் தூள் ஆக்கு..
வெற்றிதனைப் பேர் ஆக்கு!..

- என்று, அருள்கின்றாள் அம்பிகை...

வேல்நெடுங்கண்ணி...

வேளாளன் காணி எனப்பட்ட கடற்கரைக் கிராமத்தில்
கையில் குழந்தையுடன் தோன்றியவள் இவளே!...

புயல் மழைக்கு இடையில் கரை காணாமல் கடலில் தவித்த 
போர்ச்சுக்கீசிய மாலுமியர்க்கு கலங்கரை விளக்காக
ஒளிகாட்டி வழிகாட்டிக் கரை சேர்த்த கற்பகம் இவளே!..

ஆங்கு அற்புதங்கள் அனைத்தையும் நிகழ்த்தியவள் இவளே!..

இன்றைக்கு வேளாங்கண்ணி எனப்படும் தலத்தில்
வெள்ளியங்கிரிநாதர் என்றொரு சிவாலயம் உண்டு...

இந்துக்கள் இன்னும் அறியாதிருக்கும் திருக்கோயில் அது...

சிக்கல் தலத்தை அடுத்து கருங்கண்ணி, அகலங்கண்ணி என்றெல்லாம் தலங்கள் உள்ளன...

பிற சமயத்தினரால் வேளாங்கண்ணிக்குச் சொல்லப்பட்ட
கதைகளைப் போல அவ்வூர்களுக்குச் சொல்லுதற்கு இயவில்லை...

வேல் நெடுங்கண்ணி அம்பிகை தான்
வேளாங்கண்ணி மாதா என்று மாற்றப்பட்டு நிற்கின்றாள்...

எவரெவர் என்னை எப்படி எப்படி நினைத்து அர்ச்சிக்கின்றார்களோ
அவரவர்க்கு நான் அப்படியே அருள் செய்து நிற்கின்றேன்!..

- என்பது பரமனின் திருவாக்கு...


வேல்நெடுங்கண்ணியம்மை சீராட்ட - தந்தை
வெண்ணெய் நாதர் வந்து பாராட்ட
போர் வந்ததென்ன இவன் வேல் கேட்டான் - வீரப்
பொட்டு வைத்த தாயிடம் விடைகேட்டான்..

சீர்காழியாரின் ஆஸ்தானக் கவிஞர்களான
திரு நெல்லை அருள்மணி அல்லது
உளுந்தூர் பேட்டை ஷண்முகம் அவர்கள்
இயற்றிய பாடலின் வரிகள் அவை...


சோழ வளநாட்டில் முருகனின் புகழ்க்கொடி பறக்கும்
திருக்கோயில்களுள் சிக்கலும் ஒன்று...

ஹிந்து சமயத்தின் கீழ்ப்பிறந்த தமிழ்க்குடி மக்கள் ஒவ்வொருவரும்
தரிசிக்க வேண்டிய திருத்தலம் சிக்கல் என்பதில் ஐயமேதும் இல்லை...

கிடா வாகனத்தில் ஐயன் (கந்த சஷ்டி) 

மொய்தாரணி குழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால்
வைதாரையும் அங்கு வாழவைப்போன் வெய்ய வாரணம்போல்
கைதான் இருபதுடையான் தலைபத்துங் கத்தரிக்க
எய்தான் மருகன் உமையாள் பயந்த இலஞ்சியமே..
-: கந்தரலங்காரம் :-

முருகா சரணம்.. முதல்வா சரணம்..
முத்துக் குமரா சரணம்.. சரணம்.. 
ஃஃஃ

23 கருத்துகள்:

  1. குட்மார்னிங்.

    அதென்ன,

    யானை ஏறமுடியாதபடிக்கு படிக்கட்டுகள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம் ..
      தங்களுக்கு நல்வரவு...

      ஆதௌ கீர்த்தனாரம்பத்திலே....
      ஜம்பு வனம்.. ஜம்பு வனம் என்று சொல்லப்பட்ட க்ஷேத்திரமாகிய திரு ஆனைக்காவிலே...

      யானை ஒன்று பூர்வ புண்ணியத்தால் வெண் நாவல் மரத்தின் கீழிருந்த சிவலிங்கத்தை நாளும் வழிபட்டுக் கொண்டிருந்தது...

      அந்த மரத்திலிருந்த சிலந்தியும் இவ்வாறாக வழிபாடு செய்ய ஆரம்பித்தது.. மரத்திலிருந்து விழும் சருகுகள் ஈசன் மீது விழாமலிருக்க வலை ஒன்றைப் பின்னியது..

      இது அந்த யானையாருக்குப் பிடிக்கவில்லை..

      ஏதடா.. இது ஒட்டடை?.. என்று பிய்த்துப் போட்டு விட்டது..

      சிலந்திக்குக் கடுப்பு...

      இவை இரண்டும் ஒன்றையொன்று புரிந்து கொள்ளவில்லை..

      ஆளுமை... மொழிப்பிரச்னை வேறு!..

      வலையைப் பின்னுவதும் அதைப் பிய்ப்பதுவும்!..

      ஈசனுக்கு நன்றாகப் பொழுது போனது..

      ஆனாலும் கொலை வெறி கொண்ட சிலந்தி யானையின் துதிக்கையின் உள்புகுந்து கடித்துப் போட்டது..

      யானையும் சிலந்தியும் ஏக காலத்தில் சிவகதி அடைந்தன..

      சிலந்தியின் கோபத்திற்குக் கிடைத்த பரிசு - மறுபிறவி...

      அதுவும் சிவ புண்ணியத்தால்
      அரச குடும்பத்தில்...

      உறையூர் கோச்செங்கட் சோழன்..

      ஆனாலும் முற்பிறவி நினைவு மூண்டு வந்ததால் யானை ஏதமுடியாதபடிக்கு அகலம் குறைவான படிக்கட்டுகளுடன் கோயில்களை எழுப்பினார் சோழர்..

      இவர் நாயன்மார்ளுள் ஒருவரானார்..

      இன்னும் இருக்கிறது..
      வேறொரு சமயம் பார்க்கலாம்...

      நீக்கு
  2. வேளாளன் கன்னி... வேளாங்ககண்ணி தகவல்கள் புதிது எனக்கு. பரமனின் திருவாக்கை ஏற்றுக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. நெல்லை அருள்மணி அல்லது உளுந்தூர்ப்பேட்டை சமூகம் அவர்கள் இயற்றிய பாடலாய் நீங்கள் சொல்லி இருப்பது என்ன பாடல்?

    உள்ளமெனும் கோவிலிலே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சூரனைக் கொல்ல ஒரு வேல் தந்தாள் - அன்னை
      சொன்ன சொல் காத்திடவே பிள்ளை வந்தான்!....

      கேட்டுப் பாருங்கள்..
      கம்பீரமாக இருக்கும்....

      நீக்கு
  4. கந்த தரிசனம், அவர் தந்தை தரிசனம் இரண்டுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி... நன்றி...

      நீக்கு
  5. வேளாங்கண்ணி குறித்த தகவல்கள் அறிந்தவையே!ஏற்கெனவே குழுமங்களில் இதைக் குறித்த விவாதங்கள் நடைபெற்றன. இப்படி அரிய பல கோயில்கள் மறைந்து விட்டன! வேளாளன் காணி என்பது தான் வேளாங்கண்ணி என்னும் பெயரில் விளங்குகிறது என்பதை எத்தனை முறை எடுத்துச் சொன்னாலும் இன்று கேட்பவர் யாரும் இல்லை. :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் அக்கா...

      பிறருக்கு சாமரம் வீசுவதே பிழைப்பாகப் போனது..
      தம் பெருமையைத் தாம் உணர்ந்தார்களில்லை...

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  6. //வேல் நெடுங்கண்ணி அம்பிகை தான்
    வேளாங்கண்ணி மாதா என்று மாற்றப்பட்டு நிற்கின்றாள்//

    அரியதொரு தகவல் ஜி படங்கள் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி...

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  7. சிக்கல் சென்றுள்ளேன். கருங்கண்ணி, அகலங்கண்ணி இப்போதுதான் அறிகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா...

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  8. பதிவும், படங்களும் அருமை.
    சிக்கல் போய் இருக்கிறேன், ஆனால் கருங்கண்ணி, அகலங்கண்ணி கோவில்கள் போனது இல்லை.
    வேளாங்கண்ணியில் உள்ள சிவன் கோவில் போனது இல்லை.

    ஊர் மாரி பேர் மாரி உருமாரி கருமாரி ஒன்றே ஒம்சக்தியான உரைக்கும் .
    என்ற பாடல் நினைவுக்கு வருது.
    எந்த பேர் சொல்லி அழைத்தால் என்ன? இறைவன் வணங்குபவருக்கு அவர் அருள் என்றும் உண்டு.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..

      ஆயினும் நமக்கென்று உள்ளதை நாம் பாதுகாக்கத் தவறிப் போனோமே!...
      அன் பின் வாழ்த்துரைக்கும் நன்றி...

      நீக்கு
  9. கோபுலு அவர்கள் ஓவியம் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோபுலு அழகு ஓவியம்..

      கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  10. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்...

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  11. நல்லதொரு தரிசனம். சிறப்பான தகவல்கள். பலதும் நான் அறியாதவை.

    வேளாங்கண்ணி - :(

    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்...

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  12. படங்கள் மிகச் சிறப்பாக இருக்கின்றன. அறியாத பல விவரங்களும் அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா.

    துளசிதரன்

    அண்ணா வேல் நெடுங்கண்ணி வேளாங்கண்ணி புதிதாய் அறிகிறேன்.

    பரமனின் வாக்குக்கு மறுப்பேது!! படங்கள் அட்டகாசம் அண்ணா

    கீதா

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..