இன்று தை அமாவாசை..
பூத்தவளே.. புவனம் பதினான்கையும் .. - என்று சுப்ரமணிய குருக்கள் போற்றிப் புகழ்ந்து அந்தாதி பாடியபோது அதைக்கேட்டு மகிழ்ந்து புன்னகையுடன் தனது தாடங்கத்தை வானில் வீசியருளிய நாள்..
அந்த அளவில் அம்பிகையின் திருத்தாடங்கம்
அமுதக் கதிர்களுடன் கூடிய சந்த்ரனாகக் கீழை வானில் தோன்றி நின்ற நாள்...
அள்ள அள்ளக் குறையாத அமுத சுரபி என்பார்கள்...
அந்த அமுத சுரபியினும் மேலானது அபிராமி அந்தாதி...
அந்தாதியினை யாத்த பட்டர் மேலும் இரு திருப்பதிகங்களால் அம்பிகையைப் போற்றிப் புகழ்ந்துள்ளார்..
அந்த அமுத சுரபியினும் மேலானது அபிராமி அந்தாதி...
அந்தாதியினை யாத்த பட்டர் மேலும் இரு திருப்பதிகங்களால் அம்பிகையைப் போற்றிப் புகழ்ந்துள்ளார்..
இந்த நன்னாளில்
நாம் சிந்திப்பதற்கும் வந்திப்பதற்குமாக
அந்தத் திருப்பதிகத்திலிருந்து திருப்பாடல் ஒன்று..
கலையாத கல்வியும் குறையாத வயது ஓர் கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும் கழுபிணி இலாத உடலும்
சலியாத மனமும் அன்பு அகலாத மனைவிஅயும் தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும் தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு துன்பம் இல்லாத வாழ்வும்
துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அரிதுயிலும் மாயனது தங்கையே ஆதிகடவூரின் வாழ்வே..
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி அருள்வாமி.. அபிராமியே!..
அன்னை அவளன்றி
ஆவது ஒன்றுமில்லை..
அம்பிகையைச் சரண்புகுவோம்...
அபிராமவல்லி நின் திருவடிகள் போற்றி .. போற்றி..
ஓம் சக்தி.. ஓம் சக்தி..
ஃஃஃ
மூத்தவர்களின், முன்னோர்களின் ஆசி நமக்குக் கிடைக்கட்டும்.
பதிலளிநீக்குஐயா நலமா
பதிலளிநீக்குகடந்த ஒரு மாத காலமாக, வலைக்க வர இயலா நிலை
இன்றுதான் வலைக்குத் திரும்பி இருக்கின்றேன்
நலம்தானே
அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...
பதிலளிநீக்குநலமாக இருக்கின்றேன்...
தங்களது நலத்திற்கும் வேண்டுகிறேன்...
சிறப்பான திருப்பாடல்...
பதிலளிநீக்குஅன்னையே உன் திருவடிகளே சரணம் ..
பதிலளிநீக்குஅன்னை அபிராமி சரணம்
பதிலளிநீக்குநேற்றிலிருந்தே அபிராமியின் நினைவாகவே இருந்தது. தை அமாவாசை பற்றியும், அபிராமி அந்தாதி பற்றியும் வீடியோ பதிவு போடலாமா என்று நினைத்தேன். உங்கள் மூலம் அபிராமி தரிசனம் கிட்டியது. நன்றி.
பதிலளிநீக்குஅபிராமியைக் கண்டேன். நிறைவான தரிசனம்.
பதிலளிநீக்குஅபிராமி என்றும் காப்பாள்.
பதிலளிநீக்குமாயவரத்தில் இருக்கும் போது அடிக்கடி திருக்கடையூர் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.
இப்போது உங்கள் தளத்தின் மூலம் வணங்கி வருகிறேன்.
வாழ்த்துக்கள்.
நிறைய எழுத்த் தோணுது. அந்த அபிராமிதான் காத்தருள வேண்டும்
பதிலளிநீக்குநான் தினமும் சொல்லும் ஒரே ஒரு அபிராமி அந்தாதி குறையாத கலையாத கல்வியும்...
பதிலளிநீக்குஅருமையான பதிவு அண்ணா நேற்றே பார்த்துவிட்டேன் ஆனால் மாலையில் எல்லாம் எனக்கு வர இயலவில்லை...அதான்
கீதா
நேற்றுப் பதிவு வந்திருக்குனே தெரியலை. அபிராமி பற்றித் தான் நேற்றுப் பல பதிவுகள் படிக்க நேர்ந்தது. உங்கள் பதிவின் மூலமும் அபிராமி தரிசனம் கிடைக்கப் பெற்றேன்.
பதிலளிநீக்குஅபிராமியின் தரிசனம் கிடைக்கப் பெற்றேன்.
பதிலளிநீக்குஇவ்வபிராமியை மனதில் கொண்டுதானே என் மகளுக்கு அபிராமி என்று பெயரும் வைத்தேன்..
துளசிதரன்