செவ்வாய், ஏப்ரல் 02, 2019

ஏழூர் தரிசனம் 6

திருப்பூந்துருத்தியில் இருந்து திருநெய்த்தானத்திற்குப் புறப்பட்டோம்...

மக்கள் கூட்டம் எதிர் திசையில் வந்து கொண்டேயிருந்தது...

வழி நெடுக இருபுறமும் நிழற்பந்தல்களும் தண்ணீர்ப் பந்தல்களும் நிறைந்திருந்தன...

வழியில் கட்டளை மண்டகப்படி பந்தல்களும் அமைக்கப்பட்டு ஆட்டம் கொண்டாட்டம் என, குதுகலமாக இருந்தனர் மக்கள்...


கூட்டத்தைக் கடந்து - திருக்கண்டியூர், திருஐயாறு வழியாக திருநெய்த்தானத்தை அடைந்தோம்...


இன்றைக்கு இவ்வூர் தில்லைஸ்தானம் என்று வழங்கப்படுகின்றது...

கல்லணை செல்லும் சாலையின் தென்புறம் காவிரி நதி..
சாலையின் வடபுறம் ஸ்ரீ நெய்யாடியப்பர் திருக்கோயில்...


சப்த ஸ்தானத்தின் ஏழாவது திருக்கோயில்...

நந்தியம்பெருமானின் திருக்கல்யாணத்தின் போது
நெய் முதலான மங்கல திரவியங்களை திருநெய்த்தானத்தினர் கவனித்துக் கொண்டதாக ஐதீகம்...



காமதேனு வழிபட்ட திருத்தலம்...
அம்பிகை பாலாம்பிகை என வழங்கப்படுகின்றாள்...

கோயிலினுள்ளும் வெளியிலும் நிறைய மரங்கள் இருக்கின்றன..



ஆனாலும் திருக்கோயில் பராமரிப்பு இன்றி காணப்படுகின்றது..

பொருளாதார நிலை சரியில்லை போலிருக்கின்றது...
யாரையும் விசாரிப்பதற்கு சந்தர்ப்பம் ஏதுவாக இல்லை...


இரவில் வந்து சேரும் பல்லக்குகளை வரவேற்பதற்கு
திருநெய்த்தானத்தின் பல்லக்கு தயாராகிக் கொண்டிருந்தது...

இங்கும் மக்கள் கூட்டம் தான்...
ஆனாலும் முந்தைய கோயில்களைப் போல நெரிசல் இல்லை...

இரவுப் பொழுதில் ஆற்றில் வாணவேடிக்கை நிகழும்..

அந்த நேரத்தில் பெருங்கூட்டம் கூடலாம்...

ஸ்ரீ பாலாம்பிகை 
ஸ்ரீ நெய்யாடியப்பரையும் ஸ்ரீ பாலாம்பிகையையும் கண்ணாரத் தரிசனம் செய்து விட்டு அங்கிருந்து புறப்பட்டோம்....

ஸ்ரீ நெய்யாடியப்பர் 
முந்தி இருந்தாயும் நீயே என்றும்
முன்கயிலை மேவினாய் நீயே என்றும்
நந்திக் கருள்செய்தாய் நீயே என்றும்
நடமாடி நள்ளாறந் நீயே என்றும்
பந்திப் பரியாயும் நீயே என்றும்
பைஞ்ஞீலி மேவினாய் நீயே என்றும்
சிந்திப் பரியாயும் நீயே என்றும்
நின்ற நெய்த்தானா என்னெஞ்சு உளாயே..(6/43)
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

13 கருத்துகள்:

  1. குட்மார்னிங்.

    திருவிழா என்றாலே மக்கள் கூடும் கோலாகலம்தான். நீர்மோர் பானகம் எல்லாம் உண்டா?

    பதிலளிநீக்கு
  2. ஏழாவது திருத்தலம் திருநெய்த்தானம் பற்றி அறிந்துகொண்டேன்.

    நெய்யாடியப்பர் - பாலாம்பிகையை நானும் தரிசனம் செய்துகொண்டேன். குறைந்த அளவே பக்தர் கூட்டம் என்பது வருத்தம் தரும் செய்தி.

    பதிலளிநீக்கு
  3. என் நெஞ்சுள்ளும் நீ
    உறைய
    என்றும் அருள்புரிவாய்
    நெய்யாடியப்பா...

    பதிலளிநீக்கு
  4. திருத்தம் :

    எங்கள் நெஞ்சுள்ளும்
    என்றும் நீ
    உறைய
    அருள்புரிவாய் துணை நிற்பாய்
    நெய்யாடியப்பா...

    பதிலளிநீக்கு
  5. அழகான கோவில். இந்தக் கோவில்களை பார்க்க ஆவல். அடுத்த முறை தமிழகம் செல்லும்போது ஏழு கோவில்களையும் பார்க்க வேண்டும் எனத் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  6. கோவிலின் சிற்பங்களின் படங்களை எடுத்த விதம் அழகு.
    வழக்கம்போல வர்ணனை அருமை ஜி

    பதிலளிநீக்கு
  7. பாலை உண்மையாகவே பாலை தான். கண்ணையும் கருத்தையும் கவர்ந்தாள். தில்லைஸ்தானம் என்றாலே நினைவில் வருவது எழுத்தாளர் திரு தி.சா.ராஜூ அவர்கள் தான். கோயில்கள் தரிசனம் எல்லாம் நன்றாக நடந்திருக்கிறது. எல்லாம் அந்த ஈசன் அருள். என்றாலும் திருநெய்த்தானம் பராமரிப்பின்றி இருக்கிறது எனப் படிக்கையில் வைத்தீஸ்வரன் கோயில் நினைவும் வந்தது. அதுவும் பராமரிப்பின்றி எந்த நேரம் தெப்பக்குளத்தின் மேல் கூரை விழுமோ என பக்தர்கள் எல்லாம் பயப்படும்படி காட்சி அளிக்கிறது. மூங்கில் கம்புகளால் ஆங்காங்கே முட்டுக் கொடுத்திருக்கிறார்கள். ஆதீனம் இந்தக் கோயிலை இவ்வளவு மோசமாக வைத்திருப்பதை நினைத்தால் மனம் வேதனைப்படுகிறது.

    பதிலளிநீக்கு
  8. அருமையான தரிசனத்திற்கு மிகவும் நன்றி ...

    பதிலளிநீக்கு
  9. கோவில் பற்றிய விபரங்களும் புகைப்படங்களும் மிக அருமை!

    பதிலளிநீக்கு
  10. முந்தி இருந்தாயும் நீயே என்றும்
    முன்கயிலை மேவினாய் நீயே என்றும்
    நந்திக்கு அருள்செய்தாய் நீயே என்றும்
    நடமாடி நள்ளாறன் நீயே என்றும்
    பந்திப் பரியாயும் நீயே என்றும்
    பைஞ்ஞீலீ மேவினாய் நீயே என்றும்
    சிந்திப் பரியாயும் நீயே என்றும்
    நின்ற நெய்த் தானா என் நெஞ்சு ளாயே

    நெய்த்தானத்து எம்பெருமானை, சிந்தனையாலும் அணுக ஒண்ணாதவன், என்று சொல்லும் இந்தப் பாட்டு என் நெஞ்சம் கவர்ந்தது. நின்ற நெய்த்தானா (அந்தத் தலத்து இறையே) கயிலை , நள்ளாறு, பைஞ்ஞீலி ஆகிய தலங்களிலும் கூத்தனாகிய நீ விரும்பி உறைகின்றாய்.

    "நள்ளாறந் நீயே" என்று இருந்தது தவறு என்று தோன்றியதால்தான் பாடலைத் தேடி அர்த்தம் புரிந்துகொண்டேன்.

    பதிலளிநீக்கு
  11. ஸ்ரீராம் பாடலையும் பாடி ஸ்ரீ பாலாபிகையை நெய்யாடியப்பாவையும் வணங்கி போட்ட கருத்தை காணவில்லையே!
    அருமையான தரிசனம்.

    பதிலளிநீக்கு
  12. படங்கள் எல்லாம் அழகாக இருக்கின்றன. பாலாம்பிகை மிக அழகாக இருக்கிறாள்!நல்ல தரிசனம்.

    (காமதேனு வழிபட்டத் திருத்தலம்பராமரிப்பு இல்லாமல் இருப்பதுவேதனை கோபுகள் எல்லாம் அழகாக இருக்கின்றனவே - கீதா)

    நெய்யாடியப்பரையும் தரிசித்தோம்.

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..