இன்று புரட்டாசி நான்காவது சனிக்கிழமை...
இன்றைய பதிவில்
ஸ்ரீ திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரிய திருமொழி
அதுவும்
ஸ்ரீ விளம்பி வருட புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமை..
புண்ணியங்கள் சேர்கின்ற நாள்...
சேர்த்துக் கொள்வதற்குமான நாள்!...
அதற்கான வழிகள் ஆயிரம் .. ஆயிரம்!...
அவரவர்க்கு இயன்ற வழிகளில் தேடிக் கொள்வோம்!..
அத்துடன் - இன்றைய நாளில்
நாடெங்கும் நல்லறம் தழைப்பதற்கும் வேண்டிக் கொள்வோமாக..
ஸ்ரீ திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரிய திருமொழி
முதற்பத்து - ஒன்பதாம் திருமொழி..
***
தாயேதந்தை என்றும் தாரமேகிளை மக்களென்றும்
நோயேபட்டு ஒழிந்தேன் நுன்னைக்காண்பதோர் ஆசையினால்
வேயேய் பூம்பொழில்சூழ் விரையார் திருவேங்கடவா
நாயேன் வந்தடைந்தேன் நல்கிஆளென்னைக் கொண்டருளே... (1028)
மானேய் கண்மடவார் மயக்கில்பட்டு மாநிலத்து
நானே நானாவித நரகம்புகும் பாவம்செய்தேன்
தேனேய் பூம்பொழில்சூழ் திருவேங்கட மாமலைஎன்
ஆனாய் வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே.. (1029)
கொன்றேன் பல்லுயிரைக் குறிக்கோள் ஒன்றிலாமையினால்
என்றேனும் இரந்தார்க்கு இனிதாக உரைத்தறியேன்
குன்றேய் மேகமதிர் குளிர்மாமலை வேங்கடவா
அன்றே வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே.. (1030)
குலந்தான் எத்தனையும் பிறந்தேயிறந்து எய்த்தொழிந்தேன்
நலந்தான் ஒன்றுமிலேன் நல்லதோரறம் செய்துமிலேன்
நிலந்தோய் நீள்முகில்சேர் நெறியார் திருவேங்கடவா
அலந்தேன் வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே.. (1031)
எப்பாவம் பலவுமிவையே செய்திளைத்து ஒழிந்தேன்
துப்பாநின் அடியேதொடர்ந் தேத்தவும் கிற்கின்றிலேன்
செப்பார் திண்வரைசூழ் திருவேங்கட மாமலையென்
அப்பா வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே.. (1032)
மண்ணாய் நீரெரிகால் மஞ்சுலாவும் ஆகாசமுமாம்
புண்ணாராக்கை தன்னுள் புலம்பித்தளர்ந்து எய்த்தொழிந்தேன்
விண்ணார் நீள்சிகர விரையார்த் திருவேங்கடவா
அண்ணா வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே.. (1033)
தெரியேன் பாலகனாய்ப் பலதீமைகள் செய்துமிட்டேன்
பெரியேன் ஆயினபின் பிறர்க்கே உழைத்தேழையானேன்
கரிசேர் பூம்பொழில்சூழ் கனமாமலை வேங்கடவா
அரியே வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே.. (1034)
தெரியேன் பாலகனாய்ப் பலதீமைகள் செய்துமிட்டேன்
பெரியேன் ஆயினபின் பிறர்க்கே உழைத்தேழையானேன்
கரிசேர் பூம்பொழில்சூழ் கனமாமலை வேங்கடவா
அரியே வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே.. (1034)
நோற்றேன் பல்பிறவி நுன்னைக்காண்பதோர் ஆசையினால்
ஏற்றேன் இப்பிறப்பே இடருற்றனன் எம்பெருமான்
கோல்தேன் பாய்ந்தொழுகும் குளிர்சோலை சூழ்வேங்கடவா
ஆற்றேன் வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே.. (1035)
மற்றேல் ஒன்றறியேன் மாயனே எங்கள்மாதவனே
கற்றேன் பாய்ந்தொழுகும் கமலச்சுனை வேங்கடவா
அற்றேன் வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே.. (1036)
கண்ணாயேழு லகுக்குயிராய வெங்கார் வண்ணனை
விண்ணோர்தாம் பரவும்பொழில் வேங்கட வேதியனை
திண்ணார் மாடங்கள்சூழ் திருமங்கையர் கோன்கலியன்
பண்ணார் பாடல்பத்தும் பயில்வார்க்கு இல்லைபாவங்களே.. (1037)
இந்த அளவில்
ஆழவார்கள் அருளிச் செய்த திருப்பாசுரங்களை
நல்லோர்தம் சிந்தையிலிருந்து இனிக்கும் வண்ணம்
பதிவினில் செய்வதற்கு அருளிநின்ற
திருவேங்கடத்து எம்மானின் திருவடித் தாமரைகளைத்
தலைமேற்கொள்கின்றேன்..
புரட்டாசி மாதத்தின் சனிக்கிழமைப் பதிவுகளைத்
தொடர்ந்து வாசித்து ஊக்கமளித்த
அன்பர்கள் அனைவருக்கும்
மனமார்ந்த நன்றியும் மகிழ்ச்சியும்!..
புரட்டாசி மாதத்தின் சனிக்கிழமைப் பதிவுகளைத்
தொடர்ந்து வாசித்து ஊக்கமளித்த
அன்பர்கள் அனைவருக்கும்
மனமார்ந்த நன்றியும் மகிழ்ச்சியும்!..
***
செப்பார்த் திண்வரைசூழ்
திருவேங்கட மாமலையென்
அப்பா வந்தடைந்தேன்
அடியேனை ஆட்கொண்டருளே..
ஸ்ரீ வேங்கடேச சரணம்..
சரணம் .. ப்ரபத்யே..
ஓம் ஹரி ஓம்..
சரணம் .. ப்ரபத்யே..
ஓம் ஹரி ஓம்..
ஃஃஃ
காலை வணக்கம். புரட்டாசி கடைசி சனிக்கிழமை. நல்லறம் பெருகட்டும்.
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம்..
நீக்குதங்களுக்கு நல்வரவு..
வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..
வாழ்க நலம்..
திருவேங்கடவன் திருவருளோடு இன்றைய நாளைத் துவங்க வசதி செய்து கொடுத்த தங்களுக்கு நன்றிகள்!
பதிலளிநீக்கு-இராய செல்லப்பா சென்னை
அன்பின் ஐயா..
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..
அனைவருக்கும் நலம் பெருகட்டும்...
பதிலளிநீக்குஅன்பின் தனபாலன்..
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..
அருமையான பாடலை முழுவதுமாகப் பதிவு செய்ததற்கு நன்றி. இது அனேகமாக வாரம் ஒரு முறையாவது நான் சேவிக்கும் பாசுரம். படங்களும் அருமையாகக் கொடுத்துள்ளீர்கள்.
பதிலளிநீக்குஇறைவா... உன் அருளை எனக்குத் தா, உன்னிடம் பக்தி செய்ய நான் உன்னைச் சரணடைந்தேன், நான் இதுவரை செய்தது எல்லாமே வீண் வேலை என்று ஆழ்வார் திருவேங்கடமுடையானைப் பார்த்து உள்ளம் உருகுகிறார். ஆழ்வார் செய்ததாகச் சொல்லும் வீண்வேலை எல்லாவற்றையும் அதனுக்கும் அதிகமாகவே நாம் வாழ்வை வீணடிக்கிறோம்.
இந்தப் பாசுரம், பெரியாழ்வார் திருமொழியில் துப்புடையாரை அடைவதெல்லாம் என்று துவங்கும் பாசுரம், ஒழிவில் காலமெல்லாம் என்ற நம்மாழ்வார் திருவாய்மொழிப் பாசுரம், திருமங்கை ஆழ்வாரின் 'வாடினேன் வாடி வருதினேன் மனத்தால்' என்ற பாசுரமும், 'வாணிலா முறுவல் சிறு நுதல் பெரும் தோள் மாதரார்' என்ற பாசுரமும், 'தாயே தந்தை என்றும்' என்ற பாசுரமும் தந்தையார் தினமும் சேவிப்பார் (எங்களுக்கு, பல்லாண்டு பல்லாண்டு, கண்ணி நுன் சிறுத்தாம்பு, அமலனாதிபிரான் அடியார்க்கு என்ற பாசுரங்கள் சொல்லிவிட்டுத்தான் மற்ற எந்தப் பாசுரமும் சொல்ல முடியும். அதனால் இவைகளும் by default உண்டு). அதை நினைவுகூர வைத்துவிட்டீர்கள்.
என் அப்பா, இந்தப் பாசுரம், இன்னும் 5-6 பாசுரங்கள் தினமும் சேவிப்பதைப் கேட்டுள்ளேன் (ஓய்வு பெற்ற பிறகு). அதனால்தான் நானும் இவற்றைக் கற்றுக்கொண்டேன். அதனால் பாசுரங்களின் எழுத்துப்பிழைகள் சட்டெனக் கண்ணில் பட்டது.
1. நோயே பட்டு ஒழிந்தேன் நுன்னைக் காண்பதோர் ஆசையினால்
2. தேனேய் பூம்பொழில் சூழ் திருவேங்கட மாமலை என்
1031 - மூன்றாம் வரி - நெடியார் திருவேங்கடவா - ஒற்று வரக்கூடாது
1032 - செப்பார் திண்வரை சூழ் - ஒற்று வரக்கூடாது
1033 - மூன்றாம் வரி - விரையார் திரு வேங்கடவா - ஒற்று வரக்கூடாது
1034 - கரிசேர் பூம்பொழில் சூழ் கனமாமலை வேங்கடவா - ஒற்று வரக்கூடாது. 'சூழ்' வரணும்
1035 - நோற்றேன் பல் பிறவி நுன்னைக் காண்பது ஓர் ஆசையினால் - உனை என்று வரக்கூடாது. நுன்னை
1037 - 3வது வரி - திருமங்கையர் கோன் கலியன். 4வது வரி - பண்ணார் பாடல் பத்தும் பயில்வார்க்கு - இரண்டு இடத்திலும் ஒற்று வரக்கூடாது.
அன்பின் நெ.த.,
நீக்குதேனேய் பூம்பொழில்சூழ் திருவேங்கட மலை - என்றதும்
கரிசேர் பூம்பொழில்சூழ் கனமமலை - என்றதும் - எழுத்துப் பிழைகள்..
முற்றிலும் என்னுடையவை...
இந்தத் திருப்பாசுரங்கள் வைஷ்ணவாதிகளால் நிர்வகிக்கப்படும்
திராவிடவேதம் - http://dravidaveda.org/ எனும் தளத்திலிருந்து பெறப்பட்டவை..
நுன்னை எனும் சொற்பிரயோகங்கள் புதியவை..
ஆனால் அங்கே அப்படியில்லாமல் உன்னை என்று இருக்கின்றது...
தாங்கள் குறித்துச் சொன்ன ஒற்றுகளும் அப்படியே உள்ளன...
இப்படியெல்லாம் ஒற்று வராதே என்று நான் நினைக்கவில்லை...
எல்லாமும் ஆச்சார்யப்பெருமக்களால் வகுத்தளிக்கப்பட்டவை..
அந்தத் தளங்களில் திருப்பாசுரங்களைத் தட்டச்சு செய்தோரால் இவ்வகையான ஒற்றுப் பிழைகள் நிகழ்ந்திருக்கக் கூடும்...
என் பிழைதனைச் சுட்டிக்காட்டிய தங்களுக்கு மனமார்ந்த நன்றி..
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி..
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் பாடிய திருமொழி பாடி திருவேங்கடவனை தரிசனம் செய்து விட்டேன் உங்கள் தளத்தில்.
பதிலளிநீக்குநன்றியும், மகிழ்ச்சியும்.
வாழ்க வளமுடன்.
தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..
நீக்குவாழ்க நலம்..
பற்றேல் ஒன்றும் இலேன் பாவமே செய்து பாவி ஆனேன்
பதிலளிநீக்குமற்றேல் ஒன்று அறியேன் மாயனே! எங்கள் மாதவனே!
கல் தேன் பாய்ந்து ஒழுகும் கமலச் சுனை வேங்கடவா!
அற்றேன் வந்து அடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே
திருவேங்கடமுடையானே, உன்னைத் தவிர எனக்கு வேறு பற்று ஒன்றும் இல்லை. பாவங்களையே செய்து பாவி ஆனேன். வேறு எதையும் நான் அறிய மாட்டேன். மாயனே! எங்கள் மாதவனே! மலையிலிருந்து தேன் பாய்ந்து ஒழுகும் (அப்படித் தித்திக்கின்ற) தாமரைச் சுனைகள் நிறைந்த திருப்பதியில் இருக்கும் வேங்கடவனே, வேறு ஒரு பற்றும் இல்லாதவனாக நீயே எனக்கு கதி என்று உன்னை வந்து அடைந்தேன். அடியேனை ஆட்கொண்டு அருள் புரியவேணும் என்று இறைஞ்சுகிறார் ஆழ்வார். நாம் எப்படி இறைவனை இறைஞ்சவேண்டும், நம் குற்றங்களையெல்லாம் ஒப்புக்கொண்டு என்பதை ஆழ்வார் மிகத் தெளிவாக இந்தப் பாசுரங்களில் சொல்லிக்கொடுக்கிறார்.
அன்பின் நெ.த.,
நீக்குநான் திருமலை தரிசனம் செய்து வந்ததைப் பதிவில் வழங்கியதை அறிவீர்கள்..
அப்போது
திருமங்கையாழ்வாரின் முதற்பத்து ஒன்பதாம் திருமொழியின் திருப்பாசுரங்களைத் தட்ட்ச்சு செய்யும் வேளையில் மனம் நடுங்கும்..
அப்பேர்ப்பட்ட ஆழ்வார் ஸ்வாமியே
இப்படி மனம் வருந்திப் பேசுகின்றார் - எனில்
நாமெல்லாம் எந்த மூலைக்கு?...
நம்மாலும் உரைக்க முடியுமோ இவ்வாறு!...
பெருமாளே.. காப்பாற்று.. காப்பாற்று.. - என்றுதான் மனம் அரற்றியது..
ஏதோ அவனருளால் தான்
அவனடிகளை வணங்கிக் கொண்டிருக்கின்றோம்... அதுதான் உண்மை!..
தங்களது விளக்கவுரை மனதை உருக்கின்றது...
தாங்கள் - தங்களது தந்தையாரிடமிருந்து பெற்ற ஞானத்தைக் கொண்டு
தஞ்சையம்பதியிலும் நெறிப்படுத்துவது நான் பெற்ற பேறு...
வாழ்க வையகம்.. வாழ்க வளமுடன்!..
பெருமாளைக் கண்டேன். அருமை.
பதிலளிநீக்குஅன்புடையீர்..
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
தரிசித்தேன் பதிவு அருமை ஜி.
பதிலளிநீக்குகண்டேன், கண்டேன், கண்ணுக்கினியன கண்டேன், விளக்கங்களும் படித்து மகிழ்ந்தேன்.
பதிலளிநீக்குபுரட்டாசி சனி மற்றும் அல்லாமல் எல்லா நாட்களிலும் எல்லோரும் இன்புற வாழ வேண்டும்
பதிலளிநீக்குஅழகிய பதிவு.
பதிலளிநீக்கு